தங்கரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கரத்தினம்
இயக்கம்எஸ். எஸ். ராஜேந்திரன்
தயாரிப்புடி. வி. நாரயணசாமி
எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ்
கதைகே. ஜி. சேதுராமன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
கே. ஏ. தங்கவேலு
வி. கே. ராமசாமி
பிரேம்நசீர்
நாகேஷ்
விஜயகுமாரி
எம். என். ராஜம்
பி. ஹேமலதா
புஷ்பமாலா
மீனாட்சி
வெளியீடுநவம்பர் 25, 1960
ஓட்டம்.
நீளம்15891 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கரத்தினம் (thangarathinam) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கதைச்சுருக்கம்[தொகு]

தங்கம் சென்னையில் படிக்கும் ஒரு பணக்கார குடும்பத்து இளைஞன் , விடுமுறை நாட்களில் தனது கிராமத்திற்கு செல்லும் போது, ​ஏழைப் பெண்ணான ரத்னத்தைச் சந்திக்க இருவரும் காதலிக்கிறார்கள். தங்கத்தின் தந்தை மிராசுதார் நல்லமுத்து பிள்ளைக்கு இக் காதல் பற்றி தெரிவதற்கு முன்னால் அவன் சென்னைக்கு வந்து விடுகிறான். செல்வம் தங்கத்தின் நண்பன், சீதை மற்றும் மீனா இரண்டு பெண்கள் செல்வத்தை காதலிக்கிறார்கள். ஆனால் செல்வம் சீதையைத்தான் நேசிக்கிறான். மீனாவின் தாயாருக்கு உடல் நலமில்லாத காரணத்தால், அவள் கிராமத்திற்கு செல்லும் போது, ​​அவளுடைய தாயார் ஏற்கனவே இறந்துவிடுகிறார். அவளது தந்தை வடிவேலுவிற்கு தனது கடன்களைத் தீர்க்கும் வழி தெரியாத காரணத்தால், மிராசுதார் நல்லமுத்து பிள்ளை அவர்களுக்கு உதவ முன்வருகிறார், மேலும் அவர் மீனாவை இரண்டாம் தாரமாக மணக்கிறார். தனது தந்தை வயது முதிர்ந்த ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிந்தவுடன் தங்கம் அவனது தாயைப் பார்க்க வீட்டுக்குத் திரும்புகிறான். மீனா தனது நண்பன் செல்வத்தை ஏமாற்றி விட்டதாக தங்கம் நினைக்கிறான். அதனால் அவன் வீட்டை விட்டு வெளியேறி, சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். அவன் தனது வாழ்வாதாரத்திற்காக ஒரு வேலைக்கு செல்கிறான். ரத்னத்தையும் அவளுடைய தந்தை வீராசாமியையும் அவருடைய தந்தையார் தவறாக நடத்துவதை அறிந்து அவர்களைச் சந்தித்து ஆறுதல் அளிக்கிறான். மீதமுள்ள பிரச்சினைகள் எவ்வாறு சரியாகிறது என்பது மீதமுள்ள கதையாகும்.

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை தஞ்சை ராமையாதாஸ், அ. மருதகாசி, குடந்தை கிருஷ்ணமூர்த்தி, எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோர் யாத்தனர். எஸ். எஸ். ராஜேந்திரன் ஒரு நாட்டுப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். பி. சுசீலா, கே. ஜமுனாராணி, சி. எஸ். ஜெயராமன், டி. எம். சௌந்தரராஜன் ஆகியோர் பின்னணி பாடினார்கள் .[2]

எண். பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 எதையும் தாங்கும் மனசு டி. எம். சௌந்தரராஜன் & கே. ஜமுனாராணி தஞ்சை ராமையாதாஸ் 03:14
2 துன்பம் தீராதோ, துயரம் மாறாதோ எஸ். எஸ். ராஜேந்திரன் 02:23
3 ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா அ. மருதகாசி
4 இன்னொருவர் தயவெதற்கு பி. சுசீலா
5 எனக்கு நீ, உனக்கு நான் 02:33
6 சந்தனப் பொதிகையின் தென்றலெனும் சி. எஸ். ஜெயராமன் குடந்தை கிருஷ்ணமூர்த்தி 03:14
7 மாமரத்து சோலையிலே எஸ். எஸ். ராஜேந்திரன் நாட்டுப்பாடல்

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-04-27 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170427023849/http://www.lakshmansruthi.com/cineprofiles/1960-cinedetails23.asp. பார்த்த நாள்: 2022-05-07. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 199. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கரத்தினம்&oldid=3804373" இலிருந்து மீள்விக்கப்பட்டது