உள்ளடக்கத்துக்குச் செல்

சன் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சன் டிவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சன் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 14 ஏப்ரல் 1992
11 டிசம்பர் 2011 (உயர் வரையறு தொலைக்காட்சி)
வலையமைப்பு சன் டிவி நெட்வொர்க்
உரிமையாளர் சன் குழுமம்
கொள்கைக்குரல் "நீங்கள் பார்த்து கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை"
நாடு இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
முன்பாக இருந்தப்பெயர் டெலி டிவி இந்தியா (1992–2004)
துணை அலைவரிசை(கள்) சன் லைப்
கே தொலைக்காட்சி
சன் மியூசிக்
சன் செய்திகள்
ஆதித்யா தொலைக்காட்சி
சுட்டித் தொலைக்காட்சி
வலைத்தளம் சன் குழுமம்
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
சன் டைரக்ட்
(இந்தியா)
800 (HD)
011 (SD)
டாட்டா ஸ்கை
(இந்தியா)
1503 (HD)
1504 (SD)
டிஷ் தொலைக்காட்சி & வீடியோகான் டி2எச்
(இந்தியா)
2858 (HD)
2859 (SD)
ஏர்டெல் டிஜிட்டல் டிவி
(இந்தியா)
755 (HD)
754 (SD)
மின் இணைப்பான்
சுமங்கலி கேபிள் விசன்
(சென்னை)
100 (SD)
1000 (HD)
ஆத்வே
(மும்பை)
51 (SD)
ஏசியாநெட் சேட்டிலைட்
(கேரளா)
200 (SD)
கேரளா விசன்
(கேரளா)
61 (SD)
882 (HD)
ஸ்ரீதேவி டிஜிட்டல்
(ஆந்திர பிரதேசம்)
503 (SD)
டிஜிகான்
(தமிழ்நாடு)
901 (HD)
101 (SD)

சன் TV என்பது இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி பொழுதுபோக்கு தொலைக்காட்சியாகவும் உள்ளது. இது சென்னையைச் சேர்ந்த ஊடக நிறுவனமான சன் குழுமத்தின் சன் டிவி நெட்வொர்க்கின் முதன்மை அலைவரிசையாகும். இந்த அலைவரிசை கலாநிதி மாறன் என்பவரால் 14 ஏப்ரல் 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] 09 நவம்பர் 2007 முதல் இலவச தூர்தர்ஷன் டிடிஹெச்'லிருந்து எடுக்கப்பட்டு மாதம் பணம் செலுத்தி பார்க்கும் தொலைக்காட்சிகள் பட்டியலில் சேர்ந்தது. இதன் உயர் வரையறு தொலைக்காட்சி பாதிப்பை 11 டிசம்பர் 2011 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.[2] இந்த தொலைக்காட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் அதிகாரப்பூர்வ ஓடிடி தளமான சன் நெக்ட்ஸ் இல் பதிவு செய்யப்படுகின்றன.

வரலாறு

[தொகு]

சன் குழுமத்தின் முதல் தொலைக்காட்சியாக 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.[3][4][5][6] 2006 ஏப்ரல் 24, இல் மும்பை பங்குச் சந்தையால் அறிவிக்கப்பட்ட பங்குச்சந்தை பட்டியலில் சன் டிவி $133 மில்லியன் டாலர்கள் வருவாய் உயர்ந்தது என அறிவிக்கப்பட்டது.[7] தமிழர்களால் அதிகமாக பார்க்கப்படும் தொலைக்காட்சியில் சன் டிவிக்கு முதல் இடம், அதே தருணம் இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சியில் சன் தொலைக்காட்சி முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிகள்

[தொகு]

இந்த தொலைக்காட்சியில் நாடகத் தொடர்கள், நடன நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், பேச்சு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் போன்ற பல் சுவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றது. 1992 இல் இருந்து இன்று வரை 300 மேல் பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகியுள்ளது.

2000 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து சித்தி, கிருஷ்ணதாசி, ஆனந்தம், அண்ணாமலை, திருமதி செல்வம், கோலங்கள், மெட்டி ஒலி, மைடியர் பூதம், மனைவி, கஸ்தூரி, செல்வி, தென்றல், தங்கம், அரசி, இதயம், மேகலா, சிவசக்தி, நாதஸ்வரம், தெய்வமகள், வாணி ராணி, பொம்மலாட்டம், அழகி, நந்தினி, நாயகி, லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற பல வெற்றி தொடர்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது.

விருதுகள்

[தொகு]

ஓடிடி இயங்குதளம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Menon, Jaya (8 November 2005). "Karunanidhi wife pulls out stake in Sun TV". The Indian Express.
  2. "Sun TV HD launched". bseindia.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2015.
  3. "Sun TV history". Economic Times. http://economictimes.indiatimes.com/sun-tv-network-ltd/infocompanyhistory/companyid-17994.cms. 
  4. Menon, Jaya (8 November 2005). "Karunanidhi pulls out stake in Sun TV". The Indian Express.
  5. Karmali, Naazneen (30 November 2009). "Strong Signal". Forbes. https://www.forbes.com/global/2009/1130/india-richest-09-maran-sun-television-strong-signal.html. பார்த்த நாள்: 8 August 2010. 
  6. "Rediff India Abroad, April 28, 2006 – Kalanithi Maran: A 'Sunshine' story, by Sanjiv Shankaran and S. Bridget Leena in New Delhi". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
  7. Bharatan, Shilpa (27 March 2006). "Variety.com, Monday, April 24, 2006, 6:36pm PT – Sun TV shines on Exchange". Variety. http://www.variety.com/article/VR1117940460.html?categoryid=14&cs=1. பார்த்த நாள்: 24 January 2012. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_தொலைக்காட்சி&oldid=3515075" இலிருந்து மீள்விக்கப்பட்டது