ஆடிப்பெருக்கு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆடிப்பெருக்கு
சுவரொட்டி
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகே. மதனகோபால்
கதைமக்களன்பன்
ஜாவர் சீதாராமன்
இசைஏ. எம். ராஜா
நடிப்புஜெமினி கணேசன்
பி. சரோஜாதேவி
தேவிகா
எம். வி. ராஜம்மா
ஒளிப்பதிவுதம்பு
படத்தொகுப்புகே. சங்கர்
கே, நீலகண்டன்
கலையகம்மதன் தியேட்டர்ஸ்
வெளியீடு2 ஆகஸ்ட் 1962
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆடிப்பெருக்கு (About this soundஒலிப்பு ) 1962 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பி. சரோஜாதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

திரைக்கதை[தொகு]

பத்மா தன் விதவைத் தாயார் பார்வதியுடனும் துறைமுகத்தில் வேலை பார்க்கும் தம்பியுடனும் வாழ்ந்து வருகிறாள். ஒரு கவிஞனான ராஜா இவர்களுக்கு தங்கியிருக்க இடம் கொடுத்திருக்கிறான். பத்மா ராஜாவை விரும்புகிறாள். பத்மாவின் தம்பி ஒரு விபத்தில் இறந்து விடுகிறான். ஒரு நல்லவரின் உதவியுடன் ராஜா வாய்ப்புகளைப் பெருக்க, சென்னை செல்கிறான். அங்கே ராமலிங்கம் என்ற ஒரு வெளியீட்டாளரைச் சந்திக்கிறான். அவர் மூலம் அவனது புத்தகங்கள் நன்றாக விற்பனையாகின்றன. வெளியீட்டாளரின் மகள் லதா, ராஜாவைக் காதலிக்கிறாள். இதனை அறிந்த பத்மா விரக்தியில் நோயாளியான ஒருவரை திருமணம் செய்கிறாள். அவரும் இறந்து விடுகிறார். ராஜாவுக்கும் லதாவுக்கும் திருமணம் நடக்க இருந்த நேரத்தில் பத்மா கல்யாண மண்டபத்துக்கு வருகிறாள். அவளைக் கண்ட ராஜா மனக்குழப்பமடைந்து கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறுகிறான். இதனைக் கண்டு லதாவின் தந்தை நோயாளியாகிறார். லதாவின் திருமணம் நடந்தால் தான் அவரது நோய் குணமாகும் என டாக்டர் சொல்கிறார். அவருக்கு நன்றிக்கடன் பட்ட ராஜா, லதாவைத் திருமணம் செய்கிறான். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை மயக்கமடைகிறது. குழந்தையின் உயிரைக் காப்பாற்றத் தன் உயிரைக் கொடுக்க முன்வருகிறாள் பத்மா. குழந்தை பிழைக்கிறது. பத்மா இறக்கிறாள்.[1]

நடிகர்கள்[தொகு]

[1]

தயாரிப்பு விபரம்[தொகு]

ஆடிப்பெருக்கு என்பது தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் நீருக்கு நன்றி செலுத்தும் இவ்விழாவைத் தலைப்பாகக் கொண்டுள்ள இத்திரைப்படத்தில் தலைப்புப் பாடலாக ஒலிக்கும் அன்னையின் அருளே வா என்ற பாடலைத் தவிர விழாவுக்கும் திரைப்படத்துக்கும் வேறு தொடர்பு இல்லை.
தற்போது மூடப்பட்டுவிட்ட மெஜஸ்டிக் கலையகத்தில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. காவேரியின் அழகு மிகு காட்சிகளை தம்பு சிறந்த முறையில் படமாக்கியுள்ளார்.[1]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்தில் ஒன்பது பாடல்கள் உள்ளன. ஏ. எம். ராஜா இசையமைத்துள்ளார். பாடல்களை கொத்தமங்கலம் சுப்பு, கே. டி. சந்தானம், கண்ணதாசன், சுரதா ஆகியோர் இயற்றியுள்ளனர்.[2][3]

ஆடிப்பெருக்கு பாடல்கள்
# பாடல்வரிகள்Artist(s) நீளம்
1. "அன்னையின் அருளே வா"  கொத்தமங்கலம் சுப்புசீர்காழி கோவிந்தராஜன் 03:32
2. "இதுதான் உலகமா"  கண்ணதாசன்பி. சுசீலா 03:24
3. "கண்ணாலே பேசும்"  கே. டி. சந்தானம்பி. சுசீலா 03:12
4. "கண்ணிழந்த மனிதர்"  கண்ணதாசன்ஏ. எம். ராஜா, பி. சுசீலா 03:12
5. "காவேரி ஓரம்"  கே. டி. சந்தானம்பி. சுசீலா 03:16
6. "பெண்கள் இல்லாத உலகத்திலே"  கொத்தமங்கலம் சுப்புஏ. எம். ராஜா, பி. சுசீலா 06:44
7. "புரியாது"  சுரதாபி. பி. ஸ்ரீநிவாஸ் 04:44
8. "தனிமையிலே இனிமை (டூயட்)"  கே. டி. சந்தானம்ஏ. எம். ராஜா, பி. சுசீலா 03:21
9. "தனிமையிலே இனிமை (ஆண்)"  கே. டி. சந்தானம்ஏ. எம். ராஜா 03:31
மொத்த நீளம்:
33:36

வரவேற்பு[தொகு]

திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை இத்திரைப்படம் பற்றிக் குறிப்பிடும் போது, தலைப்புடன் தொடர்பில்லாத அதே சமயம் எதிர்பார்க்கப்பட்ட முடிவைக் கொண்டிருந்த கதை என்பதாலும், கதையில் வரும் அதிகமான சாவுகளாலும், இந்த திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை எனக் கூறியுள்ளார். ஆயினும் ஜெமினி கணேசன், பி. சரோஜாதேவி இருவரின் நடிப்பும் குறிப்பிடத் தகுந்தது என்றும் கூறியுள்ளார்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Blast from the Past: Aadiperukku - 1962". தி இந்து. 7 மார்ச் 2015. Archived from the original on 26 அக்டோபர் 2016. https://web.archive.org/web/20161026152846/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/aadiperukku-1962/article6969432.ece. பார்த்த நாள்: 18 நவம்பர் 2016. 
  2. "Aadi Perukku (1962)". Music India Online. பார்த்த நாள் 21 October 2016.
  3. (in Tamil) Aadipperukku Song book. Broadway, Chennai: Kalaimagal Press, Vadakankulam. 

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆடிப்பெருக்கு (திரைப்படம்)