உள்ளடக்கத்துக்குச் செல்

ஹீரா ராசகோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹீரா ராசகோபால்
பிறப்புஹீரா ராசகோபால்
திசம்பர் 29, 1971 (1971-12-29) (அகவை 52)[1]
இந்தியா
பணிநடிகர், வலைப்பதிவர், செயற்பாட்டாளர்
செயற்பாட்டுக்
காலம்
1991–2000
வாழ்க்கைத்
துணை
புஷ்கர் மாதவ் (2002–2006)(மணமுறிவு பெற்றவர்)
வலைத்தளம்
http://www.heerarajagopal.com/index.html

ஹீரா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஹீரா ராஜகோபால் சென்னையில் பிறந்தவர். இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றார். அவர் 2002 ஆம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் மாதவ் நாட்டுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2006 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.

வாழ்க்கை

[தொகு]

ஹீரா ராஜகோபால், நடிகர் முரளியுடன் இணைந்து நடித்த இதயம் திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழிலும் தெலுங்கிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. சஞ்சய் தத் நடித்த அமானத் இந்தி திரைப்படத்தின் மூலம் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த நிர்ணயம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் கமல், மம்மூட்டி, சிரஞ்சீவி, அஜித் குமார், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வினீத், கார்த்திக், ரவி தேஜா, ரமேஷ் அரவிந்த், மற்றும் அனில் கபூர் போன்ற இந்திய முன்னணி திரைப்பட நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1991 இதயம் தமிழ்
நீ பாதி நான் பாதி தமிழ்
1992 பப்ளிக் ரவுடி தெலுங்கு
என்றும் அன்புடன் தமிழ்
1993 தசரதன் தமிழ்
முன்னறிவிப்பு தமிழ்
பேண்டு மாஸ்டர் தமிழ்
சபாஷ் பாபு தமிழ்
திருடா திருடா ராஜாத்தி தமிழ்
1994 நம்ம அண்ணாச்சி தமிழ்
தாட்பூட் தஞ்சாவூர் தமிழ்
தொங்கலா ராஜ்யம் தெலுங்கு
அமானத் கீதா இந்தி
தி ஜெண்டில்மேன் இந்தி
1995 சதி லீலாவதி பிரியா தமிழ்
நிர்ணயம் அன்னி மலையாளம்
மின்னமினுகினும் மின்னுகெட்டு பிங்கி மேனன் மலையாளம்
ஒரு அபிபாஷகன்றே கேஸ் டயரி இந்து மலையாளம்
1996 லிட்டில் சோல்ஜர்ஸ் அனிதா தெலுங்கு
ஸ்ரீ காரம் தெலுங்கு
கிருஷ்ணா தமிழ்
காதல் கோட்டை நேஹா தமிழ்
மிஸ்டர் பீச்சரா ஆஷா வர்மா இந்தி
ஔர் ஏக் பிரேம் கஹானி கோகிலா இந்தி
அவ்வை சண்முகி ரத்னா தமிழ்
1997 அஷ்வனம் தெலுங்கு
கலாவிதா கன்னடம்
செலிகாது தெலுங்கு
1998 ஆவிட மா ஆவிடே ஜான்சி தெலுங்கு
அந்தப்புரம் தெலுங்கு சிறப்புத் தோற்றத்தில்
படுத தியாகா தெலுங்கு
யாரே நீனு செலுவே கன்னடம்
யுவரத்ன ராணா தெலுங்கு
பூவேலி ஷாலினி தமிழ்
சுந்தர பாண்டியன் ரம்யா தமிழ்
1999 பெத்தமனுஷாலு தெலுங்கு
தொடரும் தமிழ்
அல்லுடு காடு வச்சாரு தெலுங்கு
சுயம்வரம் (1999 திரைப்படம்) தமிழ்

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹீரா_ராசகோபால்&oldid=3996718" இலிருந்து மீள்விக்கப்பட்டது