தில் ஏக் மந்திர்
தில் ஏக் மந்திர் Dil Ek Mandir | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
இசை | ஷங்கர் - ஜெய்கிஷன் |
நடிப்பு | இராஜேந்திர குமார் மீனாகுமாரி ராஜ்குமார் |
ஒளிப்பதிவு | ஏ. வின்செண்ட் |
படத்தொகுப்பு | எம். எம் சங்கர் |
வெளியீடு | 18 சனவரி 1963 [1] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
மொத்த வருவாய் | ₹11 மில்லியன் (2020 இல் நிகர மதிப்பு ₹680 million or US$8.5 மில்லியன்) [2] |
தில் ஏக் மந்திர் (Dil Ek Mandir) என்பது 1963 ஆண்டைய இந்தி காதல் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை ஸ்ரீதர் இயக்கியுள்ளார். படத்தில் இராஜேந்திர குமார், மீனாகுமாரி, ராஜ்குமார், மெஹ்மூத் ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு இரட்டை இசையமைப்பளர்களான ஷங்கர் - ஜெய்கிஷன் இசையமைத்தனர். இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்று, எல்லோரும் ரசித்தனர். படமும் பெரிய வெற்றியை ஈட்டியது. இப்படம் தமிழ்த் திரைப்படமான ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) படத்தின் மறு ஆக்கமாகும்.[3]
நடிகர்கள்
[தொகு]- ராஜேந்திர குமார் - மரு தர்மீஷ்
- மீனாகுமாரி– சீதா
- ராஜகுமார்– ராம்
- மெஹ்மூத் – லல்லு லால்
- குட்டி பத்மினி – உமா
- சுபா கோட்டே - மைனாவதி
- மன்மோகன் கிருஷ்ணா - பிலிப்
- ஆச்சால சட்சேவ் - தர்மேஷின் தாயார்
தயாரிப்பு
[தொகு]தில் ஏக் மந்திர் படமானது ஸ்ரீதர் இயகிய தமிழ் படமான நெஞ்சில் ஓர் ஆலயம் (1962). படத்தின் மறு ஆக்கமாகும். மொத்த படமும் 27 நாட்களில் படமாக்கி முடிக்கப்பட்டது.
விருதுகள்
[தொகு]இந்தப் படமானது 11வது பிலிம்பேர் விருதுகளில் ராஜ் குமாருக்குச் சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதையும், சிறந்த உரையாடலுக்கான விருதை அர்ஜுன் தேவுக்கும் பெற்றுத் தந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://bestoftheyear.in/movie/dil-ek-mandir/
- ↑ "Box Office 1963". Box Office India. Archived from the original on 22 செப்டெம்பர் 2012.
- ↑ Mahaan, Deepak (29 January 2010). "Dil Ek Mandir (1963)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150929052051/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article788918.ece. பார்த்த நாள்: 10 April 2014.