அபிமன்யு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபிமன்யு
இயக்கம்எம். சோமசுந்தரம்
ஏ. காசிலிங்கம்
தயாரிப்புசோமு
யூப்பிட்டர்
மொகிதீன்
கதைதிரைக்கதை ஏ. எஸ். ஏ. சாமி
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
சி. ஆர். சுப்புராமன்
நடிப்புஎஸ். எம். குமரேசன்
பி. வி. நரசிம்ம பாரதி
எம். ஜி. ஆர்
ஜி. சக்கரபாணி
நம்பியார்
யு. ஆர். ஜீவரத்தினம்
எம். ஆர். சந்தானலட்சுமி
மாலதி
சி. டி. ராஜகாந்தம்
புளிமூட்டை ராமசாமி
ஒளிப்பதிவுடபிள்யூ. ஆர். சுப்பராவ்
படத்தொகுப்புஏ. காசிலிங்கம்
நடன அமைப்புவி. ராகவையா
கலையகம்சென்ட்ரல், கோயம்புத்தூர்
வெளியீடுமே 6, 1948
ஓட்டம்.
நீளம்16325 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அபிமன்யு 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். சோமசுந்தரம், ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். குமரேசன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இந்த படத்தில் இடம்பெற்ற திருச்சி லோகநாதன்-யூ, ஆர்.ஜீவரத்தினம் ஆகியோர் பாடிய புது வசந்தமாமே வாழ்விலே என்ற பாடல் மிகப் பிரபலமானது. இப்பாடலுக்கு இசையமைத்தவர் சுப்பராமனிடம் உதவியாளராக இருந்த எம். எஸ். விஸ்வநாதன் ஆவார். திரைப்படத்துக்கென அவர் முதன்முதலில் மெட்டமைத்தது இந்தப் பாடலுக்குத்தான். இந்தப் படத்துக்கு ஏ.எஸ்.ஏ. சாமியுடன் இணைந்து மு. கருணாநிதி வசனம் எழுதினார். ஆனால், அவரது பெயர் படத்தில் இடம்பெறவில்லை.[2]

நடிகர்கள்[தொகு]

நடிகைகள்[தொகு]

பாடல்கள்[தொகு]

பாடல்களை பாபநாசம் சிவன், சுந்தர வாத்தியார், பூமிபாலகதாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர்.[3]

  • புது வசந்தமாமே வாழ்விலே.. (எஸ். எம். குமரேசன், யு. ஆர். ஜீவரத்தினம்)[4]
  • உங்கள் முக அரவிந்தம்.. (ஆர். மாலதிக்காக கே. வி. ஜானகி )
  • புது மலரின் அழகே ஆனந்தம்.. (யு. ஆர். ஜீவரத்தினம்)
  • ஜெயமே.. (யு. ஆர். ஜீவரத்தினம்)
  • வானோர் சேனைகளும்.. (யு. ஆர். ஜீவரத்தினம்)
  • ஏ ஐயாமாரே வாங்க ஓ அம்மாமாரே வாங்க (திருச்சி லோகநாதன், கே. வி. ஜானகி) (டி. கே. சுந்தர வாத்தியார்)

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (1 அக்டோபர் 2009). "Abhimanyu". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-abhimanyu/article27351.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016. 
  2. கே.கே.மகேஷ் (2017 திசம்பர் 1). "நடிக்கும்போதே மரணம்". கட்டுரை. தி இந்து தமிழ். 1 திசம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  3. "ஜுபிடர் 'அபிமன்யு'". பேசும் படம்: பக். 63-65. சூலை 1948. 
  4. புது வசந்தமாமே பாடல்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிமன்யு_(திரைப்படம்)&oldid=2935866" இருந்து மீள்விக்கப்பட்டது