இணையப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையப் போர் (cyberwarfare) என்பது கணினிகள், பிணையம் (networks) ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இது இணையத் தாக்குதல், உளவு மற்றும் நாசவேலை அச்சுறுத்தல் தொடர்பான தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை ஈடுபடுத்துகிறது. இத்தகைய நடவடிக்கைகளை "போர்" என அழைக்கப்படலாமா என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. ஆயினும்கூட, நாடுகள் தங்கள் திறன்களை வளர்த்து வருகின்றன, இணையப்போரில் குற்றவாளி, பாதிக்கப்பட்டவர் அல்லது இருவரும் ஈடுபடுகின்றன.

வரையறை[தொகு]

இணையப்போர் என்பது தேசிய நாட்டினால் ஏற்படும் சேதங்கள் அல்லது இடையூறுகளை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக மற்றொரு நாட்டின் கணினிகள் அல்லது பிணையத்தில் ஊடுருவிச் செயல்படுவது' 'என வரையறுக்கப்பட்டுள்ளது.[1]:6

ஆனால் மற்ற வரையறைகளில் பயங்கரவாத குழுக்கள், நிறுவனங்கள், அரசியல் அல்லது சித்தாந்த தீவிரவாத குழுக்கள், கொந்தர்கள் மற்றும் சர்வதேச குற்றவியல் அமைப்புக்கள் போன்ற அரச சார்பற்றவர்களையும் உள்ளடக்கியிருக்கிறது.[2][3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையப்_போர்&oldid=3593056" இருந்து மீள்விக்கப்பட்டது