உள்ளடக்கத்துக்குச் செல்

சபாஷ் மீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபாஷ் மீனா
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புபி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
கதைகதை தாதா மிராசி (உரையாடல் நீலகண்டன்)
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புசிவாஜி கணேசன்
எஸ். வி. ரங்கராவ்
சந்திரபாபு
வி. ஆர். ராஜகோபால்
பி. ஆர். பந்துலு
மாலினி
சரோஜாதேவி
கிருஷ்ணாபாய்
பி. எஸ். ஞானம்
வெளியீடுசெப்டம்பர் 3, 1958
நீளம்15998 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சபாஷ் மீனா என்பது 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி, சந்திரபாபு, மாலினி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். பந்துலு, எஸ். வி. ரங்கராவ் ஆகியோர் துணைப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் 3 அக்டோபர் 1958 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் இந்தியில் தில் தேரா தீவானா (1962), கன்னடத்தில் அலியா கெலேயா (1971), மலையாளத்தில் சிரிக்குடுக்கா (1976) என மறு ஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

நடிகர்கள்

நடிகைகள்
 • மாலதியாக சரோஜாதேவி
 • மீனாவாக மாலினி
 • பார்வதியாக பி. எஸ். ஞானம்
 • கிருஷ்ணாபாய்
 • "ஆணாக பிறந்ததெல்லாம்" நடனக் கலைஞராக சந்திரா
 • சாந்தா

தயாரிப்பு[தொகு]

இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த சந்திரபாபு டித்திருந்தார். அதற்காக சிவாஜி கணேசனை விட ஒரு ரூபாய் கூடுதலாக சந்திரபாபு சம்பளம் வாங்கினார்.[1]

இசை[தொகு]

டி. ஜி. லிங்கப்பா இசையமைக்க பாடல் வரிகளை கு. மா. பாலசுப்பிரமணியம் எழுதினார்.[2] இபட்டத்தில் இடம்பெற்ற "காணா இன்பம் கனிந்ததேனோ" பாடல் இந்துஸ்தானி ராகமான பாகேசிறீயில் அமைக்கப்பட்டுள்ளது.[3]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"அலங்கார வள்ளியே" டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் 02:38
"ஆணாக பிறந்ததெல்லாம்" பி. சுசீலா, கே. ஜமுனா ராணி 03:31
"சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை" டி. எம். சௌந்தரராஜன் 03:18
"காணா இன்பம் கனிந்ததேனோ" பி. சுசீலா, டி. ஏ. மோதி 03:39
"நல்ல வாழ்வு காணலாமே" சூலமங்கலம் இராஜலட்சுமி 03:33
"ஓ சுயநலம் வெறிமிகு மாந்தர்களே" டி. எம். சௌந்தரராஜன் 03:19
"சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை" சூலமங்கலம் இராஜலட்சுமி 03:18
"ஏறுங்கம்மா சும்மா ஏறுங்கம்மா" ஜே. பி. சந்திரபாபு, டி. ஜி. லிங்கப்பா, பி. சுசீலா 06:24
"இன்பத்தின் வேகமா இதயத்தின் தாகமா" சூலமங்கலம் இராஜலட்சுமி 03:40
"செல்வம் நிலையல்லவே மனமே" டி. எம். சௌந்தரராஜன் 02:00

வெளியீடும், வரவேற்பும்[தொகு]

சபாஷ் மீனா 3 அக்டோபர் 1958 அன்று வெளியிடப்பட்டது.[4][5] இப்படம் ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது.[6] இது முன்னதாக 19 செப்டம்பர் 1958 இல் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் சில தாமதம் ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.[7] கர்நாடகம் போன்ற தமிழ் பேசாத பகுதிகளில் கூட இப்படம் பெரும் வெற்றி பெற்றது. தெலுங்கில் சபாஷ் பில்லா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது, அங்கு வெற்றிப் பெறவில்லை.[8]

மேற்கோள்கள்[தொகு]

 1. Kolappan, B. (28 November 2018). "On the anvil, a biopic on Chandrababu". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201108102044/https://www.thehindu.com/news/cities/chennai/on-the-anvil-a-biopic-on-chandrababu/article25609444.ece. 
 2. "Sabash Meena". Gaana. Archived from the original on 25 December 2014. பார்க்கப்பட்ட நாள் 25 September 2014.
 3. Jeyaraj, D.B.S. (12 August 2018). "'Kaanaa Inbam Kaninthathaeno' – Splendid "Singing in the Rain" Song ♫". dbsjeyaraj.com. Archived from the original on 22 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 January 2021.
 4. "51-60". nadigarthilagam.com. Archived from the original on 24 April 2021. பார்க்கப்பட்ட நாள் 24 April 2021.
 5. ராம்ஜி, வி. (4 October 2022). "'உள்ளத்தை அள்ளித்தா', 'தம்பிக்கு எந்த ஊரு'க்கெல்லாம் அக்கா 'சபாஷ் மீனா'". Kamadenu. Archived from the original on 4 October 2022. பார்க்கப்பட்ட நாள் 5 October 2022.
 6. "Sabash Meena". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 26 September 1958. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19580926&printsec=frontpage&hl=en. 
 7. "Sabash Meena". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 19 September 1958. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19580919&printsec=frontpage&hl=en. 
 8. Randor Guy (3 April 2009). "Sabhash Meena 1958". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140925132935/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/sabhash-meena-1958/article3021332.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாஷ்_மீனா&oldid=3958979" இலிருந்து மீள்விக்கப்பட்டது