ஜமுனா (நடிகை)
ஜமுனா | |
---|---|
![]() | |
பிறப்பு | [1] அம்பி (கர்நாடகம்), சென்னை மாகாணம், இந்தியா (இன்றைய கருநாடகம்) | 30 ஆகத்து 1936
இறப்பு | 27 சனவரி 2023 | (அகவை 86)
தேசியம் | இந்தியா |
பணி | நடிகர் மற்றும் அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1952 - 1990 |
சமயம் | இந்து |
பெற்றோர் | தந்தை : ஶ்ரீனிவாசன் ராவ் தாயாா் : கௌசல்யாதேவி |
வாழ்க்கைத் துணை | ஜிலூரி ரமணா ராவ் (m. 1965 - 2014; dead) |
பிள்ளைகள் | மகன் : வம்சிகிருஷ்ணா (பி 1966) மகள் : சரவந்தி (பி 1968) |
ஜமுனா (30 ஆகத்து 1936 – 27 சனவரி 2023) தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்தார். 1953இல் புட்டிலு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[1]
எல். வி. பிரசாதின் மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் நடித்தபிறகு இவர் புகழ்பெற்றார்.[2]
இளமைக்காலம்[தொகு]
ஜனா பாய் என்ற இயற்பெயர் கொண்ட ஜமுனா கர்நாடகாவில் உள்ள ஹம்பி எனுமிடத்தில் நிப்பானி ஶ்ரீனிவாசன் ராவ் - கௌசல்யாதேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலா எனுமிடத்தில் வளர்ந்தார்.[1] நடிகை சாவித்திரி இவருடைய வீட்டில் தங்கியிருந்தார். அதனால் சாவித்திரி ஜமுனாவை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார்.
தொழில்[தொகு]
ஜமுனா பள்ளியில் மேடை நடிகராக இருந்தார். அவருடைய அன்னை ஹார்மோனியம் போன்றவற்றை இசைக்க கற்றுத் தந்தார். டாக்டர் காரிகாபதி ராஜா ராவ் மா பூமி என்ற ஜமுனாவின் நாடகத்தினைப் பார்த்தவர், தன்னுடைய புட்டிலு திரைப்படத்தில் நடிகையாக்கினார்.[1] தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த ஜமுனா, அரசியலிலும் இணைந்தார். 1980களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ராஜமிந்திரி மக்களவைத் தொகுதியில் 1989இல் தேர்வு செய்யப்பட்டார். 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
விருது[தொகு]
- 1968: சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - மில்லன்
- 2008: என்டிஆர் தேசிய விருது
திரைப்படங்கள்[தொகு]
தமிழ்[தொகு]
- மிஸ்ஸியம்மா (1955)
- தெனாலி ராமன் (1956)
- தங்கமலை ரகசியம் (1957)
- பொம்மை கல்யாணம் (1958)
- நல்ல தீர்ப்பு (1959)
- தாய் மகளுக்கு கட்டிய தாலி (1959)
- மருதநாட்டு வீரன் (1961)
- நிச்சய தாம்பூலம் (1962)
- மனிதன் மாறவில்லை (1962)
- குழந்தையும் தெய்வமும் (1965)
- அன்பு சகோதரர்கள் (1973)
- தூங்காதே தம்பி தூங்காதே (1983)
மறைவு[தொகு]
நடிகை ஜமுனா உடல்நலக் குறைவால் ஐதராபாதில் தனது 86 ஆவது அகவையில் 27 சனவரி 2023 அன்று காலமானார்.[3][4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 Narasimham, M. L. (1 September 2013). "PUTTILLU (1953)". The Hindu இம் மூலத்தில் இருந்து 30 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140830225051/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/puttillu-1953/article5080178.ece.
- ↑ Madhavan, Pradeep (23 January 2015). "அமுதாய்ப் பொழிந்த நிலவு -அந்தநாள் ஞாபகம்". The Hindu இம் மூலத்தில் இருந்து 11 June 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150611154929/http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6812625.ece. பார்த்த நாள்: 14 February 2016.
- ↑ பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார், பிபிசி, சனவரி 27, 2023
- ↑ பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்
- ↑ Veteran actress Jamuna passes away at 86