தாய்க்குப்பின் தாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாய்க்குப் பின் தாரம்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
கதைகதை எஸ். அய்யா பிள்ளை
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
டி. எஸ். பாலையா
சின்னப்பதேவர்
ராதாகிருஷ்ணன்
பி. பானுமதி
பி. கண்ணாம்பா
ஜி. சகுந்தலா
சுரபி பால சரஸ்வதி
வெளியீடுசெப்டம்பர் 4, 1956
ஓட்டம்.
நீளம்16906 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாய்க்குப் பின் தாரம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம்.ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர், டி.எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ பாடல்[தொகு]

தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ என்பது தேவர் பிலிம்ஸ்ஸின் முதற் படமான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடலை டி.எம். சௌந்தரராஜன் பாடியிருந்தார்.

பாடல் காட்சி[தொகு]

தந்தை இறந்திருக்கும் போது பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

பாடல் பற்றிய குறிப்பு[தொகு]

ஒரு தாயின் அன்புக்கு இணையாக ஒரு தந்தையால் ஈடு கொடுக்க முடியாதென்றாலும் வாழ்க்கையின், வளர்ச்சியில் தந்தையின் பங்கும் அளப்பரியதே. தாயின் அன்பை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு தந்தையின் அன்பு பெரும்பாலும் உணர்ந்து கொள்ளப்படுவதில்லை. திரையுலகம் கூட இந்த விடயத்தில் கொஞ்சம் பாரபட்சமாகவே இருந்திருக்கிறது. தாயின் அன்பை மனசை உருக்கக் கூடிய வகையில் எத்தனையோ விதமாகப் பாடி வைத்த திரையுலகம் தந்தையின் அன்பை அவ்வளவாகப் பாடவில்லை. வழமையாக எம்.ஜி.ஆர். படங்களில் தாயை முன்னிறுத்தியே பாடல்கள் அமைந்திருக்கும். இப்படத்தில் சற்று வித்தியாசமாக தந்தையை முன்னிறுத்தி இப் பாடல் அமைந்துள்ளது. இப்பாடல் அவ்வளவாகப் பேசப்படவில்லை.

பாடல் வரிகள்[தொகு]

தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவனென்றால்
விந்தை உண்டோ

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஒளவையின் பொன்மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அநுபவமே இதுதானா

உண்ணாமல் உறங்காமல்
உயிரோடி மன்றாடி
என் வாழ்வின் இன்பமே
எதிர் பார்த்த தந்தை எங்கே?
என் தந்தை எங்கே?
கண்ணிமை போலே எனை வளர்த்தாரே
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே ----- பாழான சிதையில்
கனலானார் விதிதானோ..!

வெளி இணைப்புகள்[தொகு]