பரப்புரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரப்புரை அல்லது பிரச்சாரம் (Propaganda) என்பது ஒரு கருத்தை அதைப்பற்றி அறியாதவர்களுக்காக, விரித்தும் தொகுத்தும் அவர்களும் பற்றுக் கொண்டு ஏற்குமாறு கருத்தைப் பரப்பும் ஒரு செயல்முறை ஆகும். சில நேரங்களில் இவை ஓர் உள்நோக்குடன் ஒரு சார்புப் பார்வையை நிலைநிறுத்த முயலும் கருத்து பரப்பு முறையாகவும் இருக்கும். பரப்புரை எதிர், மாற்று கருத்து உண்மைகளை மறைத்தோ புறக்கணித்தோ கூறுவதும் உண்டு. எதிர், மாற்று கருத்துக்களை கண்டு கொண்டாலும், அவற்றின் முழு வலுவை முன் வைக்காமல், தாங்கள் கொண்ட கருத்துக்கு வலுவூட்டுவது.

பரப்புரை தன் கருத்தை வலுவாகக் காட்டி, நல்லதாகக் காட்டுவது. மிகவும் ஒருசார்புப் பரப்புரைகள் பிழையான கருத்தைக்கூட முன்னிறுத்த முயலும். கேட்பவர் அலசி தன்னால் ஒரு முடிவை எடுக்க விடாமல் தங்களுடைய முடிவே சரி என்ற வகையில் வாதிடும்.

பரப்புரைக்கு ஆளாவோரில் ஒரு சிலரால் உண்மையைப் பகுத்துணர முடிந்தாலும் பெரும்பாலானோர் பரப்புரை எவ்வாறு தங்களை மாற்றியமைக்கின்றது என்பதை உணர்வதில்லை.[1]

ஆங்கில வார்த்தையில் மூலம்[தொகு]

இதன் சமானமான ஆங்கில வார்த்தை 1622ஆம் ஆண்டு போப் பதினைந்தாம் கிரிகோரியால் உருவாக்கப்பட்ட கத்தோலிக்க சர்ச்சின் நிர்வாக அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம் கத்தோலிக்க நம்பிக்கையை கத்தோலிக்க நம்பிக்கையில்லாத நாடுகளில் பரப்புவது.[1][2] 1790களிலிருந்து மற்ற அமைப்புகளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படலாயிற்று.

பரப்புரை உத்திகள்[தொகு]

இன்றைய காலத்தில் பரப்புரை உத்திகள் பல்வேறு வகைகளில் கையாளப்படுகிறது . பிரச்சாரம் , அறிக்கை , துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் ,செய்தித்தாள் ,திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் சுவரொட்டிகள் ஆகியவை அடங்கும். எதிர்ப்பு பிரச்சாரம், சமய பிரச்சாரம் , விளம்பரப்பிரச்சரம், அரசியல் பிரச்சாரம் போன்றவைகள் . தமது கருத்துக்களை பிரச்சாரத்தின் வாயிலாக மக்களிடம் சென்று சேர்க்கிறது . செய்தி அறிக்கைகள், அரசாங்க அறிக்கைகள். போன்றவைகளும் பரப்புரைகளில் முக்கியத்துவம் பெறுகிறது . அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் , கொள்கைகள் , அரசாங்க அறிவிப்புகள் போன்றவைகள் அரசாங்க அறிக்கைகளில் இடம்பெறுகிறது . இதன் மூலம் மக்களிடம் விழிப்புணர்வையும் செய்தியையும் கொண்டுசேர்க்கிறது . பரப்புரைகளை பொறுத்தவரை தகவல் , தகவல் பெறுபவரிடம் சென்று சேரும்வரை தொடர்ந்து பரப்புரை நடைபெறுகிறது .[3] சமூக உளவியல் ஆராய்ச்சி அடிப்படையில் உத்திகள் பிரச்சாரத்தை உருவாக்க பயன்படுகிறது. இந்த உத்திகள் பல தர்க்கரீதியான வீழ்ச்சியின்கீழ் காணப்படுகின்றன, ஏனென்றால் பரப்புரையாளர்கள் வாதங்களைப் பயன்படுத்துகின்றனர், சில சமயங்களில் அவை உண்மையை உறுதிபடுத்தும். சில நேரங்களில் உண்மையை உறுதிப்படுத்தாமலும் போகலாம் . பிரச்சார செய்திகளை அனுப்பும் வழிமுறையை பகுப்பாய்வு செய்வதற்கு சில சமயங்களில் அதிக நேரம் இதில் செலவழிக்க வேண்டியுள்ளது . தகவல் பரவலாக்கம் என்பது பிரச்சார தூண்டுதல்களாக மாறும் போது மட்டுமே அது பிரச்சாரமாக மாறும் .

உண்மையும் பரப்புரையும்[தொகு]

உண்மை எத் திசையிலும், எந் நிலைகளிலும், தளத்திலும் உண்மையை நாடி நிற்கும். உண்மையை வெளிப்படுத்த முனைபவர்கள் எதிர் அல்லது பிற கருத்துகளை சுட்டி அவற்றின் தவறுகளை, குறைபாடுகளை விளக்கி தம் நிலை விளக்க முனைவர். உண்மையை கூறுவோர் தம் கருத்தை வரையறுத்து, துல்லியமாக, விபரமாக, தெளிவாக, நேரிடையாக, தகுந்த எடுத்துக்காட்டல்களுடன் சொல்வார்கள். கேட்பவர் கருத்தை விளங்கி முடிவு எடுக்க உதவ முனைவார்கள் அன்றி, மூளைச்சலவை செய்யவோ அல்லது முடிவுகளை கட்டாயப்படுத்தவோ அல்லது சிந்தனையற்ற செயல்பாடுகளை தூண்டவோ முனையமாட்டார்கள்.

பரப்புரையை மேற்கொள்ளுபவர்கள் பரப்புரையின் உட்கருத்தை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. பரப்புரையின் தந்திரங்களை உபயோகித்து மக்களின் கருத்துக்களை அல்லது செயல்பாடுகளை மாற்றியமைப்பது, நெறிப்படுத்துவது, அல்லது கட்டுப்படுத்துவதே அவர்களின் குறிக்கோள்.

பரப்புரை வகைகள்[தொகு]

பரப்புரை என்பது இன்றைய காலத்தில் பல வகைகளில் செய்யப்படுகிறது .

1. ஊடக பரப்புரை

மக்களிடம் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துவது ஊடகங்கள் தான் . இந்த ஊடகங்கள் மூலம் பரப்புரை செய்யும் போது மக்களிடம் கருத்துக்கள் எளிதில் சேர்க்கிறது . செய்தித்தாள் , துண்டு பிரசுரங்கள் , புத்தகங்கள் , அறிக்கைகள் , சுவரொட்டிகள் , தொலைக்காட்சி , வானொலி , திரைப்படம் , விளம்பர பேனர்கள் , விளம்பரங்கள் நாடகங்கள் , போன்றவை . இவைகள் மக்களின் நேரடி தொடர்பில் இருப்பதால் , கவர்ச்சியை ஏற்படுத்தி மக்களிடம் கருத்துக்களை திணிக்கிறது .

2.சமய சொற்பொழிவுகள் மூலம் பரப்புரை

பரப்புரையின் ஆங்கில சொல்லான புரப்பகான்டா (propaganda) கத்தோலிக்க மதத்தினர் தங்கள் மதத்தை பரப்ப மேற்கொண்ட செயற்பாடுகளில் இருந்தே தோற்றம் பெற்றது. எனவே பரப்புரை சமய நிறுவனங்களின் ஒரு கருவியாக பல காலமாக செயல்படுகின்றது என்பது தெரிகின்றது, "எமது கோயிலில் அம்பாள் அற்புதம் செய்கின்றாள்", "ஆயிரம் கோடி அரிச்சினை செய்து விமோசனம் அடையுங்கள்" போன்றவை சமய பரப்புரைகள். ஒருவரின் சாமியார் அல்லது குரு என்ற புனிதப்படுத்தலுக்காக அவரின் பிறப்பு, பெற்றோர் கண்டுருக்ககூடிய கனவுகள், இயற்கையில் நடந்தேறிய சில சம்பவங்கள் எப்படி புனையப்பட்டு பிம்பமாக்கப் படுகின்றது என்பது சமூகவியலாளர்களால் ஆராயப்பட்ட ஒன்று.[1]

தங்களது சமயங்களை முன்னிறுத்தி கோயில்களிலும் திருவிழாக்களிலும் இன்றைய காலத்தில் சமய சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன . மேலும் இது பஜனை வடிவிலும் நிகழ்கிறது . இதன் மூலம் மக்கள் தங்களது சமயத்தில் சேரவேண்டும் என்ற உணர்வினை ஊட்டுகின்ற வகையில் சொற்பொழிவுகள் இடம்பெறுகின்றன . மக்கள் மனதை மாற்றுகின்ற முயற்சிக்கு சொற்பொழிவு பரப்புரை காரணமாக அமைகின்றன.

3.இணையதள பரப்புரை

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக படித்த மக்களிடத்தில் இணையதள பயன்பாடு என்பது அதிக அளவில் இன்று பயன்படுத்தப்படுகிறது . இணையதளம் மூலம் பேஸ் புக் , டுவிட்டர் , ஈமெயில் , போன்றவற்றிலும் மொபைல் போன் மூலமாக வாட்ஸ் அப்பிலும் செய்திகள் பரப்பப் படுகின்றன . குறிப்பாக இன்றைய இளைஞர்கள் வாட்ஸ் அப் பேஸ் புக் , டுவிட்டர் போன்றவற்றில் தான் கவனம் செலுத்துகின்றனர் . தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதற்கு இது தான் முக்கிய காரணமாக இருந்தது .

பரப்புரையின் பயன்கள்[தொகு]

பரப்புரையின் முக்கிய நோக்கமும் பயனும் செய்தியினை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் . அதில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் முதன்மை பயனாகும் .

உதாரணம்

1. நுகர்வோர் விழிப்புணர்வு பரப்புரை

மாவட்ட உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பரப்புரை வாகனம் 3 நாட்கள் 9 தாலுகாக்களில் பயணம் செய்கிறது. பொருட்கள் வாங்கும் நுகர்வோர் அதில் உள்ள தரம், பொருட்கள் காலாவதி ஆகும் தினம், அடக்க விலை போன்றவற்றை பார்த்து வாங்குவது உட்பட பல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வாகனம் மூலம் பரப்புரை செய்யப்படுகிறது .

2.பற்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை

66 விழுக்காட்டு குழந்தைகள் பற்குழியினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள் . இதனால் சிறிய வயதிலேயே பற்கள் இழப்பு அதிகமாகி இருப்பதாக, பற்கள் பாதுகாப்பு பற்றிய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு காரணம் மக்களிடையே பற்கள் பாதுகாப்பு பற்றிய விழப்புணர்வு இல்லாததுதான். அதிகமான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சுகாதார துறையினர் பரப்புரை செய்கின்றனர் .

இது போல் மக்கள் விழிப்போடு இருக்கவேண்டிய பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் மக்களின் அறியாமை இருளை அகற்றும் பணியினை செய்து மக்களுக்கு நற் பலன்களை வழங்குகின்றன .

அரசியலில் பரப்புரை[தொகு]

அரசியலில் பரப்புரை மிகவும் திட்டமிட்ட, நுணுக்கமான, விஞ்ஞான முறையில் முதலாம் உலக யுத்தம் முதலே பரவலாக உபயோகிக்கப்படுகின்றது. அமெரிக்கவின் சார்பில் வோல்ரர் லிப்மன் (Walter Lippman), எட்வார்ட் பேர்னேஸ் (Edward Bernays) ஆகியோரால் யேர்மன் அரசுக்கெதிராக உபயோகிக்கப்பட்ட உத்திகளே பின்னர் விரிவடைந்த உளவியல் யுத்த தந்திரங்களுக்கும், வியாபார விளம்பர உத்திகளுக்கும், "மக்கள் தொடர்புதுறை" செயல்பாடுகளுக்கு அடித்தளம் இட்டது [2]. போர்க் காலங்களில் பரப்புரை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இணையத்தில் அரசியல் விளம்பரம் என்பது நன்கு விரிவடைந்த பெரும் தொழிற்துறையாக மாறியிருக்கிறது. பெரும்பாலான மக்கள் தமக்குத் தேவையான தகவல்களை ஒரு சில வலைத்தளங்களிலிருந்தே பெறுகிறார்கள். அவையும் பெரும்பாலும் ஓரிரு சமூக வலைத்தளங்களாகவே இருக்கின்றன. மக்களின் தனிப்பட்ட தரவுகள் அடங்கிய பெரும் சேகரங்களை ஆராய்ந்து தேவையான தகவல்களைப் பெறும்படியாக மென்பொருட் படிமுறைத்தீர்வுகள் (Algorithms) சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றின் காரணமாக அரசியற் பரப்புரை என்பது கூட்டங்கள் நடத்துவது, உரையாற்றுவது எனும் பழைய வடிவங்களிலிருந்து பெரிதும் மாறிவிட்டது. தற்போது அரசியற் பரப்புரை என்பது தனி மனிதர்களைக் குறிவைத்து விளம்பரங்களை அனுப்புவது என்றாகிவிட்டது.[4]

உதாரணம்[தொகு]

ஈராக் மீதான அமெரிக்காவின் போர், எவ்வாறு மக்களின் நாட்டுப்பற்றையும் தீவிரவாதத்திற்கெதிரான கோபத்தையும் தவறான பரப்புரை மூலம் தவறாக வழிநடத்தமுடியும் என்பதற்கு ஓர் உதாரணம்.[5]

ஒரே நேரத்தில் இரு இடங்களில் பரப்புரை செய்தல்[தொகு]

ஹாலோகிராம் எனும் தொழில்நுட்ப உதவியுடன் அரசியல் தலைவர் ஒருவர் ஒரேநேரத்தில் இருவேறு இடங்களில் பரப்புரை மேற்கொள்ளலாம். தொழில்நுட்ப வளர்ச்சி ,அதி வேகமாக வளர்ச்சி கண்டுவரும் இந்தசூழலில் அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த மெலஞ்சியோன் என்பவர் ஹோலோகிராம் எனும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பாரிஸ் மற்றும் லியோன் ஆகிய இரு இடங்களில் ஒரே நேரத்தில் பரப்புரை மேற்கொண்டார். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் அரசியல் தலைவர் மெலஞ்சியோன் அல்ல. துருக்கியின் அதிபராக உள்ள தயீப் எர்டோகன், இதே ஹாலோகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியிருந்தார். ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் லேசர் கற்றைகள், ஒரு பொருளை முப்பரிமாண வடிவில் எதிரொலிக்க வல்லவை. இதன்மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்கள் அந்த பொருளின் முப்பரிமாண தோற்றத்தை உருவாக்க இயலும். எந்திரன் படத்தில் விஞ்ஞானியான ரஜினி, சிட்டி ரோபோவுடன் இதேபோன்ற ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் உரையாடும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது .[6]

விளம்பரங்களில்[தொகு]

விளம்பரங்களில் பரப்புரை என்பது மிகச் சுலபமாகக் காணக்கிடைக்கின்றது. விளம்பரங்கள் எவ்வாறு நமக்குத் தேவையில்லா பொருளைக்கூட விருப்பத்தின் காரணமாக வாங்க வைக்கின்றது என்பது பரப்புரையின் விளைவின் ஒரு அம்சமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.[7]

உதாரணங்கள்[தொகு]

  • பிரபலமானவர்களைக் கொண்டு ஒரு பொருள் / கருத்து தொடர்பான கருத்துக்களை அவர்கள் கூறுவதுபோல் கூறச்செய்தல். எ-கா -(பெப்சி/"Pay Every Penny for Save Israel" விளம்பரங்கள்)[5]
  • ஒரு பொருளை மற்றொன்றுடன் சில கருத்துக்களையும்/உண்மைகளையும் தவிர்த்துவிட்டு ஒப்பிடுவதன் மூலம் தவறான மனப்பதிவை ஏற்படுத்துவது. (உதாரணம் : ஆப்பிள் கம்ப்யூட்டரை விண்டோசுடன் ஒப்பிடுவது.)[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரப்புரை&oldid=2718582" இலிருந்து மீள்விக்கப்பட்டது