டி. ஜி. லிங்கப்பா
தோற்றம்
டி. ஜி. லிங்கப்பா | |
|---|---|
| பிறப்பு | திருச்சிராப்பள்ளி கோவிந்தராயுலு லிங்கப்பா 22 ஆகத்து 1927 திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா |
| இறப்பு | 5 பெப்ரவரி 2000 (அகவை 72) |
| தேசியம் | இந்தியர் |
| பணி | இசையமைப்பாளர் |
| பெற்றோர் |
|
| வாழ்க்கைத் துணை | சந்தம்மா |
டி. ஜி. லிங்கப்பா என பரவலாக அறியப்பட்ட திருச்சிராப்பள்ளி கோவிந்தராஜுலு லிங்கப்பா (22 ஆகத்து 1927 – 5 பிப்ரவரி 2000) பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், கன்னடம், தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.[1][2][3] இவரின் தந்தை ஜி. கோவிந்தராஜுலு "ஸ்பெஷல்" நாடகங்களில் ஆர்மோனியம் வாசிப்பவராகப் பணியாற்றியதோடு திருச்சியில் இசைக் கருவிகள் விற்பனை நிலையம் ஒன்றையும் நடத்தி வந்தார்.[a][4]
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]- சின்னதுரை (1952)
- கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954)
- விளையாட்டு பொம்மை (1954)
- முதல் தேதி (1955)
- வாழ்விலே ஒரு நாள் (1956)
- தங்கமலை ரகசியம் (1957)
- தேடி வந்த செல்வம் (1958)[5]
- கன்னியின் சபதம் (1958)
- சபாஷ் மீனா (1958)
- எங்கள் குடும்பம் பெரிசு (1958)
- புதுமைப்பெண்
- மாலா ஒரு மங்கல விளக்கு (1959)
- பாண்டித் தேவன் (1959)
- எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)
- சங்கிலித்தேவன் (1960)
- குழந்தைகள் கண்ட குடியரசு (1960)
- முரடன் முத்து (1964)
- தாயின் மேல் ஆணை (1966)
- தங்க மலர் (1969)
- கடவுள் மாமா (1974)
- வீர அமர்சிங்
- என்னைப் பார்
குறிப்புகள்
[தொகு]- ↑ லிங்கப்பாவின் தந்தை ஜி. கோவிந்தராஜுலு, இசையமைப்பாளர் ஜி. கோவிந்தராஜுலு நாயுடு ஆகிய இருவரும் வேறு வேறு நபர்கள் ஆவர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BLAST FROM THE PAST Sati Shakti 1964". Archived from the original on 2013-01-25. Retrieved 2013-01-25.
- ↑ "From vintage to the recent". Archived from the original on 2013-01-25. Retrieved 2013-01-25.
- ↑ "Sabhash Meena 1958". Archived from the original on 2013-01-25. Retrieved 2013-01-25.
- ↑ 4.0 4.1 வாமனன் (திசம்பர் 2014). திரை இசைக் களஞ்சியம் (முதல் ed.). சென்னை: மணிவாசகர் பதிப்பகம் 044 25361039. p. 650.
- ↑ "Thedi Vandha Selvam (1958) Tamil". தி இந்து. Retrieved 9 செப்டெம்பர் 2016.