போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

போர் என்பது, ஒரு பன்னாட்டுத் தொடர்புகள் சார்ந்ததும், நாடுகளின் படைகளிடையே நடைபெறும் ஒழுங்கமைந்த வன்முறைகளால் வெளிப்படுவதுமான பிணக்கு ஆகும். கார்ல் வொன் குளோசவிட்ஸ் என்பார் தனது போர் தொடர்பில் (On War) என்னும் தனது நூலில், போர் என்பது "வேறு வழிமுறைகளில் நடக்கும் தொடர்ச்சியான அரசியல் ஊடுதொடர்பு" எனக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுப் போர் என்னும்போது, அது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குள் நிலவும் பிணக்கு ஆகும். இது ஆட்சி குறித்து நிகழ்வது. இறைமை குறித்தது அல்ல. இதன் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலான படைத்துறைப் பங்களிப்புக் காரணமாகப் போர் என்பது கொலை அல்லது இனப்படுகொலை என்றாகிறது.

போர் என்பது ஒரு பண்பாட்டுக் கூறும் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட வகை அமைப்பினாலோ, சமூகத்தினாலோ மட்டும் நடத்தப்படுவது அல்ல. ஜான் கீகன் என்பவர், தனது போர்களின் வரலாறு (History Of Warfare) என்னும் நூலில், போர் என்பது, ஒரு உலகளாவிய தோற்றப்பாடு என்றும், அதை நடத்தும் சமூகத்தைப் பொறுத்து, அதன் வடிவமும், வீச்செல்லையும் வரையறுக்கப் படுகின்றன என்றும் கூறுகிறார். போர் செய்தல் என்பது ஒரு தொடராக வருகிறது. வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே தொடங்கிவிட்ட இனக்குழுக்கள் இடையேயான போரில் தொடங்கி, நகர அரசுகள், நாடுகள், பேரரசுகள் என்பவற்றுக்கு இடையிலான போர்கள் வரை இது இடம் பெற்று வருகிறது.

ஒரு குழுப் போராளிகளையும் அவர்களுடைய பின்னணித் துணைகளையும், அவை நிலத்தில் செயல்படும்போது தரைப்படை என்றும், கடலில் செயல்படும்போது கடற்படை என்றும், வானில் செயல்படும்போது வான்படை என்றும் அழைக்கப்படுகின்றன. போர் ஒரே நேரத்தில் பல அரங்குகளில் நடைபெறலாம், ஒன்றுக்கு மேற்பட்ட படை நடவடிக்கைகள் தொடர்ச்சியாகவும் இடம்பெறலாம். ஒரு படை நடவடிக்கை என்பது சண்டை செய்தல் மட்டுமல்ல. இது, உளவறிதல், படைகளை நகர்த்தல், வழங்கல்கள், பரப்புரை போன்ற பல கூறுகளைக் கொண்டிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்&oldid=1791992" இருந்து மீள்விக்கப்பட்டது