பூவேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவேலி
இயக்கம்செல்வா
தயாரிப்புராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைரமேஷ் செல்வன்
நகுலன் பொன்னுசாமி (வசனம்)
திரைக்கதைசெல்வா
இசைபரத்வாஜ்
நடிப்புகார்த்திக்
அப்பாஸ்
கௌசல்யா
ஹீரா
ஒளிப்பதிவுரகுநாத ரெட்டி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்கவிதாலயா புரொடக்சன்சு
விநியோகம்கவிதாலயா புரொடக்சன்சு
வெளியீடு4 திசம்பர் 1998
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூவேலி 1998-ம் ஆண்டு இயக்குனர் செல்வாவின் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், அப்பாஸ், கௌசல்யா, ஹீரா மற்றும் பலர் நடித்துத் திரைக்கு வந்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார்.[1]

கதைச் சுருக்கம்[தொகு]

இப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் காதலை வெவ்வேறு கோணத்தில் பார்க்கின்றனர். கண்டிப்பாகக் காதலித்த பிறகுதான் திருமணம் செய்ய கொள்ள வேண்டும் என கௌசல்யா நினைக்கிறார். ஆனால், ஹீராவோ திருமணத்திற்குப் பிறகு தான் காதலிக்க வேண்டும் என்கிறார். காதல் என்பது பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்யும் துரோகம் என ராதாரவி நினைக்கிறார். காதல் செய்பவராக கார்த்திக் வருகிறார்.

ஹீராவை துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் கார்த்திக். ஆனால், ஹீராவோ கார்த்திக்கை வெறுத்து அவர் மனதை புண்படுத்துகிறார். இறுதியாக, ’உனக்கு என்மேல் காதல் வரும்வரை நான் உனக்காக காத்திருப்பேன்’ என்று கூறி விடைபெறும் கார்த்திக், வரும் வழியில் தனது பள்ளித் தோழியான கௌசல்யாவைச் சந்திக்கிறார். அவரது கடந்தகால கதையைக் கேட்டு அவருக்கு உதவுவதற்காக அவரது கணவராக நடிக்க சம்மதித்து கௌசல்யாவின் வீட்டிற்கு செல்கிறார். கௌசல்யா வீட்டிலுள்ள அனைவரிடமும் கெட்ட பெயர் எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேற திட்டமிடுகிறார். ஆனால் அவரது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.

கார்த்திக்கும் கௌசல்யாவும் கணவன் மனைவியாக நடிக்கும் நேரத்தில் அவர்களையும் அறியாமல் ஒருவரின் மேல் ஒருவர்க்கு காதல் தோன்றுகிறது.

இதற்கிடையில், கார்த்திக் துரத்தித் துரத்திக் காதலிக்கும் போது வெறுத்த ஹீராவுக்கு கார்த்திக் மேல் காதல் வந்துவிட, அவர் கார்த்திக்கை தேடி கௌசல்யாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார். இதன்மூலமாக கௌசல்யா வீட்டிற்கு உண்மை தெரிந்துவிட, அவர்கள் கார்த்திக்கை அடித்து உதைக்கிறார்கள். அந்த நேரத்தில் மனோரமா (ராதாரவியின் அம்மா) தடுத்து உண்மைகளைக் கூற எல்லோரும் ஒன்றிணைகிறார்கள்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

பரத்வாஜின் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் 10 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[2]

  • "இதற்கு பெயர்" - ஹரிஹரன், சுஜாதா
  • "ஒரு பூ எழுதும் கவிதை" - உன்னிகருஷ்ணன், சித்ரா
  • "கதை சொல்ல" - கார்த்திக், சார்லி, மனோரமா
  • "ஓ சாலினி" - எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • "முத்து முத்து" - புஷ்பவனம் குப்புசாமி, சுவர்ணலதா
  • "வாழ்க்கை" - ஸ்ரீநிவாஸ்
  • "இதற்கு பெயர்" - ஹரிஹரன்
  • "நதியால் சாய" - பரத்வாஜ், ரேஷ்மா
  • "கதை சொல்ல" - பரத்வாஜ்
  • "பூவேலி" - இசை

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவேலி&oldid=3660529" இலிருந்து மீள்விக்கப்பட்டது