பிலிம் நியூஸ் ஆனந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிலிம் நியூஸ் ஆனந்தன் எனப்படும் பி. ஜி. அனந்த கிருஷ்ணன்[1] (பிறப்பு; சென்னை 1928[2] - 21 மார்ச் 2016) என்பவர் தமிழ்த் திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என அழைக்கப்பட்டவர். இவர் சென்னையில் பிறந்தவர்.

பணிகள்[தொகு]

திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த ஆனந்தன் தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார். சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடமிருந்த தமிழ்த்திரைப்பட செய்திக் கோப்புகளையும் ஆவணங்களையும் தொகுத்து நூலாக வெளியிட தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்தது. “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் இந்நூல் வெளியிடப்பட்டது.[3][4]

பெற்ற சிறப்புகள்[தொகு]

மறைவு[தொகு]

பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னை, கோடம்பாக்கத்தில் 2016 மார்ச் 21 அன்று காலமானார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "எம். ஜி. ஆர். மன்னிப்பு கேட்டார்". தி இந்து (25 மார்ச் 2016). பார்த்த நாள் 27 மார்ச் 2016.
  2. "Behind the scenes of Tamil cinema". தி இந்து.
  3. "தமிழக அரசாணை". பார்த்த நாள் அக்டோபர் 17, 2016.
  4. "Book on history of Tamil films released". தி இந்து (24 அக்டோபர் 2004). மூல முகவரியிலிருந்து 28 அக்டோபர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 அக்டோபர் 2016.
  5. "பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் கோடம்பாக்கத்தில் இன்று காலமனார்". விகடன் (21 மார்ச் 2016). பார்த்த நாள் 21 மார்ச் 2016.

வெளி இணைப்பு[தொகு]