உள்ளடக்கத்துக்குச் செல்

என் தங்கை (1952 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(என் தங்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
என் தங்கை
இயக்கம்சி. எச். நாராயணமூர்த்தி
தயாரிப்புஅசோகா பிக்சர்ஸ்
கதைடி. எஸ். நடராஜன்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
பி. வி. நரசிம்ம பாரதி
பி. எஸ். கோவிந்தன்
எம். ஜி. சக்கரபாணி
மாதுரி தேவி
ஈ. வி. சரோஜா
எம். என். ராஜம்
வி. சுசீலா
வெளியீடுமே 31, 1952
ஓட்டம்.
நீளம்18137 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் தங்கை என்பது 1952 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், ஈ. வி. சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த படம் டி. எஸ். நடராஜனின் இதே பெயரிலான நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 1952 மே 31 அன்று வெளியானது.[1] இந்த படம் இந்தியில் சோட்டி பெஹேன் என்றும், தெலுங்கில் ஆடா படுச்சு என்றும், கன்னடத்தில் ஒந்தே பல்லியா ஹூகலு என்றும் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. இதில் எம்.ஜி.ஆர் ஜோடி இல்லாமல் நடித்தார். அவர் கதாபாத்திரம் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்வதாக காட்டப்படும்.[2]

நடிப்பு

[தொகு]

நடிகர்கள்
  • இராஜேந்திரனாக ம. கோ. இராமச்சந்திரன்
  • சூரியமூர்த்தியாக பி. எஸ். கோவிந்தன்
  • செல்வமாக பி. வி. நரசிம்மபாரதி
  • கருணாகரம் பிள்ளையாக எம். ஜி. சக்கரபாணி
  • வீராசாமி பிள்ளையாக டி. ஆர். பி. ராவ்
  • அழகனாக சி.எ ஸ். பாண்டியன்
  • வீரையனாக எஸ்.என்.நாராயணசாமி
  • சித்ரகுப்தனாக கொட்டப்புலி ஜெயராமன்
  • மாஸ்டர் கிருஷ்ணன் இடியட் பாயாக
  • குண்டு செட்டியாக என். ஆழ்வார்

நடிகைகள்

தயாரிப்பு

[தொகு]

கோயம்புத்தூரில் உள்ள சென்ட்ரல் ஸ்டுடியோவில் திரைப்பட முன் தயாரிப்பு குழுவினர், பாவலர் பாலசுந்தரத்தின் பராசக்தி நாடகத்தையும், டி. எஸ். நடராஜனின் என் தங்கை நாடகத்தையும் இணைத்து ஒரே திரைப்படமாக உருவாக்கத் திட்டமிட்டனர். ஆனால், நடராஜன் இந்த யோசனையை ஏற்கவில்லை;[3] என் தங்கை இறுதியில் சா. நாராயண மூர்த்தி இயக்கத்தில் தனிப்படமாக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் பாடகர் திருச்சி லோகநாதனை நாயகனாக வைத்து படப்பிடிப்பு நடத்தபட்டது. சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அவருக்கு நடிப்பு சரியாக வரவில்லை என நாராயண மூர்த்தி கருதியதால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.[4] நடகத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசனை அதே கதாபாத்திரத்தை திரைப்படத்தில் நடிக்க வைக்க முன்னர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் அந்தப் பாத்திரம் எம். ஜி. ராமச்சந்திரனுக்குச் சென்றது.[5]

பாடல்கள்

[தொகு]

இப்படத்திற்கு சி. என். பாண்டுரங்கன் இசையமைத்தார்.[சான்று தேவை]

பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்
"ஆடும் ஊஞ்சலைப் போலே" டி. ஏ. மோதி, பி. லீலா சுரதா 03:33
"அழகாய் பொம்மை வைத்து" ஏ. பி. கோமளா அ. மருதகாசி 03:02
"குட்லக் குட்லக்" சி. எஸ். பாண்டியன், ஏ. ஜி. ரத்னமாலா அ. மருதகாசி 02:30
"மீளா துயராமோ...கண்கள் இரண்டும்" என். இலலிதா பானு நரசிம்மன் 03:39
"தீன தயாபரி தாயே" எம். எல். வசந்தகுமாரி சரவணபவானந்தர் 03:34
"காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்" டி. ஏ. மோதி, பி. லீலா பாரதிதாசன் 03:11
"வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும்" பி. எஸ். கோவிந்தன் பாரதிதாசன் 02:56
"இன்பமே சிறிதும் அறியாத பெண் ஜென்மம்" பி. லீலா சரவணபவானந்தர் 03:12
"நாளுக்கு நாள் பார்க்கிற போதே" என். லலிதா அ. மருதகாசி 03:01
"வறுமை புயலாலே...கருவிலே உருவான காயம்" ஏ. எம். ராஜா அ. மருதகாசி 04:01
"என் இன்ப ஜோதியே உன் அன்பு பார்வையால்" பி. எஸ். கோவிந்தன், கே. வி. ஜானகி அ. மருதகாசி 03:34
"அன்னையே அன்னையே அன்னையே அருள் தாரும் மேரி தாயே" ஏ. பி. கோமளா கி. ராஜகோபால் 03:22

வரவேற்பு

[தொகு]

இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை 2008 இல் எழுதுகையில், "அதன் உணர்ச்சிபூர்வமான கதைக்களத்திற்காகவும், எம்ஜிஆரின் பாசமிகு அண்ணனான நடிப்பானது, அவரது சிறந்த நடிப்புகளில் ஒன்றாக விமர்சகரால் கருதப்படுகிறது" என்று கூறினார். இந்தப் படம் தெலுங்கில் நா செல்லேலு (1953) என்ற பெயரில் அதே குழுவினால் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. எல். வி. பிரசாத் இந்தியில் சோட்டி பஹேன் (1959) என்றும்,[4] ஒடியாவில் புனர் மிலானா எனவும் மறுஉருவாக்கம் செய்தார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்". Ithayakkani. 2 April 2011. Archived from the original on 14 November 2018. Retrieved 3 January 2022.
  2. ராண்டார் கை (28 நவம்பர் 2008). "En Thangai 1952". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/en-thangai-1952/article3023607.ece. பார்த்த நாள்: 21 அக்டோபர் 2016. 
  3. Randor Guy (24 April 2011). "Parasakthi 1952". தி இந்து இம் மூலத்தில் இருந்து 21 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130621041707/http://www.thehindu.com/features/cinema/parasakthi-1952/article1761261.ece. 
  4. 4.0 4.1 Randor Guy (28 November 2008). "En Thangai 1952". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 June 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150603013631/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/en-thangai-1952/article3023607.ece. 
  5. Randor Guy (10 November 2006). "A star fades away". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211204061125/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/a-star-fades-away/article3231270.ece. 
  6. Sahu, Diana (14 September 2020). "COVID-19 claims another stalwart, Odia veteran actor 'Hakim Babu' Ajit Das passes away". The New Indian Express. Archived from the original on 23 November 2020. Retrieved 15 August 2023.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_தங்கை_(1952_திரைப்படம்)&oldid=4285237" இலிருந்து மீள்விக்கப்பட்டது