உள்ளடக்கத்துக்குச் செல்

சீர்காழி கோவிந்தராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர்
சீர்காழி கோவிந்தராஜன்
பிறப்பு(1933-01-19)சனவரி 19, 1933
சீர்காழி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ் நாடு.
இறப்புமார்ச்சு 24, 1988(1988-03-24) (அகவை 55)
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி,
சென்னை இசைக்கல்லூரி
பணிவாய்ப்பாட்டு
செயற்பாட்டுக்
காலம்
1952-1988
அறியப்படுவதுஇசை
பெற்றோர்சிவசிதம்பரம்
அவையாம்பாள்

சீர்காழி எஸ். கோவிந்தராஜன் (Sirkazhi Govindarajan, 19 சனவரி 1933 – 24 மார்ச்சு 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சீர்காழி பகுதியில் பிறந்தார். இளமையிலேயே இசையில் ஆர்வம் ஏற்பட்டது. கர்நாடக இசை மரபில் பயிற்சி பெற்றார். தமிழ் மொழியில் அமைந்த இசைப்பாடல்களை மக்களிடம் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது. தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கியது.

சீர்காழி கோவிந்தராஜன் தமிழிசை இயக்கத்துடன் நெருக்கமாக தொடர்புடையவர். தமிழ் மொழியில் உள்ள தேவாரம், திருவாசகம் மற்றும் பிற பக்தி இலக்கியங்களை இசையுடன் பாடி பொதுமக்களிடம் கொண்டு சென்றார். தமிழிசை பாடல்கள் தனித்த அடையாளம் பெற உதவியவர் என்ற வகையில் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார். தமிழ் மொழியின் இசைச்சிறப்பை வெளிப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.

திரைப்பட இசையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தார். தமிழ் திரைப்படங்களில் பக்தி பாடல்களைப் பாடினார். குரலின் தெளிவு மற்றும் சொற்களின் உச்சரிப்பு காரணமாக பாடல்கள் எளிதில் புரியும் வகையில் அமைந்தன. இதனால் பொதுமக்களிடையே பரவலான புகழ் பெற்றார்.

சீர்காழி கோவிந்தராஜன் இசை நிகழ்ச்சிகள் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளில் அறிமுகமானார். வானொலி மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் தமிழிசை பரவ உதவினார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள் பிறப்பிடம்: சீர்காழி , தஞ்சாவூர் மாவட்டம். ஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:

  • தியானமே எனது - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
  • வதனமே சந்திர பிம்பமோ - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
  • செந்தாமரை முகமே - பி. யூ. சின்னப்பா பாடிய பாடல்
  • கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்

இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி

இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி

இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்

பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம்

திரைப்படப் பாடகர்

[தொகு]

திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953-இல் பொன்வயல் என்ற படத்துக்காக 'சிரிப்புத் தான் வருகுதைய்யா' எனத்தொடங்கும் பாடல், ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

திரைப்படத்துக்காக பாடிய பாடல்கள்

[தொகு]

(பட்டியல் முழுமையானதன்று)

எண் பாடல் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
1 பட்டணந்தான் போகலாமடி ... எம்.வேணு எங்க வீட்டு மகாலெட்சுமி
2 அமுதும் தேனும் எதற்கு ... கே. வி. மகாதேவன் தை பிறந்தால் வழி பிறக்கும்
3 மாட்டுக்கார வேலா ... கே. வி. மகாதேவன் வண்ணக்கிளி
4 வில் எங்கே கணை இங்கே ... எம். எஸ். விஸ்வநாதன், இராமமூர்த்தி மாலையிட்ட மங்கை
5 வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே ... ஜி.இராமநாதன் கோமதியின் காதலன்
6 கொங்கு நாட்டுச் செங்கரும்பே ... மாயவநாதன் ஜி. இராமநாதன் கோமதியின் காதலன்
7 மலையே என் நிலையே ... ஜி. இராமநாதன் வணங்காமுடி
8 ஜக்கம்மா ... ஜி.இராமநாதன் வீரபாண்டிய கட்டபொம்மன்
9 பட்டணந்தான் போகலாமடி ... எம்.வேணு எங்க வீட்டு மகாலெட்சுமி
10 ஒற்றுமையாய் வாழ்வதாலே ... கே. வி. மகாதேவன் பாகப்பிரிவினை
11 எங்கிருந்தோ வந்தான் ... பாரதியார் கே. வி. மகாதேவன் படிக்காத மேதை
12 ஓடம் நதியினிலே ... காத்திருந்த கண்கள்
13 கோட்டையிலே ஒரு ஆலமரம் ... முரடன் முத்து
14 நல்ல மனைவி நல்ல பிள்ளை ... நம்ம வீட்டு லட்சுமி
15 பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா ... அக்கா தங்கை
16 கண்ணான கண்மணிக்கு அவசரமா ... ஆலயமணி
17 கண்ணன் வந்தான் ... ராமு
18 தேவன் கோவில் மணியோசை கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மணி ஓசை

பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில

[தொகு]
  • பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
  • மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை
  • காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை
  • ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு)

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்

[தொகு]

சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.

  • நிலவோடு வான்முகில், இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
  • எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)
  • உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)
  • வண்டு ஆடாத சோலையில் , ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
  • சிரிப்பது சிலபேர், யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)
  • ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்) - ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
  • யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)
  • ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)

பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்

[தொகு]
  • கண்ணன் வந்தான் (படம்: ராமு) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
  • தேவன் வந்தான் (படம்: குழந்தைக்காக) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்)
  • வெள்ளிப் பனிமலையின் (படம்: கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர்: திருச்சி லோகநாதன்)
  • இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
  • ஆயிரம் கரங்கள் நீட்டி (படம்: கர்ணன்) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  2. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024. 

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீர்காழி_கோவிந்தராஜன்&oldid=4445867" இலிருந்து மீள்விக்கப்பட்டது