தியாகராசர் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தியாகராசர் பொறியியல் கல்லூரி
TCE Madurai.JPG
குறிக்கோளுரைவினையே உயிர்
வகைஅரசு உதவிபெற்றது
உருவாக்கம்1957
முதல்வர்முனைவர். வி. அபய்குமார்
அமைவிடம்மதுரை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்143 acres
இணையதளம்http://tce.edu

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி

இருப்பு[தொகு]

மதுரை மாநகரிலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் 143 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமையான நிலங்களுக்கும், திருப்பரங்குன்றம் மலைக் குன்றுகளுக்கும் இடையில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த வளாகத்தில், இக்கல்லூரிக்கான கட்டிடங்கள் அமைந்துள்ளன.

கல்விப் பாடங்கள்[தொகு]

தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் மற்றும் அறிவியலில் ஒன்பது பட்டப்படிப்புப் பாடங்களும், பதினோரு பட்டமேற்படிப்புப் பாடங்களும் நடத்தப்படுகின்றன.

பொறியியல் துறைகள்[தொகு]

 • இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியல்
 • மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல்
 • எந்திரப் பொறியியல்
 • குடிசார் பொறியியல்
 • கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
 • தகவல் தொழில்நுட்பம்

அறிவியல் துறைகள்[தொகு]

 • இயற்பியல்
 • கணிதம்
 • வேதியியல்

தவிர, கட்டிட வடிவமைப்புத் துறையில், இளநிலைப் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது.

பொன்விழா ஆண்டு[தொகு]

2007-2008 ஆம் ஆண்டு, இக்கல்லூரி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூறும் வகையில், பொன் விழா ஆண்டாகக் கொண்டாடப்பட்டது.

விஞ்ஞானிகளின் வருகை[தொகு]

 • 2008 ஆம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டங்களைச் சிறப்பிக்கும் வகையில், இந்திய விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இக்கல்லூரிக்கு வருகை தந்து சிறப்புரையாற்றினார்.
 • 2009 ஆம் ஆண்டு டாக்டர் எரிக் ஆல்லின் கார்நெல் (Dr. Eric A. Cornell), நோபெல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி, இக்கல்லூரிக்கு வருகை தந்து சிறப்பித்தார்.

மேலும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]