புளிமூட்டை ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புளிமூட்டை ராமசாமி
Pulimooddai Ramasamy.jpg
புளிமூட்டை ராமசாமி, 1951
இயற் பெயர் தூத்துக்குடி இராமசுவாமி ஐயர்
பிறப்பு மே 15, 1912(1912-05-15)
தூத்துக்குடி, இந்தியா
தொழில் நடிகர், நகைச்சுவை நடிகர்
நடிப்புக் காலம் 1940கள் முதல்

புளிமூட்டை ராமசாமி (மே 15, 1912 - ) எனப் பரவலாக அறியப்பட்ட டி. ஆர். ராமசுவாமி ஐயர் தமிழ் நாடகத், திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.[1]

இவரது இயற்பெயர் தூத்துக்குடி இராமசுவாமி ஐயர்.[2] என். எஸ். கிருஷ்ணன் குழுவினருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] 1941 ஆம் ஆண்டில் வெளிவந்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தில் நடிக்கும் போது என். எஸ். கிருஷ்ணன் இவரை "புளிமூட்டை" என்றே அழைத்து வந்தார். இதனால் இவர் "புளிமூட்டை ராமசாமி'" என்றே பிரபலமாக அழைக்கப்பட்டார்.[3]

ராமசாமி முதலில் டி.கே.எஸ். நாடகக்கம்பனியில் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். கம்பனி கலைக்கப்பட்டதும், தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்று அங்கேயே திருமணமும் செய்து கோவில் ஒன்றில் பட்டர் வேலையில் சேர்ந்தார். சில மாதங்களில் மனைவி இறந்து விடவே, அவரது தந்தை மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்தார். பின்னர் என். எஸ். கிருஷ்ணனின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார்.[4]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "நட்சத்திரம் பிறந்த நாள்". குண்டூசி: பக். 34-35. மே 1951. 
  2. ராண்டார் கை. "Ali Babavum Naarpathu Thirudargalum 1941". தி இந்து. மூல முகவரியிலிருந்து 9 நவம்பர் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 செப்டம்பர் 2016.
  3. "எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபா" தமிழில் முதல் வண்ணப்படம்". GoldenTamilCinema.net. பார்த்த நாள் 5 செப்டம்பர் 2016.
  4. "”Pulimoottai” Ramaswami Iyer". தின இதழ். பார்த்த நாள் 5 செப்டம்பர் 2016.
  5. "Kubera Kuchela 1943". தி இந்து. பார்த்த நாள் 5 செப்டம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளிமூட்டை_ராமசாமி&oldid=2130969" இருந்து மீள்விக்கப்பட்டது