விவசாயி (திரைப்படம்)
Appearance
விவசாயி | |
---|---|
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் கே. ஆர். விஜயா |
வெளியீடு | நவம்பர் 1, 1967 |
நீளம் | 4434 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விவசாயி (Vivasaayee) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
1967 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதி எம்.ஜி. ராமச்சந்திரன் எம்.ஆர்.ராதாவால் தொண்டையில் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமடைந்து வந்தார். சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர் அவரை அங்கு சென்று பார்வையிட்டு விவசாயி படத்தில் நடிப்பதற்கான முன்பணத்தை கொடுத்தார்.[2] படத்தின் தலைப்புப் பாடல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வயல்களில் படமாக்கப்பட்டது.[3]
நடிகர்கள்
[தொகு]- ம. கோ. இராமச்சந்திரன் - முத்தையா
- எம். என். நம்பியார் - பண்ணையார் வேலுபாண்டியன்
- எஸ். ஏ. அசோகன் - குருசாமி
- வி. கே. ராமசாமி - சொக்கியின் தந்தை, (அடகு வியாபாரி)
- மேஜர் சுந்தர்ராஜன் - பண்ணையார் துரைசாமி
- சாண்டோ சின்னப்பா தேவர் - மாடசாமி
- நாகேஷ் - சொக்கன்
- கே. ஆர். விஜயா - விஜயா
- சி. ஆர். விஜயகுமாரி - காவேரி
- மனோரமா - சொக்கி
- எஸ். என். லட்சுமி - சிவகாமி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[4][5]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "நல்ல நல்ல நிலம்" | உடுமலை நாராயண கவி | டி. எம். சௌந்தரராஜன் | 3:39 | |
2. | "என்னம்மா சிங்கார" | அ. மருதகாசி | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 3:34 | |
3. | "இப்படித்தான் இருக்கவேணும்" | உடுமலை நாராயண கவி | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 3:41 | |
4. | "கடவுள் எனும் முதலாளி" | அ. மருதகாசி | டி. எம். சௌந்தரராஜன் | 3:45 | |
5. | "எவரிடத்தும்" | உடுமலை நாராயண கவி | பி. சுசீலா | 3:21 | |
6. | "காதல் எந்தன்" | உடுமலை நாராயண கவி | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 3:45 | |
7. | "விவசாயி விவசாயி" | அ. மருதகாசி | டி. எம். சௌந்தரராஜன் | 4:22 | |
மொத்த நீளம்: |
24.77 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "எம்ஜிஆர் 100". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/blogs/73029-100-12.html. பார்த்த நாள்: 18 September 2024.
- ↑ சுவாமிநாதன், ஸ்ரீதர் (2 March 2016). "எம்ஜிஆர் 100 | 12 - நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!". Hindu Tamil Thisai. Archived from the original on 17 February 2021. பார்க்கப்பட்ட நாள் 17 February 2021.
- ↑ Jeshi, K. (31 August 2021). "Why MGR loved Coimbatore". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220127130849/https://www.thehindu.com/entertainment/movies/readers-of-ithayakkani-a-monthly-magazine-on-mgr-relive-the-icons-illustrious-journey/article36204741.ece.
- ↑ "Vivasayee (1967)". Raaga.com. Archived from the original on 7 September 2012. பார்க்கப்பட்ட நாள் 20 February 2012.
- ↑ "Vivasayi Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Macsendisk. Archived from the original on 5 February 2023. பார்க்கப்பட்ட நாள் 28 September 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1967 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்