உள்ளடக்கத்துக்குச் செல்

தேய்மானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓர் உற்பத்தி நிறுவனத்தில் பலவிதமான இயந்திரங்கள் பயன்படுத்த்தப்பட்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இயந்திரங்களின் உற்பத்திதிறன், நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். இயந்திரங்கள், தேய்வடைவதன் காரணமாகத் தங்களின் உற்பத்திதிறனை இழந்து விடுவதையே நாம் தேய்மானம் என்கிறோம். பயன்பாட்டின் காரணமாக இயந்திரங்கள் தங்களின் உற்பத்தித்திறனை இழத்தல், உற்பத்தியில் இந்த இயந்திரங்களைப் பயன் படுத்த்த் தேவை இல்லாமல் போய்விடுதல் மற்றும் வாங்கி நீண்ட காலம் ஆகி விடுதல் போன்ற காரணங்களால் தேய்மானம் ஏற்படுவதாகக் கணக்கியல் கொள்கை கூறுகிறது.

ஒரு கால கட்டத்தில் - அதாவது இந்த இயந்திரங்களின் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் முடிவடையும்போது- நாம் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு புது இயந்திரங்களை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.இத்ற்காக நாம் பெரும் தொகையைச் செலவு செய்ய வேண்டி இருக்கும்.திடீரென இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து திரட்டுவது? இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைக்கிறோம்.இயந்திரத்தை மாற்ற வேண்டிய நேரத்தில் இந்தத் தொகை நமக்கு கை கொடுக்கிறது.இந்த்த் தொகையை நமது இலாபத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம்.இத்தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின்படி விலக்கும் கிட்டுகிறது. உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மட்டுமின்றி அலுவலகப் பொறிகள், வாகனகங்கள் போன்றவற்றுக்கும் தேய்மானம் அனுமதிக்கப்படுகிறது.

தேய்மானத்தை எப்படி கணக்கிடுவது?

[தொகு]

இயந்திரத்தை பயன் படுத்தினாலும் பயன் படுத்தாவிட்டாலும் தேய்மானம் கணக்கிடப்பட்டு அதன் மூலதன மதிப்பில் இருந்து கழிக்கப்பட வேண்டும்.தேய்மானம் கழிக்கப் பட்ட பிறகு மீதம் உள்ள மதிப்பு நமது கணக்குப் புத்தகத்தில் பதியப்படுகிறது.இது ஏட்டுப் பெறுமானம் (Book Value ) என அழைக்கப்படுகிறது.

ஓர் இயந்திரத்தின் தேய்மானத்தைக் கணக்கிட வேண்டுமெனில் அதனுடைய ஆயுள் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.பொதுவாக இயந்திர உற்பத்தியாளர்களிடம் இருந்து இத்தகவலைப் பெறலாம்.இயந்திரத்தின் கொள்முதல் விலை என்ன என்பதையும் பார்க்க வேண்டும்.இயந்திரத்தின் விலயை மட்டும் பார்க்காமல், அதற்காகக் கட்டப்பட்ட வரிகள், அதனை நமது பணிமனைக்குக் கொண்டு வருவதற்காக செய்யப்பட்ட செலவு, அதனை பணிமனையில் நிறுவுவதற்காக செய்யப்பட்ட செலவு( சிறப்புக் கட்டுமான செலவுகள்) ,இதற்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட மின்சாதன செலவுகள் போன்ற அனைத்தும் சேர்த்து இயந்திரத்தின் மூலதன சொத்து மதிப்பு(Capitalised Value) எனப்படும்.இந்த மதிப்பில் ஐந்து விழுக்காட்டினை அதன் இறுதி மதிப்பாக எடுதுக்கொள்ள வேண்டும்.இயந்திரத்தின் மூலதன மதிப்பில் இறுதி மதிப்பைக் கழித்து வரும் தொகையை அதன் ஆயுட் காலத்தால் ( ஆண்டுகள்) வகுக்க ஓர் ஆண்டுக்கான தேய்மானம் எவ்வளவு என்று அறியலாம். தேய்மானத்தைக் கணக்கிட பல முறைகள் கையாளப்படுகின்றன.

வருமான வரிச் சட்டமும் தேய்மானமும்

[தொகு]

தேய்மானமாகக் கணக்கிடபப்டும் தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

நிறுமச் சட்டமும் தேய்மானமும்: (Indian Companies Act 1956 and Depreciation ) இந்தியாவைப்பொறுத்த வரையில் , ஒவ்வொரு வகை இயந்திரத்துக்கும் எத்தனை விழுக்காடு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும் என்பதை இந்திய நிறுமச் சட்டம் -1956 குறிப்பிட்டுள்ளது. ஒரு நிறுவனம், இந்த சட்டத்தில் குறிப்பிடபப்ட்டுள்ளதை விட அதிக விகிதாச்சாரத்திலும் தேய்மானத்தைக் கணக்கிட்டு கழித்துக் கொள்ளலாம்.ஆனால் இதில் குறிப்பிட்டுள்ள விழுக்காட்டை விட குறைந்த விகிதத்தில் தேய்மானம் கணக்கிட முடியாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேய்மானம்&oldid=1357750" இலிருந்து மீள்விக்கப்பட்டது