உள்ளடக்கத்துக்குச் செல்

ருத்ர தாண்டவம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருத்ர தாண்டவம்
சுவரொட்டி
இயக்கம்கே. விசயன்
தயாரிப்புஆர். ரமணி
கதைஏ. வீரப்பன்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புவி. கே. ராமசாமி
நாகேஷ்
சுமித்ரா 
ஒளிப்பதிவுஜி. ஆர். நாதன்
படத்தொகுப்புபி. கந்தசாமி
கலையகம்அலர்மேல் மங்கா புரொடக்சன்ஸ்
வெளியீடு1978
மொழிதமிழ்

ருத்ர தாண்டவம் (Rudhra Thaandavam) என்பது 1978 ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தை கே. விசயன் இயக்க,  நாகேஷ் மற்றும் வி. கே. ராமசாமி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்தனர். படத்தில் இடம்பெற்ற பாடல்களை வாலியும், கண்ணதாசனும் எழுதியுள்ளனர்.

கதை

[தொகு]

ருத்ரா தாண்டவம் படத்தின் கதையானது  ஒரு ஏழை பூசாரியின் கனவில் வரும் சிவபெருமான் அவருக்கு உலகத்தை பற்றிய  அறிவை வழங்குவதை சித்தரிப்பதே ஆகும்.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இப்படமானது சென்னை வாகினி படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்டது.

வரவேற்பு

[தொகு]

திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை எழுதியபடி, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத அளவுக்கு நல்ல வெற்றியை ஈட்டியது. "புதுமையான கதை", நாகேசின் சுவாரஸ்யமான நகைச்சுவை மற்றும் சிவபெருமான் வேடமேற்ற வி. கே. ராமசாமியின் அற்புதமான நடிப்பு போன்றவற்றை அவர் பாராட்டினார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]