உள்ளடக்கத்துக்குச் செல்

ஆணை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆணை (திரைப்படம்)
இயக்கம்செல்வா
தயாரிப்புK. S. ஶ்ரீனிவாசன்
இசைடி.இமான்
நடிப்புஅர்ஜுன்,நமீதா, கீர்த்தி சாவ்லா
ஒளிப்பதிவுK. S. சிவா
விநியோகம்வாசன் விசுவல் வென்சுவர்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆணை (Aanai) 2005 இல் வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை இயக்குநர் செல்வா அவர்கள் எழுதி இயக்கியிருந்தார். இத் திரைப்படத்தில் அர்ஜுன், நமீதா மற்றும் கீர்த்தி சாவ்லா ஆகியோர் முன்னணி பாத்திரங்களிலும் வடிவேலு, சங்கவி மற்றும் மனோஜ் கே ஜெயன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்ததிருந்தனர். டி.இமான் இசையமைக்க, சிவாவின் ஒளிப்பதிவில் உருவான இத்திரைப்படம் 2005 டிசம்பரில் வெளியாகியது.[1] இது 2004 இல் வெளியான மேன் ஆஃப் ஃபயர் என்ற திரைப்படத்தின் மரு உருவாக்கம் ஆகும். மேலும் ஏக் அஜ்னபீ எனும் பெயரில் இந்தி மொழியில் வெளியானது

பாத்திரங்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

ஆரம்பத்தில் அர்ஜுனை வைத்து கர்ணா (1995) இயக்கிய இயக்குனர் செல்வா, நீண்ட இடைவெளியின் பின்னர் அர்ஜுனுடன் இணைந்தார். கிரி திரைப்படத்தினைத் தொடர்ந்து அர்ஜுன் இப்படத்தில் இணைகிறார் .[2] பரணிடப்பட்டது 2005-04-10 at the வந்தவழி இயந்திரம் 2005 ஹைதராபாத்தில் முன்னணி ஹீரோயின்களான நமீதா மற்றும் சங்கவியுடன் 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அர்ஜுன், நமீதா ஜோடி பாடல் மூன்று லண்டனில் படம்பிடிக்கப்பட்டது..[3] பரணிடப்பட்டது 2005-12-04 at the வந்தவழி இயந்திரம்

வெளியீடு

[தொகு]

இத் திரைப்படம் வெளீயீடு செய்யும் போது சற்று கால தாமதம் ஏற்பட்டது.[4] இத் திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் மிகவும் பிரபல்யமடைந்தமை குறிப்பிடத்தக்கது. பார்வையாளர்களை சீட் நுனிக்கு வர வைக்கும் த்ரில்லர் காட்சிகளுடன் நகரும் இப்படம் இறுதியில் சாதாரண மசாலா திரைப்படம் போல் முடிவடைவது ஏமாற்றத்தை அளித்ததாக சிஃபி வலைத்தளம் கூறியது.[https://web.archive.org/web/20130814034850/http://www.sify.com/movies/aanai-review-tamil-14042994.html பரணிடப்பட்டது 2013-08-14 at the வந்தவழி இயந்திரம் [5]]

பாடல்கள்

[தொகு]

டி. இமான் இசையமைத்திருந்தார்.

இல. பாடல் பாடகர்கள்
01 ஆணை (ஆங்கிலம்) டி.இமான்
02 ஏய் இடுப்பாட்டும் டி.இமான், ஶ்ரீலேகா பார்த்தசாரதி
03 அழகிய தரிசனம் மது பாலகிருஷ்ணன், பின்னி கிருஷ்ணகுமார்
04 சின்னஞ் சிறு கிளியே ஆனந்த்
05 பிகருடன் ஒருநாள் கார்த்திக், சைந்தவி
06 கும்ரு, கும்ரு ஶ்ரீ காளி சிதம்பரம், அனுபமா
07 சாரே ஜஹான் சே அச்சா ஶ்ரீனிவாஸ்
08 வருங்கால வீட்டுக்காரனே சுசி ரீட்டா

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.youtube.com/watch?v=G7EWxZaKS9c
  2. http://www.hindu.com/thehindu/fr/2005/03/11/stories/2005031100230200.htm பரணிடப்பட்டது 2005-04-10 at the வந்தவழி இயந்திரம்
  3. http://www.hindu.com/fr/2005/11/18/stories/2005111800100400.htm பரணிடப்பட்டது 2005-12-04 at the வந்தவழி இயந்திரம்
  4. http://www.behindwoods.com/features/News/News37/8-11-05/tamil-movies-news-arjun.html
  5. http://www.sify.com/movies/aanai-review-tamil-14042994.html பரணிடப்பட்டது 2013-08-14 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆணை_(திரைப்படம்)&oldid=3659387" இலிருந்து மீள்விக்கப்பட்டது