பேச்சு:சன் டைரக்ட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

இக்கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள ஆதாரமுள்ள தகவல்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அதுமட்டுமின்றி போதுமான அளவு நிறை குறைகளுடன் நடுநிலையை கருத்தில் கொண்டே எழுதப்பட்டுள்ளது. அதன்காரணமாக இக்கட்டுரையில் இருந்த {{advert}} வார்ப்புரு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:32, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]

விலை விபரங்கள், மற்றும் இணைக்கப்பட்டுள்ள அலைவரிசைகள் போன்ற விபரங்கள் தேவை தானா? அவற்றை அவர்களின் தளத்திற்கே சென்று அறிந்து கொள்ளத்தக்கதாக வெளி இணைப்பை மட்டும் கொடுத்தால் போதாதா?--Kanags \உரையாடுக 12:57, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]
விலை விபரங்களை குறையாகவே குறிப்பிட்டுள்ளேன். 75- உரூபாய் என்று ஆரம்பித்துவிட்டு தற்போது மூன்று மடங்கு உயர்த்தியுள்ளதாலேயே அதனை குறித்துள்ளேன், அலைவரிசை விபரங்கள் தேவையானதாகக் கருதினேன், ஆங்கில் விக்கியில் இணைத்திருக்கிறார்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:05, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]
போட்டி நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் பற்றிய தகவல் உடனுக்குடன் மாறுதலுக்குட்பட்டவை எனவே நடுநிலையை கருத்தில் கொண்டு பாரபட்சமின்றி சுருக்கமான, பொது தகவல் மட்டும் போதுமானது. --ஸ்ரீதர் (பேச்சு) 13:27, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]
போட்டி நிறுவனமான திசுத் தொலைக்காட்சி கட்டுரையை பார்த்தேன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுடன், இதில் உள்ள குறைகளையும், குறைபாடுகளையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட தகவல்கள், அதிகமாக கருதப்பட்டால், அது குறித்து உரையாடிவிட்டு தேவையான மாற்றங்களைச் செய்ய உடன்படுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:05, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]
சன் டைரக்ட் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சன்_டைரக்ட்&oldid=3491852" இலிருந்து மீள்விக்கப்பட்டது