புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரட்சி அல்லது எழுச்சி( "ஒரு திருப்பம்" எனப் பொருள்படும் இலத்தீன் சொல் revolutio ) என்பது ஒரு குறுகிய காலத்தில் வல்லமையில் அல்லது ஒரு நிறுவன கட்டமைப்பில் ஓர் அடிப்படை மாற்றம் ஆகும். அரிசுட்டாட்டில் இருவித அரசியல் புரட்சி பற்றி விபரித்துள்ளார்:

  1. ஓர் அரசியல் அமைப்பிலிருந்து இன்னுமொன்றுக்கு பூரணமாக மாற்றுவது.
  2. இருக்கும் அரசியல் அமைப்பை திருத்துவது.[1]

உலக வரலாற்றில் முறைகள், காலம், கருத்தியல் தூண்டல் ஆகியவற்றினால் பல்வேறு பரந்த புரட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் விளைவு கலாச்சாரம், பொருளாதாரம், சமூக-அரசியல் நிறுவனம் ஆகியவற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

மார்க்சிய பார்வை[தொகு]

ஆளும் வர்க்கத்தின் இடத்தில் தொழிலாளி வர்க்கத்தை அமர்த்துவதன் மூலம் தனியுடைமை சமுதாயத்தை முடிவுக்குக் கொண்டுவருதலும் , , வர்க்கமற்ற, சுரண்டலற்ற சமூகத்தை உருவாக்குவது புரட்சியாகக் கருதப்படுகிறது. [2]


புரட்சிகளின் பட்டியல்[தொகு]

  • கருமைப் புரட்சி - பெட்ரோலியம்
  • தங்கப் புரட்சி - தோட்டக்கலை / தேன் புரட்சி
  • பிங்க் [ இளஞ்சிவப்பு ] - வெங்காயம் / இறால் உற்பத்தி
  • மஞ்சள் புரட்சி - எண்ணெய் வித்துக்கள்
  • அரக்குப் புரட்சி - தோல் / கோகோ உற்பத்தி
  • சாம்பல் புரட்சி - உரம் உற்பத்தி
  • சிவப்புப் புரட்சி - கறி / தக்காளி புரட்சி
  • சுற்றுப் புரட்சி - உருளை உற்பத்தி
  • வெள்ளிப் புரட்சி - முட்டை / கோழிப்பண்ணை
  • தங்க இழைப் புரட்சி - சணல் உற்பத்தி
  • வெள்ளி இழைப் புரட்சி - பருத்தி உற்பத்தி
  • சுற்றுப் புரட்சி - உருளை உற்பத்தி

குறிப்புக்கள்[தொகு]

  1. Aristotle, The Politics V, tr. T.A. Sinclair (Baltimore: Penguin Books, 1964, 1972), p. 190.
  2. "மார்க்சியத்தில் 'புரட்சி' என்பதற்கான விளக்கம் என்ன?". தமிழ் மார்க்சிஸ்ட். Archived from the original on 2015-09-18. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரட்சி&oldid=3701160" இலிருந்து மீள்விக்கப்பட்டது