கலங்கரை விளக்கம் (திரைப்படம்)
கலங்கரை விளக்கம் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | ஜி. என். வேலுமணி சரவணா பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் பி. சரோஜாதேவி |
வெளியீடு | ஆகத்து 28, 1965 |
நீளம் | 4352 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கலங்கரை விளக்கம் (ஒலிப்பு (உதவி·தகவல்)) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் குறிப்புகள்[தொகு]
இந்த படத்தின் பல்லவன் பல்லவி என்ற பாடல் பதிவின் போது நடிகை சரோஜாதேவிக்கு பயங்கரமான வயிற்று வலியால் அந்த பாடல் காட்சியில் நடிக்க முடியாது என்று சரோஜாதேவி கூறவிட்டார். ஆனால் படத்தின் இயக்குனர் கே. சங்கர் அவர்கள் மிகவும் கடுமையானவர் என்பதால் சரோஜாதேவி ஐ நீ தொடர்ந்து நடித்தே தீரவேண்டும். என்று கூறியவுடன் சரோஜாதேவியின் வயிற்று வலியை சரிசெய்ய கே. சங்கர் தனது கை வைத்தியத்தால் சரோஜாதேவி வயிற்றில் எண்ணொய் தெய்த்து நீவிவிட்டு ஒரு கயிற்றை இருக்கமாக வயிற்றில் கட்டி சரோஜாதேவி ஐ அந்த பாடல் காட்சியில் நடிக்க வைத்தார். அதே போல் அந்த பாடல் காட்சி முழுவதும் சரோஜாதேவி முகம் சோர்ந்து சோகமாக இருக்க காரணமே அவருக்கு ஏற்பட்ட வயிற்று வலி தான் காரணம் என்பதால் பாடல் முழுவதும் சரோஜாதேவி முகம் சோகமாகவே இருந்தது.