உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு ஓடை நதியாகிறது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு ஓடை நதியாகிறது
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புசி.வி.ஸ்ரீதர்
கதைசி.வி.ஸ்ரீதர்
இசைஇளையராஜா
நடிப்புரகுவரன்
சுமலதா
மனோசித்ரா
பிரதாபசந்திரன்
கலையகம்சித்ராலயா மூவீஸ்
விநியோகம்சித்ராலயா மூவீஸ்
வெளியீடு1983
ஓட்டம்130 நிமிடங்கள்
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ 35 இலட்சம்

ஒரு ஓடை நதியாகிறது என்ற திரைப்படம் ரகுவரன் முன்னணி பாத்திரத்தில் நடித்து, ஸ்ரீதரால் எழுதி இயக்கி தயாரிக்கப்பட்டு 1983 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்[1] புகழ் பெற்ற நடிகர் டி.எஸ். பாலையாவின் மகள் மனோசித்ராவும் நடிகை சுமலதாவும் இப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்[தொகு]

ரகுவரன் தனது நண்பருடன் வெளியூர் சென்று விருந்து முடிந்து இரவு திரும்பி வருகையில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. அப்பெண்ணைக் கண்டவுடன் மோகித்த ரகுவரன் அவளைக் கற்பழித்துவிட்டு, அங்கேயே விட்டு விட்டுச் சென்றுவிடுகிறார். ரகுவரன் இச்சம்பவத்தைப் பற்றித் தனது நண்பரிடம் பேசுகிறார். அவருடைய நண்பரும் அவளும் இச்சம்பவத்தை மறந்திருப்பாள் எனவும் அந்தப் பெண்ணைத் தேட வேண்டாம் என்றும் ஆலோசனை கூறுகிறார். ஆனால் குற்ற உணர்ச்சியால் தாக்கப்பட்ட ரகுவரன் அப்பெண்ணைத் தேடி வருகிறார். ஆனால் அவளைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

இதற்கிடையில் அப்பெண்(சுமலதா) கர்ப்பமடைகிறாள். இச்சம்பவத்தைப் பற்றி வெளியில் சொல்லமுடியாத நிலையில் மிகவும் வேதனையுடன் அவளுடைய தந்தையுடன் (பிரதாப்சந்திரன்) அந்த ஊரிலிருந்து வேறு புதிய இடத்திற்கு இடம் மாறுகிறாள். அங்கே அவள் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்த தீராத மழைக்கால இரவில் அவள் கண்ட முகத்தை நினைவுபடுத்த முயற்சிக்கிறாள். இதற்கிடையில், அனைவருடைய வற்புறுத்தலின் பேரில் ரகுவரன் மனோசித்ராவை திருமணம் செய்துகொள்கிறார். ஆனாலும் கூட ரகுவரன் தன்னால் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய நினைவாகவே இருக்கிறார்.

இதன் பிறகு சுமலதா, ரகுவரன் மற்றும் மனோசித்ராவிற்கு என்ன நடக்கிறது என்பதும் ரகுவரன் தனது மகனை எவ்வாறு அடையாளம் காண்கிறார் என்பதை படத்தின் முடிவின் மூலம் காணலாம்.

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

ஒரு ஓடை நதியாகிறது
சினிமா
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்26:38
இசைத்தட்டு நிறுவனம்Echo

இது எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, கிருஷ்ணசந்தர், பி. ௭ஸ். சசிரேகா மற்றும் எம். எஸ். இராஜேஸ்வரி ஆகியோரால் பாடப்பட்டு இசையமைப்பாளர் இளையராஜாவால் மிகவும் வெற்றிகரமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டத் திரைப்படமாகும்.[4][5] இதில் இடம் பெற்ற "தென்றல் என்னை முத்தமிட்டது" என்ற பாடல் மலயமாருத ராகத்தில் இசைக்கப்பட்டுள்ளது.[6].அதே போல "கனவு ஒன்று" என்ற பாடல் ரேவதி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[7] மேலும் "தலையைக் குனியும் தாமரையே" என்ற பாடல் ரீதிகவுளா ராகத்தின் அடிப்படையில் இசையமைக்கப்பட்டுள்ளது.[8]

# பாடல் பாடகர்கள் வரிகள்
1 "என் தேகம் அமுதம்" எஸ். ஜானகி வைரமுத்து
2 "தலையைக் குனியும் தாமரையே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எம். எஸ். இராஜேஸ்வரி வைரமுத்து
3 "தென்றல் என்னை முத்தமிட்டது" கிருஷ்ணசந்தர், பி. ௭ஸ். சசிரேகா வைரமுத்து
4 "கனவு ஒன்று " எஸ். ஜானகி வைரமுத்து
5 "ராத்திரி பொழுது" பி. ஜெயச்சந்திரன், எஸ். பி. சைலஜா கங்கை அமரன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆட்டம்னா ஆட்டம்!". ஆனந்த விகடன். 19 March 2016. https://www.vikatan.com/timepassvikatan/2016-mar-19/satire/116899-kollywood-actors-funny-dance-steps.html. பார்த்த நாள்: 8 February 2018. 
  2. "80-களின் நடிகர்கள் சந்திப்பு மனநிறைவை தருகிறது - சுமலதா". தினகரன் (இந்தியா). 14 March 2016 இம் மூலத்தில் இருந்து 9 பிப்ரவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180209003112/http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=20820&id1=3. பார்த்த நாள்: 8 February 2018. 
  3. "நடிகர் எம்ஆர்கே மரணம்". Filmibeat. 2 August 2012. https://tamil.filmibeat.com/news/actor-mrk-passes-away-158989.html. பார்த்த நாள்: 8 February 2018. 
  4. "Oru Odai Nadhiyagirathu-Songs". musicalaya. Archived from the original on 2014-01-08. பார்க்கப்பட்ட நாள் 2014-01-08. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)
  5. "இளையராஜா-100 இசை துளி". தினமலர். http://cinema.dinamalar.com/padmavibhushan_ilayaraja/songs.php. பார்த்த நாள்: 8 February 2018. 
  6. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/morning-ragas/article4793166.ece
  7. https://www.thehindu.com/features/friday-review/music/mystical-revathi/article4418462.ece
  8. https://www.thehindu.com/features/friday-review/music/riveting-ritigowla/article2659559.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_ஓடை_நதியாகிறது&oldid=3724711" இலிருந்து மீள்விக்கப்பட்டது