எம். சரோஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். சரோஜா
பிறப்புமயிலாடுதுறை
இறப்புஏப்ரல் 2, 2012(2012-04-02)
சென்னை, இந்தியா இந்தியா
தேசியம் இந்தியர்
பணிநடிகை, நகைச்சுவையாளர்
வாழ்க்கைத்
துணை
கே. ஏ. தங்கவேலு
பிள்ளைகள்சுமதி

எம். சரோஜா (இறப்பு: ஏப்ரல் 2, 2012) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவை வேடங்களில் தமது கணவர் கே. ஏ. தங்கவேலுவுடன் 1950 முதல் 1970 வரை பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படத்துறை[தொகு]

தன்னுடைய 14-ம் வயதில் இயக்குநர் கே. சுப்பிரமணியம் அவர்களால் எம். ஜி. ஆருடன் சர்வாதிகாரி (திரைப்படம்) மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.[1]. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 300க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களாக கல்யாணப் பரிசு, அறிவாளி, வணங்காமுடி, மருதநாட்டு வீரன், பூலோக ரம்பை, அரசிளங்குமரி, வண்ணக்கிளி, தேன் நிலவு, திருடாதே உள்ளிட்டவை அமைந்தன. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இல்வாழ்க்கை[தொகு]

நடிகர் கே. ஏ. தங்கவேலுவும் சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தார்.

மரணம்[தொகு]

சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த சரோஜா ஏப்ரல் 2, 2012 அன்று தமது 82வது அகவையில் மாரடைப்பால் காலமானார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "நகைச்சுவை நடிகர் 'டணால்' தங்கவேலு மனைவி எம் சரோஜா மரணம்!". ஒன்இந்தியா - தமிழ் (ஏப்ரல் 03, 2012). பார்த்த நாள் ஏப்ரல் 03, 2012.
  2. "நடிகை சரோஜா காலமானார்". தினமணி (ஏப்ரல் 03, 2012). பார்த்த நாள் ஏப்ரல் 03, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சரோஜா&oldid=3005299" இருந்து மீள்விக்கப்பட்டது