எம். என். ராஜம்
மதுரை நரசிம்மாச்சாரி ராஜம் | |
---|---|
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1949-2007 |
வாழ்க்கைத் துணை | ஏ. எல். ராகவன் (1960-2020) |
பிள்ளைகள் | பிரேமலட்சுமணன் (பி. 1963) நளினா மீனாட்சி (பி. 1969) |
மதுரை நரசிம்மாச்சாரி ராஜம்[1] அல்லது எம். என். ராஜம் தென்னிந்திய திரைப்படங்களில் 1950கள் மற்றும் 1960 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அரங்கேற்றம் ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் அறியப்பட்டார்.
தொழில்
[தொகு]ஏழ்மை காரணமாக ஏழு வயதில் மதுரை மங்கள கான சபாவில் சேர்த்துவிடப்பட்டார்.[2] 15 வயது முதல் டி. கே. எஸ். நாடகக் குழுவில் நாயகியாக நடிக்கத் துவங்கி, சிவாஜி நாடக மன்றம், சேவா ஸ்டேஸ் இவர் என 1,500 மேடைகளைக் கண்டார்.[2] 1949 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் அறிமுகமானார். ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் இணைந்து நடித்த வேடம் இவரது திரை வாழ்விற்கு திருப்பமாக அமைந்தது. அதன் பின்னர் ராஜம், நாடோடி மன்னன்,[3] சிவாஜி கணேசனுடன் ரங்கோன் ராதா, ஜெமினி கணேசன், எம். ஆர். ராதா, எஸ். எஸ். ராஜேந்திரன், எம். என். நம்பியார், என். எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.[4] இவர் முதன்மை நாயகியாக, எதிர்மறை வில்லியாக மற்றும் நகைச்சுவை நடிகையாக அனைத்து துறைகளிலும் நடித்துள்ளார். இவர் பிரபல தமிழ் பின்னணி பாடகர் ஏ. எல். ராகவனை 1960 மே 2 அன்று மணந்தார். [5] இவர் 1970 முதல் 1990 வரை படங்களில் துணை வேடங்களில் நடித்தார். பின்னர் 1995 முதல் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றத் தொடங்கினார், மேலும் 2014 வரை படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.[6][7] 1958 ஆம் ஆண்டில், எம். ஜி. ராமச்சந்திரன் தான் இரண்டாவதாக இயக்க இருந்த பொன்னியின் செல்வன் படத்துக்காக ராஜமை ஒப்பந்தம் செய்தார். [8] கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வனின் புதினத்தின் முதல் திரைத் தழுவல்களில் ஒன்றான இந்தப் படத்தில் வைஜெயந்திமாலா, சாவித்திரி, ஜெமினி கணேசன், பத்மினி, சரோஜாதேவி, நாகேஷ் ஆகியோர் அடங்கிய ஒரு பெரிய குழு நடிகர்கள் இருந்தனர்.[9] அந்தப் படத்தில், பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினி வேடம் இவருக்கு வழங்கப்பட்டது. [9] இருப்பினும், 1958 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அந்தப் படம் என்னவென்று தெரியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.[10]
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் அங்கத்தினராக 1953இல் பதிந்தவர். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றவர்.
திரைப்படங்கள்
[தொகு]- ரத்தக்கண்ணீர்
- ரம்பையின் காதல் (1956)
- நாடோடி மன்னன் (1958)
- புதுமைப்பெண் (1959)
- கவலை இல்லாத மனிதன் (1960)
- ரங்கோன் ராதா
- தாலி பாக்கியம்
- நீலாவுக்கு நெறஞ்ச மனசு
- அரங்கேற்றம்
- வின்னர்
- திருப்பாச்சி
- இம்சை அரசன் 22ம் புலிகேசி
- உலகம் பலவிதம்
- சதாரம்
- டவுன் பஸ்
- தங்கம் மனசு தங்கம்
- தங்கரத்தினம்
- தெய்வப்பிறவி
- நல்ல தம்பி
- நீதிபதி
- பாவை விளக்கு
- பிள்ளைக் கனியமுது
- மகேஸ்வரி
- மக்களைப் பெற்ற மகராசி
- முதலாளி
- விடிவெள்ளி (திரைப்படம்)
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
[தொகு]- கலைமாமணி விருது (1962 - 1963)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "All's in a letter". Chennai, India: The Hindu. 25 November 2013. http://www.thehindu.com/features/metroplus/alls-in-a-letter/article5389739.ece.
- ↑ 2.0 2.1 அன்றைய நாயகிகள், எம். என். ராஜம், நவரச நாயகி!, கட்டுரை ஆர். சி. ஜெயந்தன், இந்து தமிழ் திசை சித்திரை மலர் 2021 பக்கம்: 188-199
- ↑ "How a Tiff Prompted MGR to Change Bhanumathi Ramakrishna's Role in Nadodi Mannan". News18. 21 June 2022. Archived from the original on 4 March 2023. Retrieved 4 March 2023.
- ↑ "Contented with her lot". The Hindu (Chennai, India). 26 January 2007 இம் மூலத்தில் இருந்து 4 February 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070204093414/http://www.hindu.com/fr/2007/01/26/stories/2007012600060200.htm.
- ↑ Shivpprasadh, S. (20 June 2013). "The perfect pair". The Hindu இம் மூலத்தில் இருந்து 12 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220412013336/https://www.thehindu.com/features/friday-review/art/the-perfect-pair/article4833510.ece.
- ↑ "In rewind mode". The Hindu. 5 May 2011 இம் மூலத்தில் இருந்து 4 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230304163606/https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/in-rewind-mode/article1993343.ece.
- ↑ Kumar, Ashok (1 March 2018). "வின்னர் படத்தில் நடித்த M.N ராஜம் கனவர் யார் தெரியுமா, தற்போதைய நிலை - விவரம் உள்ளே". Tamil Behind Talkies. Archived from the original on 4 March 2023. Retrieved 4 March 2023.
- ↑ A. Srivathsan (19 October 2011). "Age hardly withers charm of Ponniyin Selvan". The Hindu. http://www.thehindu.com/arts/books/article2550847.ece.
- ↑ 9.0 9.1 "Ponniyin Selvan Movie Attempts – is it a curse or lack of purse : MGR – Gemini Ganeshan – Vyjayanthimala Bali". 600024.com. 31 May 2011. Retrieved 21 January 2012.
- ↑ A. Srivathsan (19 October 2011). "Age hardly withers charm of Ponniyin Selvan". The Hindu. http://www.thehindu.com/arts/books/article2550847.ece.