உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பரீஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எச். அம்பரீஷ்- ಎಂ.ಹೆಚ್.ಅಂಬರೀಶ್
தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர்
பதவியில்
24 அக்டோபர் 2006 - 15 பெப்ரவரி 2007
பிரதமர்மன்மோகன் சிங்
பின்னவர்சௌத்ரி மோகன் ஜதுவா & ஜெகத்ரட்சகன்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1998 - 2009
முன்னையவர்சோ. ம. கிருசுணா
பின்னவர்செலுவராயசாமி
தொகுதிமண்டியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மாளவல்லி ஹஷ்சி கவுடா அமர்நாத்

(1952-05-29)29 மே 1952
மண்டியா, மைசூர், கருநாடகம்
இறப்பு24 நவம்பர் 2018(2018-11-24) (அகவை 66)[1]
பெங்களூர், கருநாடகம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுமலதா
பிள்ளைகள்ஒரு மகன் (அபிஷேக் அம்பரீஷ்)
வாழிடம்(s)பெங்களூரு, கருநாடகம்
தொழில்நடிகர்

அம்பரீஷ் (Ambareesh, மே 29, 1952 – 24 நவம்பர் 2018),[2]) கன்னடத் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[3] இவர் கர்நாடகாவின், மண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவில் உள்ள தொட்டஅரசினகெரே கிராமத்தில் பிறந்தார்.[4] இவர் 1972 முதல் 2012 வரை பல கன்னடத் திரைப்படங்களில் நடித்தார். கர்நாடக அரசின் திரைப்பட விருதும், நந்தி விருதும் பிற சிறப்பு விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை இருநூறைத் தாண்டும். இவர் ரஜினியுடன் பிரியா என்ற தமிழ் படத்தில் நடித்தார்.

இறப்பு[தொகு]

கன்னட நடிகர் அம்பரீஷ் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில் நவம்பர் 24, 2018 அன்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[4]

திரைப்படங்கள்[தொகு]

 1. நாகரஹாவு
 2. பங்காரத கள்ள
 3. சீதையல்ல சாவித்ரி
 4. மகதேஸ்வர பூஜாபல
 5. சுபமங்களா
 6. பாக்கியஜோதி
 7. ஒந்தே ரூப எரடு குணா
 8. தேவர கண்ணு
 9. ஹுடுகாடத ஹுடுகி
 10. கதாசங்கமா

சான்றுகள்[தொகு]

 1. Actor politician Ambareesh passes away
 2. "Kannada actor, former Union minister Ambareesh dies in Bengaluru hospital". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018.
 3. http://tamil.oneindia.in/movies/specials/2012/05/rajinikanth-attends-ambarish-60th-bday-party-154790.html[தொடர்பிழந்த இணைப்பு]
 4. 4.0 4.1 https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/25110636/Actor-Rajinikanth-paid-homage-to-Kannada-actor-Ambresh.vpf
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பரீஷ்&oldid=3926498" இலிருந்து மீள்விக்கப்பட்டது