உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜசுலோசனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜசுலோசனா
பிறப்புபிள்ளையார்செட்டி பக்தவத்சலம் நாயுடு ராஜசுலோசனா
(1935-08-15)ஆகத்து 15, 1935
விசயவாடா, சென்னை மாகாணம்
இறப்புமார்ச்சு 5, 2013(2013-03-05) (அகவை 77)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1950கள்- 1970கள்
வாழ்க்கைத்
துணை
சி. எஸ். ராவ்

ராஜசுலோசனா (Rajasulochana, தெலுங்கு: రాజసులోచన, ஆகத்து 15, 1935 - மார்ச் 5, 2013, அகவை 77) என்பவர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையுமாவார்.[1] இவர் 300 இக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]

முந்தைய வாழ்க்கை

[தொகு]

ராஜசுலோசனா 1935 ஆகத்து 15 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெசாவாடாவில் (இப்போது விஜயவாடா) பிறந்தார். இவரது தந்தை, பிள்ளையார்செட்டி பக்தவத்சலம் நாயுடு இந்திய இரயில்வேயில் பணிபுரிந்தார். அவர் மதராசுக்கு எம்&எஸ்.எம் இரயில்வேயின் பொது மேலாளருக்கு தனி உதவியாளராக பணி மாற்றப்பட்டார்.[3]

தொழில்

[தொகு]

லலிதம்மா, கே. என். தண்டாயுதபாணி பிள்ளை, ஆச்சார்யுலு, வேம்படி சின்ன சத்யம், கிருஷ்ணகுமார், விஷ்ணு வியாசர்கர், கலாமண்டலம் மாதவன் ஆகியோரிடம் இந்திய பாரம்பரிய நடனத்தைக் கற்றார். 17 வயதில் நடிக்க வந்த இவர் குப்பி வீரண்ணா குணசாகரி என்ற கன்னடப் படத்தின் வழியாக திரைப்படத் துறையில் 1953 இல் அறிமுகமாகினார். தமிழில் சத்யசோதனை படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சுமார் 274 படங்களில் நடித்தார். எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், எஸ். எஸ். ராஜேந்திரன், பிரேம் நசீர், ஏ. பி. நாகராசன், எம். என். நம்பியார் போன்ற தென்னிந்திய சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்தார்.

புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம்

[தொகு]

பின்னாளில் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோது நடன பள்ளிகள் நடத்தி வந்தார். பின்னர் மீண்டும் இந்தியா திரும்பி சென்னையில் "புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்" என்னும் நாட்டியப் பள்ளியை துவக்கி நாட்டிய கலைஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். 1986 இல் அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடியது. இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல நடன நிகழ்ச்சிகளை வழங்கினார். மேலும் நாட்டிய நாடகங்களுக்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்கை

[தொகு]

இவருக்கு முதல் திருமணத்தின் வழியாக ஒரு மகன் இருந்தார், அது விவாகரத்தில் முடிந்த பிறகு, அ திரைப்பட நடிகரும், இயக்குநருமான சி. எஸ். ராவ் என்பவரை மணந்தார். அவர்களுக்கு இரட்டை மகள்கள் பிறந்தனர். ஒரு மகள் சென்னையில் வசிக்கிறார். மற்றொரு மகளும் மகனும் இல்லினாய்சின் சிகாகோவில் வசிக்கின்றனர்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]

கதாநாயகியாகவும், குணசித்திர, வில்லி வேடங்களிலும் திரைப்படங்களில் நடித்தார்.

1950கள்

[தொகு]

1960கள்

[தொகு]

1970கள்

[தொகு]

1980கள்

[தொகு]

1990கள்

[தொகு]

மறைவு

[தொகு]

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ராஜசுலோசனா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு 2013 மார்ச் 5 காலையில் தனது 77வது அகவையில் காலமானார். இவருக்கு ஷியாம் சுந்தர், ஸ்ரீ, தேவி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் ராவ் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜசுலோசனா&oldid=4363394" இலிருந்து மீள்விக்கப்பட்டது