உரிமைக்குரல்
உரிமைக்குரல் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | ஒய். கண்ணைய்யா |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் லதா |
கலையகம் | சித்ராலயா |
வெளியீடு | நவம்பர் 7, 1974 |
நீளம் | 4751 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உரிமைக்குரல் (Urimaikural) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா, அஞ்சலிதேவி, வி. எஸ். ராகவன், வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 1974 நவம்பர் 7 அன்று வெளியாகி ஒரு வெள்ளி விழாக் கண்ட வெற்றிப்படமாக ஆனது.
நடிப்பு
[தொகு]- கோபி என்கிற கோபிநாத்தாக ம. கோ. இராமச்சந்திரன்
- இராதாவாக லதா
- பார்வதியாக அஞ்சலிதேவி
- துரைசாமியாக மா. நா. நம்பியார்
- சுந்தரம் பிள்ளையாக எஸ். வி. சகஸ்ரநாமம்
- வி. கே. ராமசாமி
- சி. கே. சரஸ்வதி
- சபாபதியாக வி. எஸ். ராகவன்
- சதாசிவமாக நாகேஷ்
- பரமசிவமாக தேங்காய் சீனிவாசன்
- முத்தம்மாவாக புஷ்பலதா
- சச்சு/சரசாவாக சச்சு
- பாயாக டைப்பிஸ்ட் கோபு
- கிராமத்தானாக சாமிக்கண்ணு
- கரிகோல் ராஜு
- உசிலைமணி
- ஐயராக ஜெமினி மாலி
தயாரிப்பு
[தொகு]இப்படம் எடுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் அன்று சிந்திய ரதம் என்ற தலைப்பில் படம் தயாரிக்க திட்டமிட்டு, எம். ஜி. ராமச்சந்திரனைக் கொண்டு சில காட்சிகளை எடுத்தார். பின்னர் அந்தப் படம் நின்றுபோனது. ஸ்ரீதரின் கூற்றுப்படி, அப் படத்திலிருந்து இராமச்சந்திரன் பின்வாங்குவதற்கான காரணம் என்னவென்றால், அன்று சிந்திய ரதம் படத்தை எடுக்க திட்டமிட்ட அதே நேரத்தில் ஸ்ரீதர் புதுமுகங்களைக் கொண்டு காதலிக்க நேரமில்லை (1964) என்ற படத்தையும் தயாரித்து இயக்கிநார். அவர் காதலிக்க நேரமில்லை படத்தை வண்ணப் படமாக எடுத்தார். ஆனால் அன்றைய உச்ச நட்சத்திரமான இராமசந்திரனை வைத்து எடுக்கவிருந்த படமான அன்று சிந்திய ரதம் படத்தை கருப்பு வெள்ளை படமாக குறைந்த செலவில் எடுக்க திட்டமிட்டார், இது ராமச்சந்திரனை வருத்தப்படுத்தியிருக்கலாம், இதனால் அவர் அப்படத்தில் இருந்து விலகினார்.[1] தனது முந்தைய திரைப்படமான அலைகள் படத்தின் தோல்வி காரணமாகவும், அவரது மற்றொரு திரைப்படமான வைர நெஞ்சம் படத்திற்கு சிவாஜி கணேசனால் உரிய நேரம் ஒதுக்கு முடியாத நிலை இருந்ததால் அது தாமதமாகிவந்தது, இதனால் ஸ்ரீதர் நிதி நொருக்கடியில் தவித்தார்.[2] தனது நண்பரான இந்தி நடிகர் இராஜேந்திர குமாரின் ஆலோசனையின் படி, [2] இராமச்சந்திரனை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தார். அதற்கு இராமசந்திரனும் ஒப்புக் கொண்டார்.[3][4]
தெலுங்கு திரைப்படமான தசரா புல்லோடு (1971) என்ற படத்தின் பாதிப்பில் உரிமைக் குரல் எடுக்கபட்டதாக ஸ்ரீதர் கூறினார்; அவர் அந்த படத்திலிருந்து அடிப்படை கதையை மட்டுமே எடுத்து தமிழ் பதிப்பிற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்தார்.[5] கோபு அப்படத்தைப் பார்த்தபோது, சிவாஜி கணேசனுக்கு இந்தப் படத்தை உருவாக்குமாறு ஸ்ரீதருக்கு பரிந்துரைத்தார், இருப்பினும் இந்தப் படத்தை இராமச்சந்திரனைக் கொண்டு எடுக்கவிருப்பதாக ஸ்ரீதர் கூறியபோது கோபு அதிர்ச்சியடைந்தார். தனது முதல் இயக்கமான காசேதான் கடவுளடாவின் (1972) வெற்றியின் பின்னர் பல படங்களை இயக்கும் வாய்ப்புகளைப் பெற்ற கோபு, திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்த விரும்பினார், இது இருவரையும் தொழில் ரீதியாக பிரிய வழிவகுத்தது, ஆனால் இருவரும் நண்பர்களாகவே இருந்தனர்.[6] படத்திற்கான ஒளிப்பதிவை என். பாலகிருஷ்ணன் மேற்கொண்டார்; இருப்பினும், படத்தின் உச்சகட்டக் காட்சிகள் தம்புவால் படமாக்கப்பட்டன, ஏனெனில் பாலகிருஷ்ணன் மற்றொரு படத்திற்கான உச்சகட்டக் காட்சிகளை படமாக்க வேண்டியிருந்தது.[7] இந்த படம் பெரும்பாலும் இராமச்சந்திரனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகிலுள்ள முகலிவாக்கம் கிராமத்தில் படமாக்கப்பட்டது. அதே நேரத்தில் உச்சகட்டக் காட்சிகளை பகுதிகள் நடிகர்-தயாரிப்பாளர் கே. பாலாஜிக்கு சொந்தமான நிலத்தில் படமாக்கப்பட்டது. பாடல்கள் மைசூரில் படமாக்கப்பட்டன.[8][9]
பாடல்கள்
[தொகு]இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[10][11] "விழியே கதை எழுது" பாடல் காம்போதி இராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[12] இந்த பாடலும் "ஆம்பளைங்களா" பாடலும் கண்ணதாசனால் எழுதப்பட்டன. இராமச்சந்திரனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் அரசியல் பிரச்சினைகள் இருந்த நிலையில் கண்ணதாசனால் எழுதப்பட்ட பாடல்கள் ஸ்ரீதரால் சேர்க்கப்பட்டன.[5] ஆனால் ஸ்ரீதருக்கு இராமச்சந்திரன் இதை ஏற்றுக் கொள்வாரா என்ற தயக்கம் இருந்தது.[13] ஆகவே, ஸ்ரீதரும் விஸ்வநாதனும் கண்ணதாசனின் பாடலுக்காக இராமச்சந்திரனை சமாதானப்படுத்த முடிவு செய்தனர், மேலும் பாடலாசிரியர் மீது தனிப்பட்ட வெறுப்பைக் காட்டாமல் இராமச்சந்திரனும் அவர் எழுதிய பாடல்களையே பயன்படுத்திக் கொள்ளுமாறு சொன்னார்.[14][15]
பாடல்கள் பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ஆம்பளைங்களா நீங்க" | எல். ஆர். ஈசுவரி | 4:03 | |||||||
2. | "கல்யாண வளையோசை" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 4:33 | |||||||
3. | "மாட்டிக்கிட்டாரடி" | எல். ஆர். ஈசுவரி | 4:59 | |||||||
4. | "நேற்றுப் பூத்தாளே" | டி. எம். சௌந்தரராஜன் | 5:16 | |||||||
5. | "ஒரு தாய் வயிற்றில்" | டி. எம். சௌந்தரராஜன் | 4:45 | |||||||
6. | "பொன்னா பொறந்தா" | டி. எம். சௌந்தரராஜன் | 4:32 | |||||||
7. | "விழியே கதை எழுது" | கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா | 5:38 | |||||||
மொத்த நீளம்: |
33:46 |
வெளியீடும் வரவேற்பும்
[தொகு]ஆனந்த விகடன் படத்தை சாதகமாக விமர்சனம் செய்தது. குறிப்பாக அதன் வேகத்தையும், இறுதிக்கட்டக் காட்சியையும் பாராட்டியது.[16] படம் ஒரு வெள்ளி விழா கண்டு வெற்றிப்படமாக ஆனது.[17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sri Kantha, Sachi (6 June 2014). "MGR Remembered – Part 18 | A review of two MGR-related books". Ilankai Tamil Sangam. Archived from the original on 21 December 2022. Retrieved 17 December 2022.
- ↑ ஸ்ரீதர், டைரக்டர் (27 September 1992). "பெருந்தன்மைக்கு ஒரு எம்.ஜி.ஆர்!". Kalki. pp. 56–57. Archived from the original on 29 January 2023. Retrieved 17 December 2022 – via Internet Archive.
- ↑ Rangarajan, Malathi (21 July 2016). "The director's fine cut". தி இந்து இம் மூலத்தில் இருந்து 17 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180517053815/http://www.thehindu.com/features/friday-review/art/The-director%E2%80%99s-fine-cut/article14501577.ece.
- ↑ Veeravalli, Shrikanth (2013). MGR: A Biography. Rainlight. p. 45. ISBN 9788129129062.
- ↑ 5.0 5.1 ஸ்ரீதர், டைரக்டர் (18 October 1992). "விழியே, கதை எழுது" (PDF). Kalki. pp. 49–50. Retrieved 8 April 2024 – via Internet Archive.
- ↑ நரசிம்மன், டி. ஏ. (15 November 2018). "சி(ரி)த்ராலயா 42: நண்பர்களின் பிரிவு!". இந்து தமிழ் திசை (in Tamil). Archived from the original on 1 February 2023. Retrieved 1 February 2023.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ ஸ்ரீதர், டைரக்டர் (4 October 1992). "காமிரா தம்பு தூக்கிப்போட்ட வெடிகுண்டு!" (PDF). Kalki. pp. 59–60. Retrieved 8 April 2024 – via Internet Archive.
- ↑ ஸ்ரீதர், டைரக்டர் (11 October 1992). "எம்.ஜி.ஆர் விட்ட சவால்!" (PDF). Kalki. pp. 14–16. Retrieved 8 April 2024 – via Internet Archive.
- ↑ ராம்ஜி, வி. (8 November 2022). "உள்ளம் கவர்ந்த 'உரிமைக்குரல்': இன்னும் நம்மை இழுக்கும் 'விழியே கதை எழுது!'". Kamadenu. Archived from the original on 6 December 2022. Retrieved 17 March 2023.
- ↑ "Urimaikural Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Mossymart. Archived from the original on 5 November 2021. Retrieved 16 July 2022.
- ↑ "Urimaikkural (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 7 November 1974. Archived from the original on 9 November 2022. Retrieved 9 November 2022.
- ↑ Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 168. கணினி நூலகம் 295034757.
- ↑ Sri Kantha, Sachi (27 December 2019). "MGR Remembered – Part 54 | An Overview of the Final 31 movies of 1970s". வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. Archived from the original on 31 October 2020. Retrieved 4 April 2021.
- ↑ Sri Kantha, Sachi (15 March 2021). "MGR Remembered – Part 60 | Tackling rivals Karunanidhi – Kamaraj and tending Sridhar". வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. Archived from the original on 28 March 2021. Retrieved 4 April 2021.
- ↑ ஸ்ரீதர், டைரக்டர் (25 October 1992). "உரிமைக்குரலின் வெற்றி!" (PDF). Kalki. pp. 73–74. Retrieved 8 April 2024 – via இணைய ஆவணகம்.
- ↑ "சினிமா விமர்சனம்: உரிமைக் குரல்". Ananda Vikatan. 8 December 1974. Archived from the original on 16 July 2022. Retrieved 16 July 2022.
- ↑ செல்வராஜ், என். (20 March 2017). "வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்". Thinnai. Archived from the original on 16 July 2021. Retrieved 16 July 2021.