ப. கண்ணாம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பசுப்புலேட்டி கண்ணாம்பா
Pasupuleti Kannamba
பிறப்பு அக்டோபர் 5, 1910
குட்டப்பா,
ஆந்திரப் பிரதேசம்
இறப்பு மே 7, 1964 (அகவை 53)
சென்னை,
தமிழ்நாடு
பணி நடிகை, பாடகி, திரைப்படத் தயாரிப்பாளர்
வாழ்க்கைத் துணை காடாறு நாகபூசணம்

பி. கண்ணாம்பா (பசுப்புலேட்டி கண்ணாம்பா, தெலுங்கு: పసుపులేటి కన్నాంబ, அக்டோபர் 5, 1910[1] - மே 7, 1964) பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகை. மு. கருணாநிதியின் மனோகரா திரைப்படம் மூலம் வசனத்தை திறம்பட பேசி எல்லோராலும் பாராட்டை பெற்றவர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 25 படங்களை தயாரித்தும் உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கண்ணாம்பா தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர். ஆந்திரப் பிரதேசம், குட்டப்பா என்ற ஊரில் எம். வெங்கணராசையா, லோகாம்பா ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். தாயின் பெற்றோருடன் ஏலூருவில் வளர்ந்தார். 1927 ஆம் ஆண்டு கண்ணம்பா 16 வயதில் நாரலா நாடகி சமாஜன் நாடக மன்றத்தில் சேர்ந்து அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்து பெயர் பெற்றார். அதன் பிறகு அந்த நாடக மன்றம் மேடையேற்றிய அனுஷியா, சாவித்திரி, யசோதா போன்ற நாடகங்களில் நடித்தார். இந்நாடக நிர்வாகிகளில் ஒருவரான கே. பி. நாகபூஷணம் 1934 இல் கண்ணாம்பாவைத் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டு இருவரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டிய மண்டலி என்ற புதிய நாடகக் கம்பனியை ஆரம்பித்து தென்னிந்தியாவெங்கும் நாடகங்களை நடத்தி வந்தார்கள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் ஒரு ஆண்பிள்ளையும், பெண் பிள்ளையையும் தத்தெடுத்து வளர்த்தார்கள். மகள் ராஜராஜேஸ்வரி பிரபல தெலுங்கு இயக்குனர் சி. புல்லையாவின் மகனைத் திருமணம் செய்து கொண்டார்.

திரைப்படங்களில்[தொகு]

ஸ்டார் கம்பெனியைச் சேர்ந்த ஏ. ராமையா கண்ணாம்பாவை சந்திரமதி பாத்திரத்தில் ஹரிச்சந்திரா திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு சரசுவதி டக்கீஸ் கம்பெனி தயாரித்த துரோமதி படத்தில் நடித்தார். 1938 இல் பி. என். ரெட்டி தயாரித்த கிரலட்சுமி படத்தில் நடித்தார்.

கண்ணாம்பா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் (பின்னர் ஜெமினி ஸ்டூடியோவாக மாறியது) ராஜகோபாலின் கிருஷ்ணன் தூது[2]. தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிப் பேசி நடித்தார். இது 1940 ஆண்டு வெளிவந்தது. அடுத்து அவர் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் அசோக்குமார் படத்தில் நடித்தார். 1941 இல் ஜுப்பிட்டர் பிக்சர்ஸ் தயாரித்த கண்ணகி படத்தில் நடித்தார்.

கண்ணகிக்குப் பிறகு கண்ணாம்பா தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். கலைஞர் மு. கருணாநிதி எழுதிய வசனங்களை மனோகரா திரைப்படத்தில் சிறப்பாக பேசி நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

  1. நிச்சய தாம்பூலம்

விருதுகள்[தொகு]

கலைமாமணி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. She walked tall in tinsel town, Mohan V. Raman, த இந்து, செப்டம்பர் 30, 2011
  2. மோனா, திரைப்பட சாதனையாளர்கள் - பி. கண்ணாம்பா, வீரகேசரி, அக்டோபர் 16, 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._கண்ணாம்பா&oldid=1853183" இருந்து மீள்விக்கப்பட்டது