ஆனந்தபுரத்து வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தபுரத்து வீடு
இயக்கம்நாகா
தயாரிப்புசங்கர்
கதைஆர்யன்
இசைரமேஷ் கிருஷ்ணா
நடிப்புநந்தா
சாயா சிங்
ஆர்யன்
கலைராணி
ஒளிப்பதிவுஅருண் மணி பாலன்
படத்தொகுப்புகிஷோர் தே
கலையகம்எஸ். பிக்சர்ஸ்
விநியோகம்எஸ் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 9, 2010 (2010-07-09)
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஆனந்தபுரத்து வீடு என்பது 2010ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதனை மர்மதேசம், விடாது கருப்பு, சிதம்பர ரகசியம் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய நாகா இயக்கியிருந்தார். நாகா, சாயா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் இயக்குநர் நாகா இயக்கிய முதல் திரைப்படமாகும். இயக்குநர் சங்கரின் எஸ் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்திற்கான கதையை நாகா, சரத் அரிதாசன், இந்திரா சௌந்தரராஜன் ஆகியோர் எழுதியிருந்தனர். இத்திரைப்படம் 2010 சூலை 9 அன்று வெளியானது.[1] இத்திரைப்படம் வணிக ரீதியாக சிறப்பான வெற்றியைப் பெற்றது.

நடிகர்கள்[தொகு]

  • நந்தா - பாலா
  • சாயா சிங் - ரேவதி (பாலாவின் மனைவி)
  • ஆர்யன் - ஆனந்த் பாலா
  • கிருஷ்ணா - ஜீவா
  • கலைராணி - மயிலம்மா
  • லாவண்யா - ராதிகா
  • மேக் வார்ன் பந்த் - சசிகாந்த்
  • கணேஷ் பாபு - ரத்தினம்
  • சாம்சன் டி வில்சன் - நட்வர்லால்
  • கார்த்திகேயன் - பேய் ஓட்டும் ஆசாரி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தபுரத்து_வீடு&oldid=3709836" இருந்து மீள்விக்கப்பட்டது