மேல்நாட்டு மருமகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேல் நாட்டு மருமகள்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஏ. பி. நாகராசன்
தயாரிப்புசி. என். வெங்கடசாமி
(சி. என். வி. மூவீஸ்)
கதைஏ. பி. நாகராசன்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்[1]
நடிப்புசிவகுமார்
கமல்ஹாசன்
ஜெயசுதா
ஒளிப்பதிவுகே. எஸ். பிரசாத்
படத்தொகுப்புடி. விஜயரங்கம்
நடனம்வேம்படி சின்னசத்யம்
தங்கப்பன்
வெளியீடுமே 10, 1975
நீளம்3789 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேல் நாட்டு மருமகள் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் அமெரிக்க அம்மாயி எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

ஜூனியர் பாலையா இத்திரைப்படம் மூலம் திரைப்பட துறையில் அறிமுகமானார்.[4] பாடகர் உஷா உதூப் தமிழில் முதன்முறையாக இப்படத்தில் ஒரு பாடல் பாடியதோடு அப்பாடலுக்கு திரையிலும் நடித்துள்ளார்.[5] நடிகர் கமல்ஹாசன் மற்றும் வாணி கணபதி இணைந்து நடித்த ஒரே படமாகும், பின்னாளில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

பாடல்கள்[தொகு]

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது, மற்றும் 'பூவை செங்குட்டுவன்' , 'உளுந்தூர்பேட்டை சண்முகம்' , 'நெல்லை அருள்மணி' , 'திருச்சி பரதன்' , கீதா பிரியன் மற்றும் குயில் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

எண். பாடல் பாடகர்கள்
1 "கௌ வொன்டர்புல்" (How wonderful) எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
2 "கலைமகள் கை" வாணி ஜெயராம், டி.கே. கலா
3 "லவ் இஸ் எ பியூட்டிபுல்" (Love is a beautiful) உஷா உதூப்
4 "முத்தமிழ் பாட" வாணி ஜெயராம்
5 "பல்லாண்டு பல்லாண்டு" வாணி ஜெயராம், டி.கே. கலா
6 "சுகம் தரும்" ராஜேஷ், மனோகரி

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "இளையராஜா இசை அமைத்த முதல் படம் அன்னக்கிளி மாபெரும் வெற்றி". மாலை மலர் (28 ஏப்ரல் 2016). மூல முகவரியிலிருந்து 2015-02-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 மே 2021.
  2. "Melnattu Marumagal". Bravo HD Movies (1 ஆகஸ்ட் 2015). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2020.
  3. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்" (22 ஆகஸ்ட் 2019). பார்த்த நாள் 13 சனவரி 2021.
  4. "இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா! - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்". இந்து தமிழ் (28 சூன் 2020). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2020.
  5. ""நைட் கிளப் சிங்கரா இசைப் பயணத்தைத் தொடங்கியபோது..." - உஷா உதுப் ஷேரிங்ஸ்". ஆனந்த விகடன் (18 ஆகஸ்ட் 2020). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்நாட்டு_மருமகள்&oldid=3225851" இருந்து மீள்விக்கப்பட்டது