ஜுபிடர் பிக்சர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜுபிடர் பிக்சர்ஸ்
முன்னைய வகைலிமிடெட்
நிறுவுகை1935
நிறுவனர்(கள்)எம். சோமசுண்டரம் (ஜுபிடர் சோமு), எஸ். கே. மொய்தீன்
செயலற்றது1983
தலைமையகம்கோயம்புத்தூர் மற்றும் சென்னை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதென்னிந்தியா
தொழில்துறைதிரைப்படத்துறை
உற்பத்திகள்திரைப்படம்

ஜுபிடர் பிக்சர்ஸ் (Jupiter Pictures) என்பது 1934 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் எம். சோமசுந்தரம் ("ஜுபிடர் சோமு" என்று பிரபலமாக அறியப்படுகிறார்) மற்றும் எஸ். கே. மொகிதீன் ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தமிழில் 36 படங்கள், தெலுங்கில் 5, கன்னடத்திலும், இந்தியிலும் தலா 2 படங்கள், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு கூட்டு வெளியீடு என 46 படங்களை வெளியிட்ட ஒரு ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. 40 களின் பிற்பகுதியிலும் 50 களின் முற்பகுதியிலும், இவர்கள் கோயம்புத்தூரில் இருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவில் இயங்கினர். ஸ்டுடியோ மூடப்பட்டதைத் தொடர்ந்து, இவர்கள் சென்னைக்கு இடம்பெயர்ந்தனர். அடையாறில் உள்ள நெப்டியூன் ஸ்டுடியோவை வாங்கினர். அது பின்னர் சத்தியா ஸ்டுடியோவாக மாறியது. சென்னைக்கு இடம்பெயர்ந்த பிறகு ஜூபிடர் பிக்சர்ஸ் அலுவலகமானது மயிலாப்பூரில் இருந்த "மங்கள விலாஸ்" எனப்பட்ட பழைய அரண்மனை கட்டிடத்தை குத்தகை எடுத்து அதில் இயங்கி வந்தது.

ஏ. எஸ். ஏ. சாமி தனது பெரும்பாலான படங்களை ஜூபிடர் பிக்சர்சுக்காக இயக்கினார். 50 மற்றும் 60 களில் சென்னையில், ஜூபிடர் பல வெற்றிப் படங்களை தயாரித்தது. அவற்றில் மனோகரா (எல். வி. பிரசாத் 1957 இல் இயக்கியது), கற்புக்கரசி (எஸ். ஏ. சாமி 1957 இல் இயக்கியது), தங்கப்பதுமை (1965 இல் எஸ். ஏ. சாமி இயக்கியது), எல்லோரும் இந்நாட்டு மன்னர் "(1960, தாதிநேனி பிரகாச ராவ்), "அரசிளங்குமரி" (1961, சாமி) போன்றவை குறிப்பிடதக்கவை. இந்த தயாரிப்பு நிறுவனம் பிரபலமாவதற்கு முன்பு பிற தயாரிப்பாளர்களுடன் இணைந்து சில படங்களை தயாரித்தது. பிற்காலத்தில் இந்த நிறுவனத்தை எஸ். கே. அபிபுல்லாவால் (எஸ். கே. மொகிதீனின் மகன்) நிருவகிக்கப்பட்டது.[1]

ம.கோ.இரா நடித்த அரசிளங்குமரி, சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதுமை உள்ளிட்ட நான்கு படங்களை ஜுபிடர் பிக்சர்ஸ் ஒரே நேரத்தில் தயாரித்தது. இந்தப் படங்கள் பெரியதாக வெற்றியை ஈட்டாததால் ஜுபிடருக்கு சொந்தமான நெப்டியூன் ஸ்டுடியோ விற்பனைக்கு வந்தது. அதை ம.கோ.இரா வாங்கி சத்தியா ஸ்டுடியோஸ் என்று பெயர் மாற்றினார்.[2]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் மொழி இயக்குநர் இசையமைப்பாளர் குறிப்புகள்
1935 மேனகா தமிழ் பி. கே. இராசா சாண்டோ டி. கே. முத்துசாமி ஸ்ரீ சண்முகானந்தா டாக்கி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது
1936 சந்திரகாந்தா தமிழ் பி. கே. இராசா சாண்டோ
1938 அனாதைப் பெண் தமிழ் ரகுபதி சூரிய பிரகாஷ்
1942 கண்ணகி தமிழ் எம். சோமசுந்தரம் - ஆர். எஸ். மணி எஸ். வி. வெங்கட்ராமன் அந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படம்
1943 குபேர குசேலா தமிழ் ஆர். எஸ். மணி குன்னக்குடி வெங்கடராம ஐயர் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்று
1944 மகாமாயா தமிழ் டி. ஆர். ரகுநாத் எஸ். வி. வெங்கட்ராமன் - குன்னக்குடி வெங்கடராம ஐயர்
1946 ஸ்ரீ முருகன் தமிழ் எம். சோமசுந்தரம் - வி. எஸ். நாராயணன் எஸ். வி. வெங்கட்ராமன் - எஸ். எம். சுப்பையா நாயுடு ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்று
1946 வித்யாபதி தமிழ் ஏ. டி. கிருஷ்ணசாமி அடெப்பள்ளி ராமராவ்
1947 கஞ்சன் தமிழ் கோவை ஏ. ஐயாமுத்து - டி. ஆர். கோபு எஸ். எம். சுப்பையா நாயுடு
1947 ராஜகுமாரி தமிழ் ஏ. எஸ். ஏ. சாமி எஸ். எம். சுப்பையா நாயுடு ஆண்டின் அதிக வசூல் செய்யப்பட்ட படங்களில் ஒன்று மற்றும் எம். ஜி. இராமச்சந்திரனை நட்சத்திரமாக்கிய படம்
1948 அபிமன்யு தமிழ் எம். சோமசுந்தரம் - ஏ. காசிலிங்கம் எஸ். எம். சுப்பையா நாயுடு - சி. ஆர். சுப்பராமன்
1948 மோகினி தமிழ் லங்கா சத்தியம் எஸ். எம். சுப்பையா நாயுடு - சி. ஆர். சுப்பராமன்
1949 கன்னியின் காதலி தமிழ் கே. ராம்நாத் எஸ். எம். சுப்பையா நாயுடு - சி. ஆர். சுப்பராமன் கண்ணதாசனின் அறிமுகம்
மாதுரி தேவி இரட்டைப் பாத்திரத்தில் அறிமுகம், அதில் ஒரு பாத்திரதில் ஆண் வேடம்
1949 வேலைக்காரி தமிழ் ஏ. எஸ். ஏ. சாமி எஸ். எம். சுப்பையா நாயுடு - சி. ஆர். சுப்பராமன் கா. ந. அண்ணாதுரையின் முதல் படம்
1950 கிருஷ்ண விஜயம் தமிழ் சுந்தர் ராவ் நட்கர்ணி எஸ். எம். சுப்பையா நாயுடு - சி. எஸ். ஜெயராமன் டி. எம். சௌந்தரராஜனின் முதல்படம்
1950 விஜயகுமாரி தமிழ் ஏ. எஸ். ஏ. சாமி சி. ஆர். சுப்பராமன் - சி. எஸ். ஜெயராமன்
1951 கைதி தமிழ் எஸ். பாலச்சந்தர் எஸ். பாலச்சந்தர்
1951 மர்மயோகி தமிழ் கே. ராம்நாத் எஸ். எம். சுப்பையா நாயுடு - சி. ஆர். சுப்பராமன் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய படம், எம். ஜி. இராமச்சந்திரனின் வெற்றிப்படம்
1951 ஸ்த்ரீ சாகசம் தமிழ் வேதாந்தம் ராகவய்யா சி. ஆர். சுப்பராமன் விநியோகஸ்தர் மட்டுமே
1951 ஸ்த்ரீ சாகசம் தெலுங்கு வேதாந்தம் ராகவய்யா சி. ஆர். சுப்பராமன் விநியோகஸ்தர் மட்டுமே
1951 சுதர்சன் தமிழ் ஏ. எஸ். ஏ. சாமி - சுந்தர் ராவ் நட்கர்ணி ஜி. ராமநாதன் விநியோகஸ்தர் மட்டுமே
1952 ராணி இந்தி எல். வி. பிரசாத் சி. ஆர். சுப்பராமன் - டி. சி. தத்
1952 ராணி தமிழ் எல். வி. பிரசாத் சி. ஆர். சுப்பராமன் - டி. சி. தத்
1952 ஜமீந்தார் தமிழ் பி. வி. கிருஷ்ணன் ஜி. ராமநாதன் சங்கீதா பிக்சர்சுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது
1953 அழகி தமிழ் சுந்தர் ராவ் நட்கர்ணி பி. ஆர். மணி
1953 இன்ஸ்பெக்டர் தமிழ் ஆர். எஸ். மணி ஜி. ராமநாதன்
1953 இன்ஸ்பெக்டர் தெலுங்கு ஆர். எஸ். மணி ஜி. ராமநாதன்
1953 மனிதன் தமிழ் கே. ராம்நாத் எஸ். வி. வெங்கட்ராமன்
1953 நாம் தமிழ் ஏ. காசிலிங்கம் சி. எஸ். ஜெயராமன் மேகலா பிக்சர்சுடன் இணைந்து தயாரிக்கபட்டது
1954 மனோகரா இந்தி எல். வி. பிரசாத் எஸ். வி. வெங்கட்ராமன் - டி. ஆர். இராமநாதன் மனோகர் பிக்சர்சால் தயாரிக்கப்பட்டது
1954 மனோகரா தமிழ் எல். வி. பிரசாத் எஸ். வி. வெங்கட்ராமன் - டி. ஆர். இராமநாதன் மனோகர் பிக்சர்சால் தயாரிக்கப்பட்டது
1954 மனோகரா தெலுங்கு எல். வி. பிரசாத் எஸ். வி. வெங்கட்ராமன் - டி. ஆர். இராமநாதன் மனோகர் பிக்சர்சால் தயாரிக்கப்பட்டது
1954 சொர்க்க வாசல் தமிழ் ஏ. காசிலிங்கம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி பரிமளம் பிக்சர்சினால் தயாரிக்கப்படுகிறது
1955 சந்தோசம் தெலுங்கு சி. பி. தீக்சித் விஸ்வநாதன்-ராமமூர்த்தி வேலைக்காரியின் மறு ஆக்கம்
1957 கற்புக்கரசி தமிழ் ஏ. எஸ். ஏ. சாமி ஜி. ராமநாதன்
1958 கன்னியின் சபதம் தமிழ் டி. ஆர். ரகுநாத் டி. ஜி. லிங்கப்பா
1959 அமுதவல்லி தமிழ் ஏ. கே. சேகர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
1959 தங்கப்பதுமை தமிழ் ஏ. எஸ். ஏ. சாமி விஸ்வநாதன்-ராமமூர்த்தி
1960 எல்லாரும் இந்நாட்டு மன்னர் தமிழ் டி. பிரகாஸ் ராவ் டி. ஜி. லிங்கப்பா
1961 அரசிளங்குமரி தமிழ் ஏ. எஸ். ஏ. சாமி ஜி. ராமநாதன்

மேற்கோள்கள்[தொகு]

  1. Narasimham, M. L. (11 September 2014). "SANTHOSHAM (1955)".
  2. "அரசிளங்குமரி: படத்தில் இருந்து பாதியில் விலகிய இயக்குநர்". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1, சனவரி, 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுபிடர்_பிக்சர்ஸ்&oldid=3930438" இலிருந்து மீள்விக்கப்பட்டது