தேசிய கீதம் (திரைப்படம்)
தேசிய கீதம் | |
---|---|
இயக்கம் | சேரன் |
தயாரிப்பு | தரம்சந்த் லங்கிடு |
கதை | சேரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பிரியன் |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
விநியோகம் | தாராஸ் கிரியேசன்ஸ் |
வெளியீடு | 19 திசம்பர் 1998 |
ஓட்டம் | 164 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேசிய கீதம் (Desiya Geetham) என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். சேரன் இயக்கிய இப்படத்தை ஆர். சந்துரு, அபுதாஹிர், சதீஷ்குமார், ஜி. வி. சுரேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இப்பபடம் வெளியீட்டின் போது சர்ச்சைகளை உருவாக்கியது [1][2] என்றாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3][4] இந்த படம் 1998 தீபாவளி அன்று வெளியான படங்களில் ஒன்றாகும்.
கதை[தொகு]
இந்த படம் ஒரு முதலமைச்சரையும் அவரது குடும்பத்தினரையும் கடத்தி ஒரு தொலைதூர கிராமத்திற்கு அழைத்துச் செல்வது பற்றியது. தமிழ்நாட்டில் அரசியல் அமைப்பை சரிசெய்ய புரட்சிகர வழிகளைத் தேடும் கிராமவாசி வேடத்தில் முரளி நடித்துள்ளார். நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே கதையின் அடிப்படை ஆகும்.
நடிகர்கள்[தொகு]
- முரளி பாண்டியனாக
- ரம்பா
- விஜயகுமார்
- நாகேஷ்
- நாசர்
- மணிவண்ணன் இந்தியனாக
- ரஞ்சித் கங்காவாக
- விஜயசாரதி
- ஆண்டவர்
- ஆனந்த் ராஜ் (நடிகர்)
- இராஜேஸ்வரி (பத்மாசிறீ) காவேரியாக
- சத்தியப்பிரியா
- நளினிகாந்த்
- சிசர் மனோகர் ரத்தினமாக
- கிரேன் மனோகர்
- மாஸ்டர் ஹரி
- நிர்மளா பெரியசாமி
- பி. ஸ்வேதா "என் கனவினை" பாடலில் சிறப்புத் தோற்றம்
இசை[தொகு]
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்ததார். பாடல் வரிகளை அறிவுமதி, பழனி பாரதி, வாசன் ஆகியோர் எழுதினர். பாடல்கள் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன.[5]
- "லேடீஸ் ஸ்பெஷல்" - சுஜாதா
- "என் கணவனை" - ஹரிஹரன்
- "தேசியகீதம்" - கே. ஜே. யேசுதாஸ்
- "நான் வாக்கப்பட்டு" - சுஜாதா
- "மன்னனா பொறந்தவுக" - புஷ்பவனம் குப்புசாமி
- "அப்பன் வீட்டு" - புஷ்பவனம் குப்புசாமி
- "நண்பா நண்பா" - இளையராஜா
- "அனல் காந்தி" - இளையராஜா
வணிகம்[தொகு]
- இந்த படம் திரையரங்குகளில், 200,000 அமெரிக்க டாலர் மதிப்புக்கு வசூலை ஈட்டியது.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Minnoviyam Star Tracks". chandrag.tripod.com. http://chandrag.tripod.com/jan99/.
- ↑ "Minnoviyam Star Tracks". archive.is. http://chandrag.tripod.com/nov98/.
- ↑ "reviews/1999/dgeetham". bbthots.com. http://www.bbthots.com/reviews/1999/dgeetham.html.
- ↑ "Desia Geetham: Movie Review". indolink.com. http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/Desia_Geetham_142751.html.
- ↑ "Desiya geetham: Music Review". indolink.com. http://www.indolink.com/tamil/cinema/Music/Reviews/98/Desiya_geetham_62320.html.