உள்நாட்டுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

Ramses II at Kadesh.jpgGustavus Adolphus at the Battle at Breitenfeld.jpgM1A1 abrams front.jpg

போர்
படைத்துறை வரலாறு
காலகட்டம்

வரலாற்றுக்கு முன்
தொல்பழங்காலம் · மத்தியகாலம்
வெடிமருந்து · தொழில்சார்
நவீனம்

போர்வெளிகள்

வான் · தகவல் · நிலம் · கடல்
விண்வெளி

போர்க்கருவிகள்

கவசம் · கனரக ஆயுதம்
உயிரியல் · காலாட்படை
வேதியியல் · மின்னணு · Infantry
அணு · உளவியல்

உத்திகள்

உரசல் · கரந்துறை · Maneuver
முற்றுகை · முழுப்போர் · Trench

உத்திகள்

பொருளியல் · Grand · Operational

ஒழுங்கமைப்பு

வியூகம் · தரநிலை · பிரிவுகள்

Logistics

தளவாடங்கள் · பொருட்கள்
வழங்கற்பாதை

Lists

சண்டைகள் · தளபதிகள்
நடவடிக்கைகள் · முற்றுகைகள்
கோட்பாட்டாளர் · போர்கள்
போர்க் குற்றங்கள் · ஆயுதங்கள்
எழுத்தாளர்

உள்நாட்டுப் போர் என்பது ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரே பண்பாடு, ஒரே சமூகம் அல்லது வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இரு பகுதியினரிடையே, அரசியல் கட்டுப்பாட்டுக்காக நிகழும் போர் ஆகும். பெரிய அளவில் சமுதாய மீளமைப்பை ஏற்படுத்தக்கூடிய சில உள்நாட்டுப் போர்கள் புரட்சிகள் எனப்படுகின்றன. வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் ஒழுங்கமைக்கப்பட்ட படைகளைக் கொண்டு மரபுவழியாகப் போர்கள் இடம்பெறுமானால் கிளர்ச்சிகளும் உள்நாட்டுப் போர்களாகக் கொள்ளப்படுவது உண்டு. எனினும் சில வரலாற்றாளர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவினரிடையே அல்லது ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதிகளிடையே நீடித்து நிகழும் வன்முறையை, அது மரபுவழியாக அல்லது வேறுவிதமாக அமையினும்கூட உள்நாட்டுப் போராகக் கருதலாம் என்கின்றனர்.


உள்நாட்டுப் போர், புரட்சி அல்லது வேறு ஏதாவது பெயர்களுக்கு இடையிலான வேறுபாடு எழுந்தமானமானவை ஆகும். உண்மையில் இவ்வேறுபாடுகள் பயன்பாட்டின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. எனினும், உள்நாட்டுப் போர், புரட்சி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு அடையாளம் காணத் தக்கவையாகவே உள்ளன. 1640 இல் இங்கிலாந்தில் முதலாவது சார்லசின் முடியாட்சியைத் தற்காலிகமாகத் தூக்கியெறிந்த கிளர்ச்சி ஆங்கிலேய உள்நாட்டுப் போர் எனவே குறிப்பிடப்படுகின்றது. இருந்தாலும், சில மாக்சிய வரலாற்றாளர்கள் இதனை ஆங்கிலேயப் புரட்சி என்கின்றனர்.


அமெரிக்காவில், பிரித்தானியரின் குடியேற்றப் பகுதிகளில் 1770 களில், ஒழுங்கமைக்கப்பட்ட படைகளின் சண்டைகளுடன் இடம்பெற்ற வெற்றிகரமான கிளர்ச்சி அமெரிக்கப் புரட்சி என்று அழைக்கப்படுகிறது. அதே சமயம், 1860 ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களின் கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு எதிராக நடத்திய தோல்வியடைந்த மரபுவழிப் போர் அமெரிக்க உள்நாட்டுப் போர் எனப்படுகின்றது. எனினும் அப்போர் நடந்த காலத்தில் கூட்டமைப்பினர் அப் போரை இரண்டாவது அமெரிக்கப் புரட்சி அல்லது அதனை ஒத்த பெயர்களால் அழைத்தனர். இப்போர் வெற்றி பெற்றிருப்பின் அது புரட்சி என்றோ, விடுதலைப் போர் என்றோ அழைக்கப்பட்டிருக்கக் கூடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்நாட்டுப்_போர்&oldid=1529638" இருந்து மீள்விக்கப்பட்டது