உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய பறவை
இயக்கம்தாதா மிராசி
தயாரிப்புசிவாஜி பிலிம்ஸ்
கதைஆரூர்தாஸ் (வசனம்)
நன்னு (திரைக்கதை)
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
சரோஜா தேவி
எம். ஆர். ராதா
சௌகார் ஜானகி
வி. கே. ராமசாமி
நாகேஷ்
மனோரமா
ஓ. ஏ. கே. தேவர்
வெளியீடுசெப்டம்பர் 12, 1964
நீளம்4486 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதிய பறவை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படம் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த முதல் தமிழ் படம்.[2] சேஸ் ஏ குறூக்கட் சாடோ (Chase a Crooked Shadow) என்னும் ஆங்கில படத்தின் தளுவலாக வெளிவந்த வங்க மொழி திரைப்படமான சேஷ் அங்கா 1963இல் வெளியானது. இந்த வங்க மொழி படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு புதிய பறவை உருவாக்கப்பட்டது.[2]

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இப்படம் ஈஸ்ட்மன் கலர் வண்ணத்திரைப்படமாக வெளியானது. சித்ரா கதாபாத்திரத்தில் சௌக்கார் ஜானகி நடித்தால் சரியாக இருக்கும் என்று சிவாஜி பரிந்துரைத்தார்.[3]

வரவேற்பு

[தொகு]

இப்படம் திரையரங்குகளில் வெளியான பொழுது மக்களின் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. சில திரையரங்குகளில் 133 நாட்கள் ஓடியது.[4]

விமர்சனம்

[தொகு]

இத்திரைப்படம் வெளியான பொழுது கல்கி இதழில் வந்த விமர்சனத்தில் "தமிழ்த் திரையுலகில் ஒரு புது முயற்சி என்று வேணுமானால் பாராட்டலாம். ஆனால் மொத்தத்தில் 'புதிய பறவை' பழைய கூட்டைச் சேர்ந்தது தான்" என்ற எழுதினர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ராண்டார் கை (26 சூன் 2009). "Puthiya Paravai 1964". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3021631.ece. பார்த்த நாள்: 30 அக்டோபர் 2016. 
  2. 2.0 2.1 "புதிய பறவை: பார்த்த ஞாபகம் இல்லையோ..." இந்து தமிழ் திசை. 12 September 2023. Retrieved 2025-10-21.
  3. வாசகர், விகடன் (2022-03-28). "பிடிவாதமாக சௌகார் ஜானகியை நடிக்க வைத்த சிவாஜி! - `புதிய பறவை' மெமரீஸ்". vikatan.com/. Retrieved 2025-10-21.
  4. John Babu Raj (September 13, 2023). "133 நாள்கள் ஓடிய சிவாஜி ஃபிலிம்ஸின் முதல் படம் புதிய பறவை". News 18 Tamil Nadu. Retrieved 2025-10-21.
  5. ஆர். சீனிவாசன். "புதிய பறவை". கல்கி. p. 21.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பறவை&oldid=4371126" இலிருந்து மீள்விக்கப்பட்டது