திருச்சி லோகநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சி லோகநாதன்
இயற்பெயர்திருச்சி லோகநாதன்
இயற்பெயர்திருச்சி லோகநாதன்
பிறப்புசூலை 24, 1924(1924-07-24)
பிறப்பிடம்திருச்சிராப்பள்ளி, மெட்ராஸ் மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா
இறப்பு17 நவம்பர் 1989(1989-11-17) (அகவை 65)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை (பின்னணிப் பாடகர்), இந்திய பாரம்பரிய இசை,
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1947–1986

திருச்சி லோகநாதன் (Thiruchi Loganathan; 24 சூலை 1924 - 17 நவம்பர் 1989) தமிழ்த் திரைப்பட முதல் பின்னணிப் பாடகர். பல திரையிசைப் பாடல்களைப் பாடியவர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

திருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப்பதாகும்.

நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.

திரைப்படங்களில்[தொகு]

இவர் பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல், எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.

இவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948) திரைப்படத்தில் இடம்பெற்ற இனி வசந்தமாம் வாழ்விலே என்ற பாடல்.

திருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள்[தொகு]

பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்[தொகு]

  1. பட்டினத்தார் (1962 திரைப்படம்)

குடும்பம்[தொகு]

லோகநாதன் நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு டி. எல். மகராஜன், தீபன் சக்ரவர்த்தி ('பூங்கதவே தாள் திறவாய்' என நிழல்கள் படத்தில் பாடியவர்), தியாகராஜன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

குறிப்பிட தகுந்த இரண்டு நிகழ்வுகள்[தொகு]

  • நகைச்சுவை நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொலுவில் மதுரை சோமு பாடிய பாடலை இரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியைப் பரிசளித்தார்.
  • சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தைக் குறைக்கச் சொல்ல மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவரே டி. எம். செளந்தரராஜன் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • காரைக்கால் வானொலி நிலைய இசை நூலகம், வானொலி நண்பர்கள், வாரஇதழ்கள்
  1. ஜகந்நாத், கே. (சனவரி 1951). ""ரத்னஜோடி" சி. டி. ராஜகாந்தம்". பேசும்படம்: பக். 118-126. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சி_லோகநாதன்&oldid=3479163" இருந்து மீள்விக்கப்பட்டது