கலங்கரை விளக்கம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலங்கரை விளக்கம்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஜி. என். வேலுமணி
சரவணா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. சரோஜாதேவி
வெளியீடுஆகத்து 28, 1965
நீளம்4352 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கலங்கரை விளக்கம் (ஒலிப்பு) என்பது 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது வெர்டிகோ (1958) என்ற அமெரிக்க திரைப்படத்தின் பாதிப்பில் உருவானது.[2][3] இப்படம் 28 ஆகத்து 1965 அன்று வெளியானது.

கதை[தொகு]

வழக்கறிஞரான இரவி (ம.கோ.இரா), தன் நண்பர் மருத்துவர் கோபாலை (வி. கோபாலகிருஷ்ணன்) சந்திக்க மாமல்லபுரம் வருகிறார். சாலையில் நடமாடும் ஒரு பெண்ணான நீலா (சரோஜாதேவி) கலங்கரை விளக்கம் நோக்கி ஓடுகிறாள். பின்னர் நான் நரசிம்ம பல்லவனிடம் செல்கிறேன் என்று தற்கொலைக்கு முயல்கிறாள். அவளை இரவி காப்பாற்றுகிறார். நீலா தன்னை சிவகாமியாகவும் (சிவகாமியின் சபதம் கதை மாந்தர்) இரவியை நரசிம்ம பல்லவனாகவும் நினைக்கிறாள். மனநலம் பாதிக்கபட்டவள் அவள் என்று தெரியவருகிறது. அவளை குணப்படுத்த நண்பர் மருத்துவர் கோபாலின் ஆலோசனையின் பேரில் இரவி நீலாவின் வீட்டிலேயே தங்குகிறார்.

இதற்கிடையில் நீலாவின் சித்தப்பா நாகராசன் (நம்பியார்) நீலாவையும், தன் சித்தப்பாவையும் கொன்று சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறார். மனநலம் குணமாகிவரும் நீலா ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் தந்தையும் தூக்கமாத்திரை உண்டு இறந்துவிடுகிறார். நீல இறந்த சோகத்தில் உள்ள இரவி நீலாவைப் போன்ற தோற்றம் கொண்ட மல்லிகாவைச் சந்திக்கிறார். மல்லிகாவை திருமணம் செய்துகொண்ட இரவி, நீலா கொல்லப்பட்டதையும் அதற்கு பின் இருந்த நாகராஜின் சதியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.

நடிப்பு[தொகு]

பாடல்[தொகு]

இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.[1][2] "பல்லவன் பல்லவி" பாடல் நீலாம்பரி இராகத்தில் அமைந்தது.[3][4]

பாடல் பாடகர் வரிகள் நீளம்
"என்னை மறந்ததேன்" பி. சுசீலா பஞ்சு அருணாசலம் 03:16
"பொன்னெழில் பூத்தது" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 06:14
"சங்கே முழங்கு" சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா, குழுவினர் பாரதிதாசன் 04:57
"காற்று வாங்க போனேன்" டி. எம். சௌந்தரராஜன் வாலி 04:19
"என்ன உறவோ" டி. எம். சௌந்தரராஜன் 04:57
"பல்லவன் பல்லவி பாடட்டுமே" டி. எம். சௌந்தரராஜன் 03:48

வெளியீடும் வரவேற்ப்பும்[தொகு]

கலங்கரை விளக்கம் 28 ஆகத்து 1965 அன்று வெளியானது.[5] எம்ஜியார் பிக்சர்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது.[6] ஸ்போர்ட் அண்ட் பேஸ்டைமின் டி. எம். ராமச்சந்திரன், கே. சங்கரின் இயக்கத்தை "குறிப்பிடத்தக்கதாக இல்லை" என்று விமர்சித்தார், மேலும் "சில இடங்களில் அவரது பணி அநாகரீகமாகவும், அவசர வேலைக்கான அடையாளங்களைக் கொண்டுள்ளன" என்றும் குறிப்பிட்டார்.[7] தம்புவின் ஒளிப்பதிவை, குறிப்பாக மைசூர் மற்றும் மாமல்லபுரத்தின் படப்பிடிப்பை கல்கி பாராட்டியது.[8]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kalangarai Vilakkam (1965)". Raaga.com. Archived from the original on 15 June 2014. பார்க்கப்பட்ட நாள் 13 June 2014.
  2. "Kalangarai Vilakkam Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 7 July 2022. பார்க்கப்பட்ட நாள் 7 July 2022.
  3. Krishnamachari, Suganthy (15 December 2017). "Filmy perhaps, but definitely not flimsy". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210918051426/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/filmy-perhaps-but-definitely-not-flimsy/article21668873.ece. 
  4. Sundararaman (2007). Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ). Pichhamal Chintamani. பக். 152. இணையக் கணினி நூலக மையம்:295034757. 
  5. "Kalangarai Vilakkam". The Indian Express: pp. 10. 28 August 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650828&printsec=frontpage&hl=en. 
  6. "Kalangarai Vilakkam". The Indian Express: pp. 3. 22 August 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650822&printsec=frontpage&hl=en. 
  7. Ramachandran, T. M. (25 September 1965). "Kalankarai Vilakkam". Sport and Pastime. pp. 50–51. Archived from the original on 23 February 2023. பார்க்கப்பட்ட நாள் 23 February 2023.
  8. "கலங்கரை விளக்கம்". Kalki. 12 September 1965. p. 69. Archived from the original on 16 August 2022. பார்க்கப்பட்ட நாள் 7 July 2022.

வெளி இணைப்புகள்[தொகு]