நான் ஏன் பிறந்தேன்
| நான் ஏன் பிறந்தேன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | எம். கிருஷ்ணன் |
| தயாரிப்பு | ஜி. என். வேலுமணி (காமாட்சி ஏஜென்சீஸ்) |
| இசை | சங்கர் கணேஷ்[1] |
| நடிப்பு | எம். ஜி. ஆர் கே. ஆர். விஜயா |
| வெளியீடு | சூன் 9, 1972 |
| நீளம் | 4295 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நான் ஏன் பிறந்தேன் (Naan Yen Pirandhen) என்பது 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 1953 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரத்துக்கு தெருவு படத்தின் மறு ஆக்கமாகும். இப்படம் 1972 சூன் 9 அன்று வெளியானது. வணிக ரீதியாக தோல்வியடைந்தது.
கதை
[தொகு]கண்ணனும் சாரதாவும் திருமணமானவர்கள். தன் சகோதரனின் குழந்தைகளை வளர்க்க அவர் பாடுபடுகிறார். தன் குடும்பத்தின் கஷ்டத்தைப் போக்க சென்னைக்கு வேலை தேடி வருகிறார். அவரது நண்பர்கோபலகிருஷ்ணனன் உதவியால் மோகனசுந்தரத்திடம் (மேஜர் சுந்தர்ராஜன்) வேலை கிடைக்கிறது. தனக்கு திருமணத்தை மறைத்து கண்ணன் அந்த வேலையைப் பெறுகிறார். மோகனசுந்தரத்திற்கு ஒரு மகள் இருக்கிறாள். அவர் தன் தாய் இறந்த அதிச்சியிலிருந்து மாள முடியாமல் சர்க்கர நாற்காலியிலே முடக்குவாத நோயாளியாக இருக்கிறாள். ராதா கண்ணனை ஒருதலையாக காதலிக்கிறாள். வேலையை இழக்காமல் அல்லது தன்னனை காதலிக்கும் ராதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் கண்ணன் அந்தச் சூழ்நிலையை சாமர்த்தியமாக கையாளுகிறார் என்பது முக்கிய கதை.
நடிப்பு
[தொகு]- கண்ணனாக ம. கோ. இராமச்சந்திரன்[2]
- சாரதாவாக கே. ஆர். விஜயா[2]
- ராதாவாக காஞ்சனா[2]
- சபாபதியாக நாகேஷ்[2]
- மோகனசுந்தரமாக சுந்தரராஜன்[2]
- பாஸ்கராக தேங்காய் சீனிவாசன்[2]
- ராஜனாக மா. நா. நம்பியார்[2]
- சங்கராக வி. கோபாலகிருட்டிணன்[2]
- மோகனாவாக ஜி. சகுந்தலா[2]
- சின்னமாவாக எஸ். என். லட்சுமி[2]
- கே. ஆர். ரங்கம்மாள்
தயாரிப்பு
[தொகு]நான் ஏன் பிறந்தேன் என்பது 1953 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான பிரத்துக்கு தெருவு என்ற படத்தின் மறு ஆக்கமாகும்.[2] ராமச்சந்திரன் குடும்பம் சார்ந்த வேடத்தில் நடித்த ஒரே படம் இதுவாகும். உரையாடலை வியட்நாம் வீடு சுந்தரம் எழுதினார்.[3] நடிகர் கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராகப் பணிபுரிந்தார்.[4][5]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[6][7]
| எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
| 1 | சித்திரை சோலைகளே | டி. எம். சௌந்தரராஜன் | பாரதிதாசன் | 03:19 |
| 2 | நான் பாடும் பாடல் | டி. எம். சௌந்தரராஜன் | வாலி | 03:29 |
| 3 | நான் ஏன் பிறந்தேன் | டி. எம். சௌந்தரராஜன் | 04:09 | |
| 4 | தலை வாழை | ஜிக்கி, ஜானகி | 04:01 | |
| 5 | தம்பிக்கு (மகிழ்ச்சி) | டி. எம். சௌந்தரராஜன் | அவினாசி மணி | 03:38 |
| 6 | தம்பிக்கு (சோகம்) | எம். எஸ். ராஜேஸ்வரி, | 03:40 | |
| 7 | உனது விழியில் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | புலமைப்பித்தன் | 03:54 |
| 8 | என்னம்மா | டி. எம். சௌந்தரராஜன், கௌசல்யா | வாலி | 04:27 |
வெளியீடு
[தொகு]நான் ஏன் பிறந்தேன் 1972 சூன் 9 அன்று வெளியானது.[8][9] தி இந்துவில் எழுதிய ராண்டார் கை, இந்தப் படம், பிரத்துக்கு தெருவு படத்திற்கு மாறாக, திரையரங்குகளில் 10 வாரங்கள் மட்டுமே ஓடியதால் வணிக ரீதியாக மோசமான தோல்வியாக ஆனது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "வாய்ப்பு தராத தயாரிப்பாளர்... எம்.ஜி.ஆர் செய்த யுக்தி : சங்கர் - கணேஷ் இசை பிரபலமானது இப்படித்தான்!". இண்டியன் எக்சுபிரசு தமிழ். https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-classic-history-about-mgr-shankar-ganesh-movies-2056806. பார்த்த நாள்: 19 September 2025.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 Randor Guy (26 March 2016). "Naan Yean Pirandhen (1972)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 10 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210310113737/https://www.thehindu.com/features/cinema/Naan-Yean-Pirandhen-1972/article14176379.ece.
- ↑ Kolappan, B. (7 August 2016). "Vietnam Veedu Sundaram is no more". தி இந்து இம் மூலத்தில் இருந்து 10 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210310114011/https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Vietnam-Veedu-Sundaram-is-no-more/article14556258.ece.
- ↑ "'ராட்சஷக் கலைஞன்' கமல் 61; 'களத்தூர் கண்ணம்மா' வெளியாகி 61 ஆண்டுகள்". இந்து தமிழ். 12 ஆகத்து 2020. Retrieved 21 சனவரி 2021.
- ↑ Saxena, Prasanth (18 December 2020). "Of human bondage: How Kamal can claim a share of MGR's legacy". The Federal. Archived from the original on 20 April 2021. Retrieved 20 April 2021.
- ↑ "Naan Yen Pirandhen Songs". raaga. Retrieved 2014-06-09.
- ↑ "Naan Yen Pirandhen Songs". tamiltunes. Retrieved 2014-06-09.
- ↑ "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்". Ithayakkani. 2 April 2011. Archived from the original on 14 November 2018. Retrieved 10 March 2021.
- ↑ Sri Kantha, Sachi (27 December 2019). "MGR Remembered – Part 54 | An Overview of the Final 31 movies of 1970s". வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. Archived from the original on 31 October 2020. Retrieved 5 April 2021.
