சி. ஆர். சுப்பராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சி. ஆர். சுப்பராமன்
C. R. Subbaraman
C R Subbaraman.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்புமே 18, 1924(1924-05-18)
பிறப்பிடம்சிந்தாமணி, திருநெல்வேலி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு27 சூன் 1952(1952-06-27) (அகவை 28)
சென்னை, சென்னை மாநிலம், இந்தியா
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர், தயாரிப்பாளர்
இசைக்கருவி(கள்)இசைக்கருவி/ஆர்மோனியம்/பியானோ
இசைத்துறையில்1943 முதல் 1952 வரை

சி. ஆர். சுப்பராமன் அல்லது சி. எஸ். ராம் (C. S. Subbaraman, தெலுங்கு: సి.ఆర్.సుబ్బరామన్ 18 மே 1924 – 27 சூன் 1952) என்பவர் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இவருடைய 28 வருட வாழ்க்கையில் 10 வருடங்கள் திரைப்படத்துறையில் நாட்டம் காட்டினார். இவர் தயாரித்த திரைப்படங்கள் புகழ் பெற்றனவாகத் திகழ்ந்தன.

திருநெல்வேலியில் உள்ள சிந்தாமணி எனும் கிராமத்தில் ராமசாமி ஐயர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய மூதாதையர்கள் ஆந்திர பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவருடைய குடும்பம் நன்றாக தெலுங்கு மொழி பேசும் ஒரு குடும்பம்.

கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேலை நாட்டிசை, நாட்டுப்புற இசை என்று பல இசை வகைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1940களிலேயே இலத்தீன் அமெரிக்க இசையை தமிழ்த் திரையிசைகளில் புகுத்தியவர்.[1]

தனது 16ஆம் வயதில் ஜி. ராமனாதனின் சகோதரர் சுப்பையா பாகவதரின் சிபாரிசில் சுப்பராமன் எச்.எம்.வி. நிறுவனத்தில் ஹார்மோனியம் வாசிப்பவராகப் பணியிலமர்ந்து, பின்னர் துணை இசை அமைப்பாளரானார்.[1]

இசையமைத்த திரைப்படங்கள்[தொகு]

 1. லவங்கி (1946)
 2. பைத்தியக்காரன் (1947)
 3. அபிமன்யு (1948)
 4. மோகினி (1948)
 5. ராஜ முக்தி (1948)
 6. கன்னியின் காதலி (1949)
 7. மங்கையர்க்கரசி (1949)
 8. ரத்தினகுமார் (1949)
 9. வேலைக்காரி (1949)
 10. நல்ல தம்பி (1949)
 11. பவளக்கொடி (1949)
 12. பாரிஜாதம் (1950)
 13. விஜயகுமாரி (1950)
 14. மச்சரேகை (1950)
 15. மணமகள் (1951)
 16. மர்மயோகி (1951)
 17. இசுதிரீ சாகசம் (1951)
 18. வனசுந்தரி (1951)
 19. ராணி (1952)
 20. தர்ம தேவதா (1952)
 21. காதல் (1952)
 22. தேவதாஸ் (1953)
 23. மருமகள் (1953)
 24. வேலைக்காரி மகள் (1953)
 25. சண்டிராணி (1953)

உசாத்துணை[தொகு]

 1. 1.0 1.1 "பாட்டொன்று கேட்டேன்". பிபிசி தமிழ். 28 அக்சோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆர்._சுப்பராமன்&oldid=3180527" இருந்து மீள்விக்கப்பட்டது