உலக வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உலக வங்கி
World Bank logo.svg
உலக வங்கி சின்னம்
உருவாக்கம் சூலை 1944
வகை பன்னாட்டு அமைப்பு
சட்ட நிலை ஒப்பந்தம்
நோக்கம் கடன் கொடுத்தல்
அமைவிடம்
  • வாசிங்டன் டிசி
உறுப்பினர்கள்
188 நாடுகள்
தலைவர்
ஜிம் யோங் கிம்
மைய்ய அமைப்பு
இயக்குனர் மேலாண்மைக் குழு[1]
தாய் அமைப்பு உலக வங்கிக் குழுமம்
வலைத்தளம் worldbank.org

உலக வங்கி (World Bank) என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும்.[2]. உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதிலும் ஈடுபாடு கொண்டவையாக இருக்க வேண்டும்.[3]

உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆகும். உலக வங்கி உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) மற்றும் பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA) என்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது. உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன[4] :பன்னாட்டு நிதிக் கழகம் (IFC), பலதரப்பு முதலீட்டு பொறுப்புறுதி முகமை (MIGA), பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம் (ICSID)

உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.

தனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியத்தையும் சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் "பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்" என அழைக்கப்பெறுகின்றன. நியூ ஹாம்சயர் மாநில, பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் செலாவணி மற்றும் நிதி மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, 1944) இந்நிறுவனங்களுக்கு இப்பெயர் கிட்டிற்று.

உலக வங்கி நிர்வாகம்[தொகு]

இதன் தலைவர் எப்பொழுதும் ஓர் அமெரிக்கராக இருப்பதும், அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியராக இருப்பதும் வழக்கம். இதன் செயல்பாடுகள் பலதரபட்ட சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Board of Directors". Web.worldbank.org. பார்த்த நாள் 2010-05-31.
  2. "About Us". World Bank (2008-10-14). பார்த்த நாள் 2008-11-09.
  3. "About Us". World Bank (2010-09-03). பார்த்த நாள் 2010-09-03.
  4. "About The World Bank (FAQs)". World Bank. பார்த்த நாள் 2007-10-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_வங்கி&oldid=2203214" இருந்து மீள்விக்கப்பட்டது