தம்பி தங்கக் கம்பி
| தம்பி தங்கக் கம்பி | |
|---|---|
| இயக்கம் | கே. சங்கர் |
| தயாரிப்பு | எஸ். கணேஷ் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | விஜயகாந்த் ரேகா சார்லி ஜெய்கணேஷ் எம். என். நம்பியார் மலேசியா வாசுதேவன் ராதாரவி நிழல்கள் ரவி செந்தில் லட்சுமி மனோரமா கோவை சரளா ரம்யா கிருஷ்ணன் வரலட்சுமி |
| வெளியீடு | 1988 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தம்பி தங்கக் கம்பி 1988-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை கே. சங்கர் இயக்கினார்.[1]
கதைச்சுருக்கம்
[தொகு]சங்கர் (விஜயகாந்த்) தன்னுடைய தாய் தங்கையருடன், வசித்து வரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நோய்வாய்ப்பட்ட அவருடைய தாயின் நிலைமை மோசமாகி வருவதால், சங்கர் சிறிதுகாலம் தானுந்து ஓட்டுநராக ஒரு வேலையை ஏற்றுக்கொள்கிறார். இதற்கிடையில், ஒரு மர்மமான பணக்காரப் பெண் கங்கா (இலட்சுமி), அதிகப் பணம் சம்பாதிப்பதற்காக சங்கரின் போராடும் குடும்பத்தை அறிந்த கங்கா, சங்கரை வேலைக்கு அமர்த்துகிறார். அவர் கங்காவின் முடிவை ஏற்றுக்கொள்கிறார். பெரியதுரை (இராதா ரவி), ஜம்புலிங்கம் (மலேசியா வாசுதேவன்) ஆகியோரை கங்கா அனுப்பிவைக்கிறார். மேலும் சித்ரா (ரம்யா கிருஷ்ணன்), உமா (ரேகா) ஆகியோரும் அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்தனர். சங்கர் தனது குடும்பப் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காண்கிறார். கங்கா எப்படி சங்கருக்கு உதவுகிறார் என்பது மீதமுள்ள கதை.
நடிகர், நடிகையர்
[தொகு]- விஜயகாந்த்- சங்கர்
- லட்சுமி - கங்கா
- ரம்யா கிருஷ்ணன்- சித்திரா
- ரேகா- உமா
- எம். என். நம்பியார் - தியாகு
- ராதாரவி பெரியதுரை
- மனோரமா - தானுந்து ஓட்டுநர், தானுந்து உரிமையாளர்
- மலேசியா வாசுதேவன் - ஜம்புலிங்கம்
- நிழல்கள் ரவி- சின்னதுரை
- ஜெய்கணேஷ் - பசுபதி
- வடிவுக்கரசி - சங்கரின் தாய்
- கோவை சரளா
- செந்தில்- கருப்பு
- சார்லி- மது
- குல்லமணி
- சிறப்புத் தோற்றத்தில் டிஸ்கோ சாந்தி
தயாரிப்பு
[தொகு]தம்பி தங்கக் கம்பி, கே. சங்கர் இயக்கிய ஓர் அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தை சங்கராலய பிக்சர்சின் எஸ். கணேஷ் தயாரித்தார்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[2][3]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | வரிகள் | பாடியோர் | நீளம் | ||||||
| 1. | "ஸ்ரீரஞ்சனி என் சிவரஞ்சினி" | வாலி | கே. ஜே. யேசுதாஸ் | 4:45 | ||||||
| 2. | "நான் பாடினால்" | வாலி | எஸ். பி. சைலஜா | 4:30 | ||||||
| 3. | "தாய்க்குலத்தப் பாரடா" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:56 | ||||||
| 4. | "நான் என்றும் உன்னை விடமாட்டேன்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 3:53 | ||||||
| 5. | "அத்திரி பாட்சா கொழுக்கட்ட" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:00 | ||||||
| 6. | "நான் மணமகளே இந்த ஒரு" | வாலி | பி. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் | 3:09 | ||||||
| 7. | "காதல் பொல்லாது காவல் கொள்ளாது" | வாலி | பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:45 | ||||||
மொத்த நீளம்: |
29:58 | |||||||||
வெளியீடும் வரவேற்பும்
[தொகு]தம்பி தங்கக் கம்பி 1988 சூலை 15 அன்று வெளியிடப்பட்டது.[4] ஒரு வாரம் கழித்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதை ஓர் "அழகிய வணிகப் படம்" என்று கேலி செய்தது. ஆனால் இறுதிக்கட்டக் காட்சி "இலட்சியமாகப் படமாக்கப்பட்டது" என்று கூறியது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.youtube.com/watch?v=caReE1JNd0w
- ↑ "Thambi Thanga Kambi (Original Motion Picture Soundtrack)". ஆப்பிள் மியூசிக். 1 January 1988. Archived from the original on 9 August 2022. Retrieved 20 November 2022.
- ↑ "Thambi Thanga Kambi Tamil FIlm LP Vinyl Record by Gangai Ameran". Mossymart. Archived from the original on 20 November 2022. Retrieved 20 November 2022.
- ↑ "Thambi Thangakambi". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 15 July 1988. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880715&printsec=frontpage&hl=en.
- ↑ "Thambi Thanga Kambi". இந்தியன் எக்சுபிரசு: p. 5. 22 July 1988. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880722&printsec=frontpage&hl=en.
வெளி இணைப்புகள்
[தொகு]- 1988 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கங்கை அமரன் இசையமைத்த திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்
- மலேசியா வாசுதேவன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ரம்யா கிருஷ்ணன் நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்