ராஜகுமாரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜகுமாரி
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
யூப்பிட்டர்
எஸ். கே. மொக்தீன்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஎம். ஜி. ஆர், கே. மாலதி, எம். என். நம்பியார், எம். ஆர். சுவாமிநாதன், டி. எஸ். பாலையா, புளிமூட்டை ராமசாமி, கே. தவமணி தேவி, எம். எம். ஏ. சின்னப்பா தேவர், எஸ். வி. சுப்பையா, நாராயண பிள்ளை, டி. கே. சரஸ்வதி, எம். எம். ராதாபாய்
ஒளிப்பதிவுடபிள்யூ. ஆர். சுப்பாராவ், வி. கிருஷ்ணன்
படத்தொகுப்புடி. துரைராஜ்
வெளியீடுஏப்ரல் 11, 1947
நீளம்14805 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,[2] மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.[1]

இசை - பாடல்கள்[தொகு]

உடுமலை நாராயணகவியின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம். என். நம்பியார் வாயசைத்தார்.[3]

வசனம்[தொகு]

இப்படத்துக்கு உரையாடலை மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.[4] படத்தில் ‘கதை, வசனம், சினாரியோ & டைரக்‌ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் (பெயர் கையொப்ப வடிவில்) என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் வருகிறது.

ராஜகுமாரி மல்லிகாவை மீட்கப் புறப்படும் கட்டழகன் சுகுமாரன், வழியில் சர்ப்பத்தீவின் ராணி விஷாராணியிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது விஷாராணி, “காலையிலே ஜாலத் தீவுக்குப் போக கப்பல் தருகிறேன், இன்றிரவு நீ என்னை காமக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போ” என்கிறாள். விஷாராணி பேசும் இந்த ஒரு வசனம் அந்தக் கதாபாத்திரத்தின் குணத்தை மொத்தமாகச் சொல்லிச் சென்றது.[5]

கலைஞர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியபோது 23 வயது இளைஞர்.[5]

தனது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் மு.கருணாநிதி இப்படி நினைவு கூர்ந்திருக்கிறார் - “ஓராண்டு காலம் ’குடியரசு’ அலுவலகத்தில் பணியாற்றி, பெரியாரிடம் கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன். அதற்குப் பிறகு கோவையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு. திரைப்படத்துக்கு வசனம் எழுத வேண்டும் என்ற அழைப்பு. அதை அனுப்பியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி.

என்னுடைய நண்பர் துணையுடன் கோவை சென்று சாமியைச் சந்திந்தேன். ‘கோவை ஜுபிடர் நிறுவனம் எடுக்கவிருக்கும் ‘ராஜகுமாரி’ என்ற படத்துக்கு வசனம் எழுத வேண்டும்’ என்றார். இதை உடனடியாக பெரியாரிடம் தெரிவித்தேன். “போய் வா” என்று விடைகொடுத்தார்."[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மூன்று முதல்வர்களைக் கண்ட இயக்குநர்". தினத்தந்தி. பார்த்த நாள் 12 அக்டோபர் 2014.
  2. 2.0 2.1 ராண்டார் கை (செப்டம்பர் 5, 2008). "Rajakumari 1947". The Hindu. பார்த்த நாள் 20 செப்டம்பர் 2016.
  3. "எஸ்.எம்.சுப்பையா என்னும் எஸ்.எம்.எஸ்.,நாயுடு". தினகரன். பார்த்த நாள் 20 செப்டம்பர் 2016.
  4. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  5. 5.0 5.1 ஆர்.சி.ஜெயந்தன் (2018 ஆகத்து 10). "அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 10 ஆகத்து 2018.
  6. கலைஞர் மு. கருணாநிதி. நெஞ்சுக்கு நீதி. 1. திருமகள் நிலையம். 

வெளி இணைப்புகள்[தொகு]