உள்ளடக்கத்துக்குச் செல்

வித்யாபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யாபதி
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
ஜுபிடர் பிக்சர்ஸ்
எஸ். கே. மொக்தீன்
கதைதிரைக்கதை ஏ. டி. கிருஷ்ணசாமி
கதை வடுவூர் துரைசாமி ஐயங்கார்
இசைஏ. ராம்ராவ்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
ஆர். பாலசுப்ரமணியம்
எம். என். நம்பியார்
எம். ஆர். சாமிநாதன்
டி. பிரேமாவதி
தவமணி தேவி
எம். எம். ராதாபாய்]
கே. மாலதி
வெளியீடு1946
ஓட்டம்.
நீளம்14750 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வித்யாபதி (Vidyapathi) 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் [1] வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், ஆர். பாலசுப்ரமணியம், கே. தவமணி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] ஜுபிடர் பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தை எம். சோமசுந்தரம் மற்றும் மொஹைதீன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர்.

கதைச்சுருக்கம்

[தொகு]

ஒரு இளைஞன் தன் பெற்றோரிடம், ஒரு பெண்ணுடன் பழகி, காதலித்துத்தான் திருமணம் செய்வேன் என்று சொல்கிறான். அவன் பத்திரிகையின் வந்த திருமண விளம்பரத்தில் ஒரு பெண்ணைப் பற்றிய குறிப்பைக் காண்கிறான். அந்தப் பெண்ணை சந்திக்க செல்லும் வழியில் அவனது உடைமைகள் திருடப்படுகின்றன. அவனுக்கு ஒரே ஒரு ஆடை மட்டுமே மிஞ்சுகிறது., இந்த நிலையில் ஒரு போலி சாது அந்த இளைஞனை தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அந்த போலிச்சாது இளைஞனை ஒரு யோகி போல மாற்றுகிறான். இதற்கிடையில், ஒரு நடனமாடும் தேவதாசியை விரும்பிய ஒரு ஜமீன்தார், அவரது மனைவியையும் மகளையும் புறக்கணிக்கிறார். அந்த போலி சாதுவும், யோகியும் (இளைஞன்) பணம் சம்பாதிப்பதற்கான ஒரு யோசனையுடன் அப்பெண்ணை சந்திக்கிறார்கள். ஆனால், இளைஞனும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறார்கள். பல திருப்பங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.[3]

நடிகர்கள் & படக்குழுவினர்

[தொகு]

பிலிம் நியூஸ் ஆனந்தன். அவர்களின் தகவல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]

டி. ஆர். இராமச்சந்திரன்
கே. தவமணி தேவி
திருச்சூர் பிரேமாவதி
மா. நா. நம்பியார்
டி. பாலசுப்பிரமணியம்
எம். ஆர். சுவாமிநாதன்
டி. என். சிவதாணு
எம். எஸ். எஸ். பாக்கியம்
டி. ஜி. கமலா தேவி
சி. கே. சரஸ்வதி
கே. மாலதி
எம். எம். ராதா பாய்

படக்குழு

[தொகு]
  • தயாரிப்பு = எம். சோமசுந்தரம் & மொஹைதீன்
  • இயக்குனர் = ஏ. டி. கிருஷ்ணசுவாமி
  • கதை = வடுவூர் கே. துரைசாமி அய்யங்கார்
  • திரைக்கதை & வசனங்கள் = ஏ. டி. கிருஷ்ணசுவாமி
  • ஒளிப்பதிவு = பி. ராமாசாமி
  • படத்தொகுப்பு = டி. ஆர். கோபி
  • கலை = ஏ. ஜே. டொமினிக்
  • நடனம் = கே. பி. குமார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை மற்றும் திருமதி ரெயின்பேர்ட்
  • ஆய்வகம் = சென்ட்ரல் ஸ்டுடியோஸ்

தயாரிப்பு

[தொகு]

திருமதி ரெயின்பர்ட் அமைத்த ஒரு மேற்கத்திய வகை நடனத்திற்கு கே. தவமணி தேவி நடனமாடியுள்ளார். பின்னணி இசையை சி. ஜி. ராப் மற்றும் அவரது குழுவினர் அமைத்தனர். தமிழ் பாடல் ஒன்று ஆங்கில வார்த்தைகளை கொண்டு அந்த நேரத்தில் வந்தது ஒரு புதுமையாக இருந்தது, ஆங்கில வார்த்தைகள் கே. தவமணி தேவியால் எழுதப்பட்டது. படத்தில் தனது ஆடைகளை அவரே வடிவமைத்து கொண்டார்.[4]

ஒலித்தொகுப்பு

[தொகு]

இப்படத்தின் இசை ஏ. ராமா ராவ், பாடல்கள் எழுதியது உடுமலை நாராயணகவி.. அருணாசல கவிராயர் ஸ்ரீரங்கநாதன் மீது பாடிய ஒரு கீர்த்தனை அப்படியே இப்படத்தில் சேர்க்கப்பட்டது. ஏன் பள்ளி கொண்டீரையா என்ற அந்த ராகமாலிகை பாடலை கே. வி. ஜானகி பாடியிருந்தார்.

வரவேற்பு

[தொகு]

திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை 2010 இல் எழுதியது: "சுவாரஸ்யமான கதை, நகைச்சுவை உரையாடல், நல்ல பாடல் மற்றும் எண்ணற்ற நடனங்கள் மற்றும் தவமணியின் அற்புதமான நடிப்பு போன்ற நல்ல அம்சங்கள் இருந்தன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 654.
  2. ராண்டார் கை (14 நவம்பர் 2010). "Vidyapathi 1946". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Vidyapathi-1946/article15685824.ece. பார்த்த நாள்: 26 பிப்ரவரி 2017. 
  3. Guy, Randor (18 June 2015). "Played many parts". தி இந்து. Archived from the original on 9 April 2017. பார்க்கப்பட்ட நாள் 9 April 2017.
  4. Guy, Randor (14 November 2010). "Vidyapathi 1946". தி இந்து. Archived from the original on 9 April 2017. பார்க்கப்பட்ட நாள் 9 April 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யாபதி&oldid=3859494" இலிருந்து மீள்விக்கப்பட்டது