எம். ஜி. சக்கரபாணி
எம். ஜி. சக்கரபாணி | |
|---|---|
| பிறப்பு | மருதூர் கோபாலன் நீலகண்டன் 13 சனவரி 1911 வடவனூர், கொச்சின், பிரித்தானிய இந்தியா, கேரளம் |
| இறப்பு | 17 ஆகத்து 1986 (அகவை 75) சென்னை, இந்தியா |
| மற்ற பெயர்கள் | பெரியவர், ஏட்டான், நீலகண்டம் |
| பணி | நடிகர், தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1936–1986 |
| சமயம் | இந்து |
| வாழ்க்கைத் துணை | மீனாட்சி நீலகண்டன் |
| பிள்ளைகள் | 10 |
எம். ஜி. சக்கரபாணி என்று அழைக்கப்படும் மருதூர் கோபாலன் நீலகண்டன் (13 சனவரி 1911 – 17 ஆகஸ்ட் 1986) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் அண்ணன் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார்.[1]
வாழ்க்கை குறிப்பு
[தொகு]கோபாலன் மேனன்–சத்யபாமா ஆகியோருக்கு அன்றைய மதராஸ் மாகாணம் இன்றைய கேரளாவில் உள்ள பாலக்காடு அருகிலான வடவனூர் என்ற சிறிய கிராமத்தில் முதல் மகனாகப் பிறந்தார். எம். ஜி. சக்கரபாணியின் பெற்றோர்கள் வைத்த இயற்பெயர் நீலகண்டன் என்பதாகும். இவர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த போது மதுரை ஒரிஜினல் பாய்சு கம்பெனியில் நடிக்கும் போது அதன் உரிமையாளரும், நாடக ஆசிரியருமான கந்தசாமி முதலியார் இந்த நாடக குழுவில் நீலகண்டன் என்ற பெயரில் 4-5 பேர் இருந்ததால் இவரது பெயரை சக்கரபாணி என்று நாடக குழுவிற்காக மாற்றி வைத்தார். இவருடன் பிறந்தவர் தான் புகழ்பெற்ற தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். இவரை அன்றைய தமிழக திரையுலகில் பெரியவர் என்றும் இவரது சகோதரர் எம். ஜி. ஆர் அவர்களை சின்னவர் என்றும் அன்புடன் அழைத்து வந்தனர். மேலும் இவருக்கும் இவரது கடைசி சகோதரருமான எம். ஜி. ராமச்சந்திரனுக்கும் இடையே பிறந்த எம். ஜி. காமாட்சி, எம். ஜி. சுமதிரா மற்றும் எம். ஜி. பாலகிருஷ்ணன் என்ற இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்கள் அப்போது இவர்கள் வாழ்ந்த இலங்கை கண்டி நகரில் விஷ காய்ச்சலால் ஒருவர் பின் ஒருவர் மறைந்த பிறகு இவரும் இவரது கடைசி சகோதரருமான மக்கள் திலகம் எம். ஜி. ஆர் மட்டுமே உயிர்தப்பி வாழ்ந்தனர். சக்கரபாணியின் முதல் மனைவி இறந்த பிறகு மீனாட்சி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஏழு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என பத்து பிள்ளைகள் இருந்தனர்.
நடித்த திரைப்படங்கள்
[தொகு]இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]- அரச கட்டளை (1967)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Randor Guy (16 February 2012). "Fame eluded this sibling of an icon". The Hindu. Retrieved 29 October 2013.