அனைத்திந்திய வானொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அனைத்திந்திய வானொலி
AIR Logo.jpg
வகை அரசு நிறுவனம்
நாடு இந்தியா
ஒலிபரப்பு வீச்சு தேசிய அளவில்
நிறுவியது இந்திய அரசு
உரிமையாளர் பிரசார் பாரதி
துவக்கப்பட்ட நாள் 1936
இணையதளம் ஆல் இந்தியா ரேடியோ இணையதளம்

அனைத்திந்திய வானொலி அல்லது அகில இந்திய வானொலி (All India Radio, சுருக்கமாக AIR), அலுவல்முறையில் ஆகாஷ்வாணி (தேவநாகரி: आकाशवाणी, ākāshavānī), இந்தியாவின் முதன்மையான அரசுத்துறை வானொலி ஒலிபரப்பு நிறுவனமாகும். 1936ஆம் ஆண்டு அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டு[1] தற்போது தன்னாட்சி வழங்கப்பட்டுள்ள பிரசார் பாரதியின் அங்கமாக விளங்குகிறது.

உலகின் ஒலிபரப்பு நிறுவனங்களில் மிகப்பெரும் பிணையம் உள்ள ஒன்றாகும்.இதன் தலைமையகம் தில்லியில் ஆகாசவாணி பவன் கட்டிடத்தில் இருந்து இயங்குகிறது. இக்கட்டிடத்தின் ஆறாம் தளத்தில் பிரசார் பாரதியின் மற்றொரு அங்கமான ஒளிபரப்பு நிறுவனம் தூர்தர்சன் தலைமையகம் இயங்குகிறது.

சென்னை நிலையம் மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் கடற்கரைக்கு எதிராக அமைந்துள்ளது.

தில்லியில் உள்ள அனைத்திந்திய வானொலி தலைமையகம்
கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள ஓர் அனைத்திந்திய வானொலி கோபுரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. எங்களைப்பற்றி அலுவல்முறை இணையதளம். Retrieved:2008-08-03.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனைத்திந்திய_வானொலி&oldid=2151233" இருந்து மீள்விக்கப்பட்டது