பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரரசு என்பது ஒரு அரசாட்சி முறை; மிகவும் சக்திவாய்ந்த ஆட்சி, அதிகாரம் கொண்ட அரசுகள் பேரரசுகள் எனப்படும். இலத்தின் வார்த்தையான இம்பீரியம் என்பதும் பேரரசைக் குறிக்கிறது. மன்னர் ஆட்சி தான் இங்கு நடைபெறும். பேரரசின் மன்னரைப் பேரரசர் அல்லது பேரரசி என்று அழைப்பார்கள். அரசியல்ரீதியாக பேரரசு என்பது பல மாகாணங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதில் ஒன்று அல்லது பல்வேறுபட்ட இனக்குழு மக்களை உள்ளடக்கியதாக இருக்கும். உலகில் பல பேரரசுகள் தோன்றின, குறிப்பாக ரோமப் பேரரசு, ஆங்கிலேயப் பேரரசு மிகவும் பெயர் பெற்று விளங்கின.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரரசு&oldid=2225423" இலிருந்து மீள்விக்கப்பட்டது